Monday, January 31, 2005

 

லீகோ - கோரஸ் 2005 சேம்ப்பியன்

Thx TWIC

போன வருஷம் ஆனந்த் அரை பாயிண்ட் வித்தியாசத்தில் ஜெயிச்சாரு, இந்த தடவை அதே மாதிரி லீகோ ஜெயிச்சிருக்கார். Much deserved victory! இந்த டோர்னமெண்ட்டில மட்டும் இல்லை, போன வருஷம் விளையாண்ட எல்லா டோர்னமெண்ட்டிலும் மனுஷன் பயங்கர solid-டாத்தான் விளையாண்டாரு, ஆனாலும் இப்போதைக்கு இவர்தான் பயங்கர ஸ்ட்ராங் ப்ளேயர்னு சொல்ல முடியாது. கேஸ்பரோவ், ஆனந்த், க்ராம்னிக், லீகோ & டோப்பலோவ் மட்டும் ஒரு ரவுண்ட் ராபின் விளையாண்டாங்கன்னா எப்படி இருக்கும்!?? இந்த மாதிரி ஒரு டோர்னமெண்ட்டில் லீகோ இங்க கோரஸ்ல விளையாண்ட மாதிரி விளையாடி வின் பண்ணறதுதான், I think, அவர் பெஸ்ட்னு ப்ரூவ் பண்ணறதுக்கு ஒரே வழி. ஆனா, எனக்கென்னமோ அந்த டோர்னமெண்ட்டில் லீகோ வின் பண்ணுவார்னு தோணலை.

க்ராம்னிக் - மோரோசெவிச் 11 மூவில் ரொம்ப சிம்பிளா ட்ரா பண்ணிண்டுட்டாங்க. ஆனந்த் - சொகலோவ், ஒரு அல்ட்ரா ட்ராயிஷ் லைன். சொகலோவ் ஏதாவது தப்பு பண்ணினால் மட்டுமே முழு பாயிண்டுக்கு ஆடறது, இல்லைன்னா அரை பாயிண்ட்டாவது எடுத்துடறதுன்றதுதான் ஆனந்த்தோட ஐடியா. கடைசி வரைக்கும் சொகலோவ் எதுவும் வாய்ப்பே கொடுக்காம ஆனந்தை கவுத்துட்டார். Loek Van Wely - Short 1-0. ஷார்ட், அவர் எதிர்பார்த்த மாதிரியே, -2க்கு போயிட்டார்!

Final Standings
Thx Chessbase

Linares-ல கேஸ்பரோவ், ஆனந்த், லீகோ, டோப்பலோவ், ஆடம்ஸ், காஸிம்ஜனோவ், பொன்ஸ் வேயியொ (Vallejo) விளையாடறாங்க. இதுல லீகோவோட ஆட்டம் எப்படி இருக்குன்னு பார்ப்போம்!

ஜெயிச்சதுக்கு அப்புறம் லீகோ ஒரு பேட்டில பேசியிருக்கறது நவன் சொன்ன மாதிரி கொஞ்சம் ஓவர்தான். "ஆனந்த் க்ளாசிக்கல் செஸ்ல வீக்"னு எதுக்கு டையலாக் விட்டார்னு தெரியலை. ஆனந்த் இதுக்கு பதில் சொல்ற மாதிரி லினாரஸ்ல லீகோவை ஒரு குத்து குத்துவாரா, இல்லை சிம்பிளா ட்ரா பண்ணிண்டு போயிடுவாரான்னு பார்க்கணும்.

