Sunday, July 02, 2006

 

நன்றி பாஷா இந்தியா!

நான் இங்க blog பண்ணி இன்னியோட கிட்டத்தட்ட ஆறு மாசமாச்சு! செஸ் டோர்னமெண்ட்லாம் நடந்துண்டுதான் இருக்கு, என்னாலத்தான் அதை ஃபாலோ பண்ணவும் முடியலை, இங்க அதை பத்தி ஒண்ணும் எழுதவும் முடியலை. இதோட திடீர்னு ஒரு வீடு ஒண்ணு வாங்கலாம்னு வேற ஒரு வேண்டாத ஆசை, அதுக்காக அங்கயும் இங்கயும் அலைஞ்சுண்டு இருக்கேன். ஆனா ஒண்ணுங்க, வீட்டை கட்டி பார்க்கறது மட்டும் இல்லை, வீடு வாங்கறதும் ஒரு tedious வேலைதான்.

இதுக்கெல்லாம் நடுவுல ஒரு நாள் Blogger-ல இருந்து ஒரு மெயில். என்னடான்னு பார்த்தா வவ்வால்னு ஒருத்தர் என்னைய congratulate பண்ணியிருந்தாரு. கொஞ்ச நேரத்துக்கு எனக்கு தலையும் புரியலை, காலும் புரியலை. ஏதோ spam-மோன்னு நினைச்சேன் முதல்ல, அப்புறம் "அட வெட்டி, spam போடறவன் எதுக்கு இவ்வளவு பொறுமையா நல்ல தமிழில் வேற அடிச்சு time வேஸ்ட் பண்ண போறான்?"-னு தோண, பொறுமையா அந்த கமெண்ட்டை இன்னொரு தடவை படிச்சேன்.

வாழ்த்துகள்!சிரில் அலெக்ஸ் பதிவில் பார்த்தேன் பாஷா இந்தியாவின் சிறந்த தமிழ் வலைப்பதிவு(sports) என தேர்வு பெற்றதை.மேலும் பல சாதிக்க வாழ்த்துகள்


யாரு சிரில் அலெக்ஸ்? ரொம்ப நாளாச்சா நான் Blogsosphere விட்டு போய், அதுனால எனக்கு டக்குன்னு ஒண்ணும் ஞாபகம் வரலை! அப்புறம் மெதுவா தேன் ஞாபகம் வநதது! அங்க அவர் பாஷா இந்தியாவில் பரிசு பெற்ற தமிழ் வலை பதிவுகள்னு ஒரூ post போட்டுருக்காரு, அதை படிச்ச பிறகுதான் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது - "ஓகே, யாரும் என்கிட்ட விளையாடலை, வவ்வால் நிஜமாவேதான் சொல்லிருக்காரு போலருக்கு"-ன்னு!!

இதுக்கப்புறம்தான் நான் பாஷா இந்தியா சைட்டுக்கு போய் இந்த contest பத்தி தெரிஞ்சிண்டேன். இந்த contest-க்கு யார் என்னைய nominate பண்ணினாங்கன்னு தெரியலை, எப்படி எனக்கு இந்த அவார்ட்டை கொடுத்தாங்கன்னும் தெரியலை!! என்னைய நாமினேட் பண்ணினவருக்கு ரொம்ப தேங்க்ஸ்! சிறிலுக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ்!

இப்போ ப்ராப்ளம் என்னன்னா, என்னால பாஷா இந்தியாவில் இருக்கும் யாரையும் contact பண்ண முடியலை! இமெயிலுக்கும் பதிலில்லை, Forum-லயும் போஸ்ட் பண்ண முடியலை, இதுனால எப்படி அந்த அவார்டை கலெக்ட் பண்ணிக்கறதுன்னு தெரியலை!! என்னமோ போங்க!
The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?