Sunday, October 24, 2004

 

செஸ் அல்ஜீப்ரைக் குறியீடு - ஒரு அறிமுகம்

செஸ் குறியீட்டை விளக்கும் டாக்குமெண்ட் ஒன்றினை அப்லோட் செய்துள்ளேன். டாக்குமெண்ட்டினை உங்கள் டிஸ்க்குக்கு டவுன்லோட் செய்ய இங்கு கிளிக்குங்கள் ( Right கிளிக் மெனுவில் "Save Target As" உபயோகிப்பது உத்தமம்.). PDF வடிவத்தில் இருக்கும் இதனை படிக்க உங்களுக்கு அக்ரோபாட் ரீடர் (Acrobat Reader) செயலி தேவை. இந்த வலைத் தளத்திலிருந்து அதனை டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்.

இந்த PDF கோப்பில் அல்ஜீப்ரைக் நொட்டேஷன் (Algebraic Notation) எனப்படும் செஸ் குறியீடு ஒன்றினை விளக்கியுள்ளேன் ("விளக்க முயற்சித்துள்ளேன்" என்பதே சரின்னு படுது!). அதை படித்து பார்த்து நல்லா இருக்கு இல்லைன்னு ஒரு மறுமொழி போட்டீங்கன்னா உபயோகமா இருக்கும். ஏதாவது தப்பிருந்தாலும் சொல்லுங்க, திருத்திக்கிறேன்.

[UPDATE: PDF டவுன்லோட் ஆக மாட்டேன்னு
அடம் பிடிச்சதுன்னா, இங்கு PDFஐ HTMLஆக மாற்றி போட்டு வைத்துள்ளேன். க்ளிக் பண்ணி படிக்கலாம்.]


Monday, October 18, 2004

 

உலக செஸ் சேம்ப்பியன்ஷிப் - கடைசி சுற்று

சேம்ப்பியன்ஷிப் நேத்து முடிஞ்சது. க்ராம்னிக் தன்னோட உலக சேம்ப்பியன் பட்டத்தை தக்க வச்சிண்டுட்டார். க்ராம்னிக் 7, லீகோ 7. இந்த சேம்ப்பியன்ஷிப் விதிகளின் படி க்ராம்னிக் லீகொவை மேட்ச்சில் ட்ரா பண்ணினாலே போதும். நேத்து லீகோ ரொம்ப நெர்வஸ் ஆயிட்டாருன்னு நினைக்கிறேன். ஆரம்பத்துல நல்லா விளையாடிண்டு இருந்தவரு திடீர்னு ஒரு மோசமான பொசிஷனுக்கு போயிட்டாரு. அந்த மாதிரி பொசிஷன்ல க்ராம்னிக், நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, ஒரு மெஷின் கணக்கா ஆடுவாரு! கடைசில க்ராம்னிக் லீகோவை இன்னும் இரண்டு மூவில் ஆட்டம் காலியாயிடும்ன்ற நிலைமைக்கு கொண்டுவந்துட்டார்.

ஆனா, ஒரு விஷயத்துக்காக லீகோவை பாராட்டியே ஆகணும். 2000ல கேஸ்பரோவ்னால பண்ண முடியாதத லீகோ பண்ணிருக்காரு. கேஸ்பரோவ்னால க்ராம்னிக்கோட டிஃபன்ஸை உடைக்க முடியலை. ஒரு ஆட்டம் கூட கேஸ்பரோவ் ஜெயிக்கலைன்னா பாருங்க. ஆனா, லீகொ சுலபமாக க்ராம்னிக்கோட ஸ்கோரை சமன் செஞ்சுட்டார். அதுவே அவருக்கு பெரிய வெற்றிதான். 25 வயசுத்தான் ஆகுது லீகோவுக்கு (இப்போதான் அவரோட பிறந்த தேதி பார்த்தேன், என்னைய விட 4 மாசம் சின்ன பையன்.). இன்னும் குறைஞ்சது 20 வருஷமாவது விளையாடுவாரு. So, அடுத்த சேம்ப்பியன்ஷிப்ல அவரு ஜெயிக்க வாழ்த்துவோம்.

