Wednesday, October 13, 2004

 

உலக செஸ் சேம்ப்பியன்ஷிப் - 11ஆம் சுற்று

நேற்று நடந்த ஆட்டமும் ட்ராவில் முடிஞ்சுருச்சு. 17 மூவ்களுக்கு பிறகு "சரி, இன்னிக்கு இது போதும்!"னு பேசிண்ட மாதிரி இரண்டு பேரும் எழுந்து போயிட்டாங்க.. இன்னும் 3 ஆட்டம்தான் இருக்கு. லீகோ இப்பொ 6 புள்ளிகள் (ரொம்ப யோசிக்க வேண்டியதா போச்சு "points"க்கு!!) எடுத்துருக்காரு. இன்னும் 1.5 பாயிண்ட்ஸ் எடுக்கணும். ஆனா, அவருக்கு பிரச்சினை என்னன்னா, க்ராம்னிக் மீதியிருக்கிற 3 ஆட்டத்துல 2 ஆட்டம் வெள்ளை காய்களை வச்சிருப்பாரு. இது வரைக்கும் லீகோ கறுப்பு காய்களை வச்சிண்டு நல்லாவே விளையாடிருக்காரு...க்ராம்னிக் என்ன பண்ண போறாருன்னு பார்ப்போம்..

கீழ நான் கொடுத்திருக்கிறது நேற்று நடந்த ஆட்டம்தான்...PGN என்ற குறியீட்டில் இருக்கு. இந்த PGN குறியீட்ட எப்படி படிக்கறதுன்னு நான் அடுத்த பதிவுல சொல்றேன். இந்த ஆட்ட குறியீட்டை நீஙக WinBoard செயலியை உபயோகிச்சு விளையாடி பார்க்கலாம்.

(Winboard என்பது விண்டோஸிலோ, லீனூக்ஸ் போன்ற மற்ற யூனிக்ஸ் வகையறாக்களிலோ இயங்க கூடிய ஒரு செயலி. இதை உபயோகித்து உஙகள் கம்ப்யூட்டருடன் நீங்கள் செஸ் விளையாடவோ, எற்கனவே விளையாடி PGNஆக சேமித்து வைத்திருக்கும் ஆட்டங்களை பார்க்கவோ முடியும்.)

கீழே "{இங்கு ஆரம்பித்து}" என்ற இடத்திலிருந்து "{இங்கு வரை}" இடம் வரை Winboardல் வெட்டி ஒட்டுக. இடது/வலது திசை சாவிகளை (Arrow Keys) உபயோகித்து முழு ஆட்டத்தையும் காணலாம்..

லீகோ - க்ராம்னிக்
(ஆட்டம் 11), 2004

{இங்கு ஆரம்பித்து}
1.d4 Nf6 2.c4 e6 3.Nf3 b6 4.g3 Ba6 5.Qa4 Bb7 6.Bg2 c5 7.dxc5 Bxc5 8.0-0 0-0 9.Nc3 Be7 10.Bf4 a6 11.Rfd1 d6 12.Qc2 Qc7 13.Rac1 Rd8 14.Qd2 Nh5 15.Bg5 Nf6 16.Bf4 Nh5 17.Bg5 Nf6 ½-½
{இங்கு வரை}

Comments:
வாங்க. நல்லா கட்டம் போடறீங்க. க்ராம்னிக் கொஞ்சம் ஓவரா வீட்டுப் பாடத்த நம்பிட்டாரு. நீங்க பாட்டுக்கு Winboardல் வெட்டி ஒட்டுக சொல்லிட்டா Winboard தெரியாதவங்க என்ன பண்றது. எங்கயாவது இணையத்தில் விளையாடுவீங்களா? நான் fics இல் ஆடுறதுண்டு.

navan
http://www.navan.name.blog
 
நவன் (நவீன்?), அந்த "வெட்டி/ஒட்டு" அடிக்கிறதுக்கு முன்னாடி நானும் இதை யோசிச்சேன். சரி, ஒண்ணும் குழப்பமாகாதுன்னு நினைச்சு அப்போ விட்டுட்டேன். இப்போ, இன்னும் கொஞ்சம் Winboard பத்தி விளக்கம் கொடுத்திருக்கேன். பின்னால சில ஆர்ட்டிகிள்ஸ் எழுதும்போது இன்னும் விரிவா பார்க்கலாம். என்ன சொல்றீங்க?

நான் Playchess.comலதான் விளையாடிண்டு இருந்தேன்...இப்ப செஸ்ஸ follow பண்றதோட சரி. வீட்ல அப்பப்ப யாராவது இனா வானா மாட்டினா கூப்பிட்டு வச்சு ஜெயிச்சுக்கறது :)
 
Post a Comment

<< Home
The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?