Saturday, January 29, 2005

 

Wijk Aan Zee - Rd 11

லீகோ லீடிங் பொசிஷனுக்கு போயிட்டார். நிச்சயம் இந்த தடவை அவர் டைட்டிலை வின் பண்ணிடுவார் போலத்தான் இருக்கு. ஆனந்த் இன்னிக்கு ஆடம்ஸை தோக்கடிச்சு, லீகோ டோப்பலோவ்கிட்ட தோத்து போனாத்தான் ஆனந்த் முதல் பொசிஷனுக்கு போக முடியும். ஆனாலும், லீகோ ஆனந்தை தோக்கடிச்சனால டைட்டில் அவருக்குத்தான் போகும்னு நினைக்கிறேன். இது வரைக்கும் லீகோ பயங்கர இம்ப்ரெஸிவ்வா விளையாடிண்டுருக்கார், கிட்டத்தட்ட எல்லா ஆட்டங்களிலும் ஓப்பனிங்ல இருந்து அட்வாண்டேஜோடத்தான் வெளியே வந்திருக்கார். நேத்து Bruzon பாவம், லீகோகிட்ட ஒரு Ruy Lopez ஆரம்பிச்சு 25 மூவில் தோத்துப்போனார். ஆனந்த் என்னமோ ட்ரா பண்ணனும்னே விளையாடின மாதிரி இருந்தது, போல்கரோட. போல்கரும் ஒண்ணும் ரொம்ப கஷ்டப்படுத்திக்கலை, ஆனந்தை கஷ்டப்படுத்தவும் இல்லை. ஆனந்த், I think, "என்ன வேணும்னாலும் நடக்கட்டும்! நான் முதல் பொசிஷன் ரேசில் இல்லை"னு முடிவு பண்ணிட்ட மாதிரி தெரியுது. அட்லீஸ்ட், இன்னிக்கும் நாளைக்கும் அவர் ஜெயிச்சாருன்ன நல்லா இருக்கும்.

க்ராம்னிக்கும் க்ரிஷ்சக்கும் விளையாண்ட ஆட்டம் பயங்கர complex. வழக்கம் போல, அந்த complicationல இருந்து க்ராம்னிக்தான் ஒரு வின்னிங் எண்ட்கேம்க்கு வெளியே வந்தார், ஆனா க்ரிஷ்சக் என்னமோ பண்ணி அதை ட்ரா பண்ணிட்டார். எனக்கும் இந்த எண்ட்கேமுக்கும் ரொம்ப தூரம்ன்றனால நான் அதை புரிஞ்சுக்க ட்ரை கூட பண்ணலை. ஷார்ட் Ponomariov-க்கு எதிரா ஒரு அருமையான சான்ஸை மிஸ் பண்ணினார், நல்ல அட்வாண்டேஜ் பொசிஷனில் இருந்து ஒரு சின்ன தப்புனால முழு பாயிண்டை விட்டார். Pono விளையாடறதை பார்த்தா ஆச்சரியமா இருக்கு. அவரோட ஒப்பனிங் லைன்கள் எல்லாமே இது வரைக்கும் ஒண்ணும் ஒழுங்கா இல்லை; Is he trying to hide his opening ideas?? எதுக்கு இப்போ போய் மறைக்கணும், ஒரு வேளை க்ராம்னிக் சஜெஸ்ட் பண்ணின ஒரு 4-ப்ளேயர்ஸ் ரவுண்ட் ராபின் நடக்கும்னு நினைக்கறாரோ என்னமோ! டோப்பலோவும் ஷார்ட் மாதிரி ஒரு நல்ல பொசிஷனில் இருந்து சில தப்பான மூவ்களால் சொகலோவை தப்பிக்க விட்டார். ஸ்விட்லர் -மொரோசவிச்சும் பயங்கர இண்ட்ரெஸ்டிங்கா இருந்தது. மொரொசவிச் அவரோட பழைய form-க்கு வந்துட்டார், ஆனாலும் இன்னும் இரண்டு ரவுண்ட்தான் இருக்குன்ற நிலைமையில ஒரு useம் இல்லை.

க்ரூப் Bல கர்யாகின் க்ளியர் லீடிங். மெமட்யாரோவ்வை செபாரினோவ் தோக்கடிச்சார். அடுத்த வருஷம் க்ரூப் Aக்கு கர்யாகின் நிச்சயம். க்ரூப் C ல நம்ப பரிமராஜன் நெகிக்கு இன்னொரு பாயிண்ட் கிடைச்சது.