இன்னொரு விஷயம் என்னன்னா, இந்த மாதிரி கடைசி ஆட்டத்துல ஜெயிச்சே ஆகணும்ன்ற ஒரு கட்டாயம் வந்தபோது இதுக்கு முன்னாடி மூணு பேருதான் அதை பண்ணிருக்காங்க - லாஸ்கர், பாட்வினிக் & கேஸ்பரோவ். கடைசி ஆட்டத்துல ஜெயிச்சு க்ராம்னிக்கும் இவங்க வரிசைல சேர்ந்துட்டார்.

Saturday, October 16, 2004

 

உலக செஸ் சேம்ப்பியன்ஷிப் - 13ஆம் சுற்று

ஆட்டம் ரொம்ப விறுவிறுப்பா போயிண்டிருக்கு. இந்த ஆட்டத்தில் க்ராம்னிக் ஜெயிச்சே ஆகணும். அதனால க்ராம்னிக் ஒரு பயங்கர ஷார்ப் ஓப்பனிங் பண்ணினாரு. லீகோவும் "வாப்பா, நீயா நானான்னு பார்த்துடலாம்"னு சொல்லி நல்லா விளையாடிண்டு இருக்காரு. ஆரம்பத்துல லீகோ ஒரு நல்ல பொசிஷன்ல இருந்த மாதிரி இருந்தது. திடீர்னு ஒரு ட்ரா வேரியேஷன்ல எங்கயோ பண்ணின தப்பான ஒரு கணக்குனால க்ராம்னிக்குக்கு அட்வான்டேஜை குடுத்துட்டாரு. லீக்கோவுக்கு இப்பொ வயித்த கலக்கிண்டு இருக்கும்னு நினைக்கிறேன் (அதுக்காக க்ராம்னிக் சிரிச்சிண்டு இருக்காருன்னு இல்லை!). 52 மூவ்கள் முடிஞ்சிருக்கு...இந்த மாதிரி கடைசி நேரங்களில் க்ராம்னிக் கடவுள் மாதிரி. பார்ப்போம் லீகோனால இந்த ஆட்டத்தை ட்ரா பண்ண முடியுதான்னு...ஆண்டவா, லீகோவை காப்பாத்துப்பா...

சொல்ல மறந்துட்டேனே...http://www.chess.fm வலைத்தளத்தில் இந்த ஆட்டத்தின் நேரிடை வர்ணனை கேட்கலாம்.


[Update: ஆட்டம் ட்ரா...லீகோ கலக்கிட்டாரு!!]

Wednesday, October 13, 2004

 

உதவி please...

அனைவருக்கும்,

பல இடங்களில் என்னால் ஆங்கில வார்த்தைகளை தவிர்க்க முடியவில்லை. சில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் வார்த்தை கிடைக்காமல் திணறியிருக்கேன், சில வார்த்தைகளை த்மிழாக்கம் பண்ணியவுடன் எனக்கே நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரியாமல் போயிற்று.

ஏதாவதொரு வார்த்தையை நான் தமிழாக்கம் பண்ணியிருக்க வேண்டும் அல்லது இன்னும் சரியானதொரு தமிழ் சொல்லை உபயோகித்திருக்கலாம் என்றோ நீங்கள் நினைத்தால் தயவிட்டு எனக்கோர் மின் - அஞ்சல் அனுப்புங்கள். எனது மின் - அஞ்சல் முகவரி kannanmr AT yahoo DOT com. பின்னுட்டம் போட்டாலும் சரி.

மிக்க நன்றி.


 

உலக செஸ் சேம்ப்பியன்ஷிப் - 11ஆம் சுற்று

நேற்று நடந்த ஆட்டமும் ட்ராவில் முடிஞ்சுருச்சு. 17 மூவ்களுக்கு பிறகு "சரி, இன்னிக்கு இது போதும்!"னு பேசிண்ட மாதிரி இரண்டு பேரும் எழுந்து போயிட்டாங்க.. இன்னும் 3 ஆட்டம்தான் இருக்கு. லீகோ இப்பொ 6 புள்ளிகள் (ரொம்ப யோசிக்க வேண்டியதா போச்சு "points"க்கு!!) எடுத்துருக்காரு. இன்னும் 1.5 பாயிண்ட்ஸ் எடுக்கணும். ஆனா, அவருக்கு பிரச்சினை என்னன்னா, க்ராம்னிக் மீதியிருக்கிற 3 ஆட்டத்துல 2 ஆட்டம் வெள்ளை காய்களை வச்சிருப்பாரு. இது வரைக்கும் லீகோ கறுப்பு காய்களை வச்சிண்டு நல்லாவே விளையாடிருக்காரு...க்ராம்னிக் என்ன பண்ண போறாருன்னு பார்ப்போம்..

கீழ நான் கொடுத்திருக்கிறது நேற்று நடந்த ஆட்டம்தான்...PGN என்ற குறியீட்டில் இருக்கு. இந்த PGN குறியீட்ட எப்படி படிக்கறதுன்னு நான் அடுத்த பதிவுல சொல்றேன். இந்த ஆட்ட குறியீட்டை நீஙக WinBoard செயலியை உபயோகிச்சு விளையாடி பார்க்கலாம்.

(Winboard என்பது விண்டோஸிலோ, லீனூக்ஸ் போன்ற மற்ற யூனிக்ஸ் வகையறாக்களிலோ இயங்க கூடிய ஒரு செயலி. இதை உபயோகித்து உஙகள் கம்ப்யூட்டருடன் நீங்கள் செஸ் விளையாடவோ, எற்கனவே விளையாடி PGNஆக சேமித்து வைத்திருக்கும் ஆட்டங்களை பார்க்கவோ முடியும்.)

கீழே "{இங்கு ஆரம்பித்து}" என்ற இடத்திலிருந்து "{இங்கு வரை}" இடம் வரை Winboardல் வெட்டி ஒட்டுக. இடது/வலது திசை சாவிகளை (Arrow Keys) உபயோகித்து முழு ஆட்டத்தையும் காணலாம்..

லீகோ - க்ராம்னிக்
(ஆட்டம் 11), 2004

{இங்கு ஆரம்பித்து}
1.d4 Nf6 2.c4 e6 3.Nf3 b6 4.g3 Ba6 5.Qa4 Bb7 6.Bg2 c5 7.dxc5 Bxc5 8.0-0 0-0 9.Nc3 Be7 10.Bf4 a6 11.Rfd1 d6 12.Qc2 Qc7 13.Rac1 Rd8 14.Qd2 Nh5 15.Bg5 Nf6 16.Bf4 Nh5 17.Bg5 Nf6 ½-½
{இங்கு வரை}

Tuesday, October 12, 2004

 

செஸ் கற்க உதவும் சில வலைத்தளங்கள்

இணையம் வந்தாலும் வ்ந்தது, எல்லாத்தையும் தூக்கி "இந்தா வச்சிக்கோ"ன்னு ஆன்லைனில் போட்டுட்டாங்க... Information Overloadனு இதை சொல்வாங்க; எதை படிக்கிறது, எதை விடறதுன்னு குழம்பி எதையுமே படிக்காம போறதுதான் "Information Overload" :)

செஸ் பயில் குறிப்புகளும் அப்படியே. ஏகப்பட்டது இருக்கு. அதுல சில சுட்டிகளை இங்கே கொடுத்துருக்கேன்.

http://www.ex.ac.uk/~dregis/DR/coaching.html
இது எக்ஸீட்டர் செஸ் மன்றத்தினுடையது. நம்ப விச்சுவுக்கும் (அதாங்க, Vishwanathan Anand என்கிற Vishy!) ரொம்ப பிடித்த வலைத்தளம். என்னுடைய favoriteம் இதுதான்.

http://www.logicalchess.com/resources/lessons/
நிறைய நல்ல விசயங்கள் இருக்கு இங்க. ஆரம்ப நிலையிலிருந்து master வரைக்கும் அனைவருக்கும் பயனளிக்ககூடியதுன்னு இது சொல்லிண்டாலும், அந்த அள்வுக்கு இதில் விஷயமில்லை எனபதே உண்மை.

http://chess.about.com/
இந்த About.com வலைத்தளத்தில் ஏகப்பட்ட செஸ் சொல்லித்தரும் பக்கங்கள் இருக்கு. ஆனா எல்லாமே நல்லா இருக்கும்னு சொல்ல முடியாது...அதே மாதிரி ஏகத்துக்கு விளம்பரங்கள் போட்டு எரிச்சலை கிளப்பிடுவாங்க..