TWIC report @ http://www.chesscenter.com/twic/event/wijk05/r11.html


Friday, January 28, 2005

 

Puzzle 12


Puzzle 12. Black has just played Nf4. What is White's best move now?

Puzzle 11. சரியான விடை

Thursday, January 27, 2005

 

Puzzle 11


Puzzle 11. White has just played Rxg3. What is Black's best reply?

Puzzle 10 - சரியான விடை


 

Wijk Aan Zee (Catch up)

Wow!! இந்த வருஷ Wijk Aan Zee டோர்னமெண்ட் இவ்வளவு தூரம் இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும்னு யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. டாப் ப்ளேயர்ஸ் எல்லாரும் குடுமிபிடி சண்டை போட்டுக்காத குறை! ஆரம்பத்துல ஆனந்த் சுத்தமா form-லயே இல்லாத மாதிரி இருந்தது. இப்ப தொடர்ச்சியா ஒரு 3 வின்னுக்கு அப்புறம் ஜாயிண்ட் செகண்ட். இரண்டாவது ரவுண்டில் 20 மூவில் தோற்றுப்போன க்ராம்னிக் அடுத்து Sokolov-வை படு நீட்டா விளையாடி தோக்கடிச்சாரு. லீகோ அவரோட வழக்கமான solid styleலில் விளையாடிண்டு இருக்காரு. இரண்டாவது ரவுண்டில் ஆனந்த் இவர்கிட்ட self-destruct பண்ணிக்காம இருந்திருந்தார்னா இப்போ ஆனந்தும் first பொசிஷனில் இருந்திருக்கலாம். ஸ்விட்லர் சுத்தமா form-ல இல்லை, ஏழாவது ரவுண்ட்ல Loek van Welyஐ தோக்கடிச்சதை பார்க்கும்போது லேசா form-க்கு வந்த மாதிரி இருக்கு. Bruzonனுக்கு இது ஒரு நல்ல டோர்னமெண்ட்டா ஆயிண்டு இருக்கு, நேத்து Sokolov-வை தோக்கடிச்சிருக்கார். நான் முன்னாடியே சொன்ன மாதிரி Short 2700 லெவல்ல இருந்து இறங்கிட்டாரு. ஆனாலும் Morozevichசோட அவர் விளையாண்ட கேம் கலக்கல்!! அந்த 41) Qf4!! மூவ் டிபிக்கல் Short. ஆட்டத்தை Short finish பண்ணின விதம் மிக அருமை. லீகோகிட்ட தோத்தபிறகு அவர் "நான் -2லதான் இருப்பேன்னு நினைச்சேன், அதனால any result other than -2 would be a success"னு பயங்கர டெக்னிக்கா பேட்டி கொடுத்துட்டார்.

Morozevich நிச்சயம் 20 பாயிண்டுக்கு மேலே விட போறாரு, இந்த டோர்னமெண்ட் முடிவுல. வரிசையா 4 ஆட்டம் தோத்திருக்காரு, ஏதோ போல்கரை தோக்கடிச்சு முதல் +1 எடுத்தார், அதுக்கப்புறம் Sokolovவை Albin counter gambit விளையாடி தோக்கடிச்சார். சொகோலோவ் பாவம். ஆனந்தோட அவர் விளையாண்ட ஆட்டத்தில், மொரொசெவிச் சரியா விளையாடிருந்தா ஆனந்தை பயங்கரமா pressure பண்ணியிருந்திருக்கலாம், ஆனா என்னமோ மாதிரி விளையாடி அந்த ஆட்டமும் தோத்தாரு. ஆனந்துக்கு லக்குன்னுதான் சொல்லணும், ஏன்னா இது வரைக்கும் அவரு ஜெயிச்ச மூணு ஆட்டங்களும் அவர் அப்படியே பயங்கர ஆனந்த் levelல விளையாடலை, opponents நிறையா ஹெல்ப் பண்ணியிருக்காங்க. நேத்து Loek Van Wely-யோட ஒரு ஜெயிக்கிற பொசிஷனில் ஒரு 2 மூவ் தப்பா விளையாடி ஆனந்த் ட்ரா பண்ணினதை நம்பவே முடியலை.இத்தனைக்கும் ஆனந்த்துக்கு மூணு pawn அட்வாண்டேஜ்!! சமீபத்தில் ஆனந்த் இந்த மாதிரி ஒரு அல்வா பொசிஷனை (அவருக்கு!) ட்ரா பண்ணின மாதிரி எனக்கு ஞாபகம் இல்லை. ஆனந்துக்கு நேத்து கனவுல எல்லாம் அந்த 30) Qg4? மூவ் வந்து எரிச்சலை கிளப்பிருக்கும்னு நினைக்கிறேன்.

ஆனந்த் இன்னும் டோப்பலோவோட விளையாடணும், அந்த ஆட்டம் என்ன ஆகும்னே சொல்ல முடியாது. ஆனந்தே ஒரு தடவை "நான் டோப்பலோவோட விளையாடும்போது ரொம்ப uncomfortableலா feel பண்ணுவேன்"னு சொல்லியிருக்கார். அதுவும் டோப்பலோவ் நல்ல formல வேற இருக்காரு, க்ராம்னிக்கை எப்படி 20 மூவில் ஒரு குத்து குத்தினாரோ அதே மாதிரி Bruzonனை ஒரு கலக்கல் அட்டாக்கிங் கேம் விளையாடி தோக்கடிச்சார். Very impressive. என்னமோ "நான் டாப் 3க்கு சரியான ஆள்"னு டோப்பலோவ் prove பண்ணற மாதிரி இருக்கு. ஆனா நேத்து ஒரு சமமான பொசிஷனில் இருந்து, ஒரு சின்ன calculation தவறினால் ஒரு piece விட்டு கடைசில ஒரு முழு பாயிண்டையும் போல்கருக்கு கொடுத்தார். மனுஷன் நிச்சயம் நொந்து போயிருப்பார். இந்த வெறில இனிமே வர ஆட்டங்கள்ல ஒரு கலக்கு கலக்கவும் வாய்ப்பிருக்கு. சரி, டோப்பலோவ் எப்பவும் இப்படிதான்னு விட்டுடலாம், ஆனா இந்த Ponomariov திடீர்னு அன்னிக்கு க்ராம்னிக்கை ஒரு கலக்கு கலக்கிட்டாரு. க்ராம்னிக்கோட ஸ்ட்ராங் பாயிண்ட்டான Sveshnikovல ஒரு Pawn sacrifice பண்ணி ஒரு பயங்கர அட்டாக் ஒண்ணு ஆரம்பிச்சாரு, இதுல ஒரு Rook sacrifice வேற. க்ராம்னிக் பொறுமையா யோசிச்சு அதை defend பண்ணினதுதான் அதுல beautyயே. க்ராம்னிக்கின் h5-தான் அந்த ஆட்டத்தை காப்பாத்திச்சுன்னு நினைக்கிறேன், ஏன்னா, it seems, Ponomariov h6 lineதான் prepare பண்ணியிருந்திருக்காரு. h6 விளையாடிருந்தா நிச்சயம் க்ராம்னிக் Ponomariovவோட home preparationல மாட்டிருப்பார் (அது மேட் வரைக்கும் போகுமான்னு தெரியலை, ஆனா நிச்சயம் அட்வாண்டேஜ் வொயிட்டுக்குத்தான். இல்லைன்னா அந்த Pawn sacrifice Pono விளையாடியே இருக்க மாட்டாரு!). ஆனா நேத்து கிறிஸ்சக்குக்கு எதிரா சிசிலியனில் சரி அடி வாங்கினாரு.