http://www.jaffnalibrary.de/tools/chess1.html
இது நம்ப சுரதாவினுடையது. மிக அழகாக Macromedia Flash உபயோகிச்சு பண்ணிருக்கார்.

http://www.chathurangam.com/learnchess/lesson01n.asp
இது நம்ப சதுரங்கம் வலைத்தளத்தோடது. நீங்க ஏற்கனவே செஸ் விளையாடிருந்தா, இதை வெறும் referenceகாக வச்சிக்கங்க. இந்த வலைப்பக்கத்திலே மற்ற lessonsகளுக்கு போவதற்கும் சுட்டிகள் உள்ளன.


 

உலக செஸ் சேம்ப்பியன்ஷிப்

பீட்டர் லீகோவும் விலாடிமீர் க்ராம்னிக்கும் உலக செஸ் சேம்பியன்ஷிப் ஒன்றுக்காக விளையாடிண்டுருக்காஙக. இது வரை 10 ஆட்டங்கள் முடிஞ்சுருக்கு. லீகோ 5.5யும் க்ராம்னிக் 4.5யும் எடுத்துருக்காஙக. இன்னும் 4 ஆட்டம் இருக்கு. போற போக்கை பார்த்தா க்ராம்னிக் அண்ணன் மண்ணை கவ்விருவார்னு நினைக்கிறேன். க்ராம்னிக் 2000ல தலைவர் கேஸ்பரோவை தோற்கடிச்சு இந்த சேம்பியன் பட்டத்தை வாங்கினாரு...இவங்கள்ள (லீகோ - க்ராம்னிக்) யாரு ஜெயிக்கிறாங்களோ அவஙக கேஸ்பரோ - காசிம்ட்ஜனோவ் போட்டில ஜெயிக்கிறவங்களோட ஆடணும்.

ஒரு கூத்து என்னன்னா, இந்த காசிம்ட்ஜனோவ் உலக ஆட்டக்காரர்கள் வரிசையில் 47ஆம் இடத்தில இருக்காரு, கேஸ்ப்பரோவோ முதலாம் இடத்தில. "கேணத்தனமா இருக்கே"ன்னு நினைக்காதீஙக.. காசிம்ட்ஜனோவ் ஒரு நாக்-அவுட் ஆட்டத்தில் பல பெரிய தலைங்களையும் ஜெயிச்சுட்டுதான் இதுக்கு தேர்வு ஆயிருக்கிறாரு...

ஒரு சின்ன துணுக்கு - நம்ப ஊரு சசிகிரண் 35ஆம் இடத்துல இருக்காரு. அந்த நாக்-அவுட் (இதுக்கு என்ன தமிழ் வார்த்தை?) ஆட்டத்தில் முதலாம் சுற்றிலயே நாக்-அவுட் ஆயிட்டாரு :)

உலக செஸ் சேம்பியன்ஷிப் தொடக்கப் பக்கத்தின் இணைப்பு


Monday, October 11, 2004

 

சதுரங்கம் - The Royal Game

செஸ் விளையாட்டு பற்றிய செய்திகளை இங்கு உடனுக்குடன் படிக்கலாம் மற்றும் விவாதிக்கலாம். செஸ்ஸின் பெரும் ரசிகன் நான். கிரிக்கெட் புகழ் பெற்ற அளவு செஸ்ஸிற்க்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாதது வருந்ததக்கது என்றாலும் இரண்டு விஷயங்கள் ஊக்கமளிப்பதாக உள்ளது.

1) விஸ்வநாதன் ஆனந்த் - இவர் விளையாட ஆரம்பித்த பொழுது இவருக்கு விளம்பரதாரர் உதவி இல்லை, ஒழுஙகான பயிற்சியளிப்பவர் இல்லை, ஆனாலும் இன்று உலக தலை சிறந்த ஆட்டகாரர்களில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்.

2) இணையம் - இது மட்டும் இல்லாமல் போயிருந்தால் நான் எங்கு செஸ் பற்றி பேசுவதாம்?

"ஆனந்த் இரண்டாம் இடம் என்றால் யார் முதல் இடம்?" -- அடுத்த போஸ்டில் பதில் சொல்கிறேன்.

The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?