மைக்கேல் ஆடம்ஸ் வழக்கம் போல வெறுமனே ஒரு ப்ளஸ் ஸ்கோருக்குதான் aim பண்ணற மாதிரி இருக்கு. ஆடம்ஸை ஸ்பைடர் மேன்னுன்னு சொல்லுவாங்க, அவரு கொஞ்சம் கொஞ்சமா போர்ட் fulla சிலந்தி, வலையை உபயோகிப்பது போல் எதிராளியை squeeze out பண்ணி ஜெயிப்பதால் இந்த பேரு. டோப்பலோவை அன்னிக்கு அவர் தோக்கடிச்சது கம்ப்ளீட்டா வேற ஸ்டைலில். ஒரு டிபிக்கல் English attackகில் ஆரம்பித்து டோப்பலோவை படாத பாடு படுத்திட்டாரு. போல்கர் ஒரு வருஷம் விளையாடாம இருந்துட்டு வந்த மாதிரியே தெரியலை,பையன் ஆலிவருக்கு ட்ரெயினிங் ஆரம்பிச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன் :) ஆனந்த் ஒரு நல்ல பொசிஷனை ட்ரா பண்ணினதை "பாவம், டோர்னமெண்ட் ரொம்ப நாள் நடக்குது இல்லையா? டயர்டா ஆயிருப்பார். அதே மாதிரி ப்ரெஷரும் கூட!"-னு சொல்லி ஆனந்தை சப்போர்ட் பண்ணினார். சொகோலோவுக்கு இந்த டோர்னமெண்ட் ஒரு nightmare. Nothing has gone right, so far!

க்ரூப் Bல Memdyarov க்ளியர் லீடிங்கா இருந்தாரு, ஒரு வழியா கர்யாகின் அவரை எட்டி பிடிச்சிருக்கார். பார்ப்போம் என்ன நடக்குதுன்னு. எனக்கென்னமோ, இந்த கர்யாகின் World Champion stuff-னு தோணுது. அநியாயத்துக்கு டேலண்டட்.

Sunday, January 16, 2005

 

Corus டோர்னமெண்ட் - Rd. 2

இன்னிக்கு ஹைலைட் க்ராம்னிக்கின் தோல்வி. டோப்பலோவிடம் 20 மூவில் க்ராம்னிக் தோற்றுப் போவது ஆச்சரியம்தான்! அதுவும் 11-வது மூவிலேயே டோப்பலோவ் ஒரு புது மூவ் ஒண்ணு விளையாடினார்!! டோப்பலோவ் என்னிக்கு இருந்தாலும் ஒரு டேஞ்சரஸ் ப்ளேயர்னு ஆனந்த் சொன்னதுதான் ஞாபகம் வருது!

Kramnik,V (2754) - Topalov,V (2757)
[B80]Corus Wijk aan Zee (2), 16.01.2005

1.e4 c5 2.Nf3 d6 3.d4 cxd4 4.Nxd4 Nf6 5.Nc3 a6 6.Be3 e6 7.f3 b5 8.g4 h6 9.Qd2 b4 10.Na4 Nbd7 11.0-0-0 Ne5N 12.Qxb4 Bd7 13.Nb3 Rb8 14.Qa3? Nxf3 15.h3 Nxe4 16.Be2 Ne5 17.Rhe1 Qc7 18.Bd4 Nc6 19.Bc3 d5 20.Nbc5 Qa7 [21.Bxg7 Bxg7 22.Nxe4 dxe4] 0-1

ஆன்ந்த் லீகோக்கு எதிரா கொஞ்சம் கஷ்டமான பொசிஷனில் இருக்கார், பார்ப்போம் ட்ரா ஆகுதான்னு. மத்த ஆட்டம்லாம் இன்னும் நடந்துண்டு இருக்கு....ஷார்ட் இன்னிக்கும் ஒரு short ட்ரா பண்ணிண்டுட்டார்!


Saturday, January 15, 2005

 

Corus டோர்னமெண்ட் - Rd. 1

இந்த டோர்னமெண்ட் கிட்டத்தட்ட டாப்ல இருக்கற எல்லா ப்ளேயர்களும் விளையாடற ஒண்ணு. கேஸ்பரோவ் மட்டும்தான் எப்பவுமே மிஸ் ஆவார். வழக்கம் போல இந்த தடவையும் கேஸ்பரோவ் கிடையாது (இந்த தடவை அவர் சொன்ன காரணம் "காஸிம்ஜனோவ் மேட்ச்"!!), ஆனா க்ராம்னிக் உண்டு. ஆன்ந்த், க்ராம்னிக், லீகோ, டோப்பலோவ்னு டாப் 9 ப்ளேயர்ஸும் உண்டு, இவங்களோட ரொம்ப நாளைக்கு அப்புறம் மறுபடியும் ஜூடித் போல்கர் (ப்ரெக்னனட்டா இருந்ததால கிட்டத்தட்ட ஒரு வருஷம் விளையாடாம இருந்துட்டு வந்திருக்காங்க)!! தவிர Grischuk, Sokolov, Short, Bruzon & Van Wely-யும் விளையாடறாங்க.

போல்கர் ஒரு முழு பாயிண்ட் எடுத்து ஒரு சூப்பர் ரீ எண்ட்ரி கொடுத்திருக்காங்க. ஸ்விட்லருக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை, சுத்தமா form-லயே இல்லை!!


Polgar,J (2728) - Svidler,P (2735)
Corus A Wijk aan Zee NED (1), 15.01.2005
(மார்ஷல் கேம்பிட்)

1.e4 e5 2.Nf3 Nc6 3.Bb5 a6 4.Ba4 Nf6 5.0-0 Be7 6.Re1 b5 7.Bb3 0-0 8.c3 d5 9.exd5 Nxd5 10.Nxe5 Nxe5 11.Rxe5 c6 12.g3 Bd6 13.Re1 Qd7 14.d3 Qh3 15.Re4 Nf6 16.Rh4 Qf5 17.Nd2 Re8 18.Ne4 Nxe4 19.Rxe4 Rxe4 20.dxe4 Qxe4 21.Bc2 Qe7 22.Bg5 f6 23.Be3 Be6 24.Qf3 Qd7 25.Rd1 Rd8 26.Be4 Bxa2?

இந்த மூவ்தான் தப்புன்னு என் செஸ் ப்ரோக்ராம் சொல்லுது. இதுக்கு பதிலா சிம்பிளா [26...Rc8] விளையாடி c6 pawn-ஐ ப்ரொடக்ட் பண்ணிண்டிருந்திருக்கலாம்.

27.Bb6 Bb3 [ 27...Rf8 28.Bc5 Qe6] 28.Rd4 c5 29.Bxc5 Qe6 30.c4 1-0

இந்த மூவ்ல ஸ்விட்லர் ரிசைன் பண்ணிட்டார். ஏன்னா ஒரு piece போறதை தடுக்க முடியாது, இல்லைன்னா இராணியை விடற மாதிரி ஆயிடும். கறுப்பு இராணியும் இராஜாவும் ஒரே டையாக்னலில் இருக்கறதுதான் இங்க key point. இன்னொரு விஷயம் என்னன்னா, போல்கர் விளையாண்ட c4 ஒண்ணும் அவ்வளவு ஸ்ட்ராங் மூவ் கிடையாது, கரெக்ட் மூவ் [ 30.Qd3]. ஆட்டம் இப்படி போயிருக்கலாம்:: 30...Bxc4 [ 30...Qxc4 31.Bd5+] 31.Bb6 [ 31.Rxc4 Qxc4 ( 31...Bxg3 32.Rc3 Bc7) ] 31...Rf8 32.Rxc4 Kh8 [ 32...bxc4 33.Bd5]. ஆனா, எப்படி இருந்தாலும் ஸ்விட்லர் கொஞ்சம் மெட்டீரியல் விட்டுத்தான் ஆகணும்.

ஆனந்த் - க்ரிஷ்சக், ஷார்ட் - ஆடம்ஸ், ப்ரூசான் - க்ராம்னிக், சொகொலோவ் - லீகோ ஆட்டங்கள் ட்ரா. ஷார்ட் இந்த டோர்னமெண்ட்ல விளையாடறது ஒரு ஆச்சரியமான விஷயம், எனக்கென்னமோ he is totally past his prime-னுதான் தோணுது. ஷார்ட்டோட columns-லாம் நல்லா இருக்கும், ஒரு காலத்துல அவர் பயங்கர ப்ளேயரும் கூட. ஆனா, இன்னும் ஷார்ட்டை க்ராம்னிக், ஆனந்த் மாதிரி பெரிய்ய்ய்ய ஆட்களோட விளையாட விடறது காமெடியாத்தான் இருக்கு. Timman ஒவ்வொரு வருஷமும் அடி வாங்கின மாதிரி ஷார்ட் இந்த வருஷம் வாங்கப் போறாரு. க்ராம்னிக் ட்ரா பண்ணுவதை பிடிச்சு ஓட்டு ஓட்டுன்னு ஓட்டுவார் ஷார்ட், இங்க ஆடம்ஸோட முதல் ரவுண்டிலேயே வெறும் 23 மூவில் ட்ரா, அதுவும் எப்படி draw-by-repetition!!

Group B-ல கர்யாகின் - Ernst ஆட்டம் very interesting!

Thursday, January 13, 2005

 

Puzzle 10


White to play & mate

Puzzle 9-க்கான விடை


Wednesday, January 12, 2005

 

கேஸ்பரோவின் "Great Predecessors"

கேஸ்பரோவ் சமீபத்தில் அவரோட "My great predecessors" 4-த் வால்யூம்
ரிலீசுக்காக லண்டன் போயிருந்தார். அங்கு அவர் பேசியதை (கிட்டத்தட்ட 50 நிமிஷம்) ரெக்கார்ட் பண்ணி இங்கு போட்டு வைத்துள்ளார்கள். (ChessCenter-க்கு ஒரு ஸ்பெஷல் தேங்ஸ், Bandwidth, Transfer limit பத்தியெல்லாம் கவலை படாம இந்த பைல்களை டவுன்லோடுக்கு போட்டு வைத்ததற்கு!)

WMV, அதுனால ஒண்ணும் அவ்வளவு குவாலிட்டி இல்லை, அதுக்காக இதை மிஸ் பண்ண முடியுமா என்ன?! அவரோட புக்ஸ், மத்த ப்ளேயர்ஸ் பத்தி, முக்கியமா ரெஷெவ்ஸ்கி/பிஷர்/கார்போவ்/fine பத்தியெல்லாம் அவர் அங்கு பேசியிருக்கார். ஒவ்வொரு தடவையும் கேஸ்பரோவ் எங்கயாவது பேசினதை பார்க்கும்போதும் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு அவர் மேலே மரியாதை கூடிண்டேதான் போறது. அவரோட பேச்சின் tone "நான்தான் க்ரேட், மத்தவனெல்லாம் வெத்து"ன்னு இல்லாததே ரொம்ப impressive-ஆ இருக்கு (கேஸ்பரோவின் ரெக்கார்ட்ஸ் பத்தி நான் speacial-ஆ சொல்லணுமா என்ன?!). இதுல ஒரு இடத்துல கார்ப்போவ்-பிஷர் மேட்ச் நடந்திருந்தா கார்போவ்தான் ஜெயிச்சிருப்பார்னு சொல்லிட்டு "கார்போவ் பிஷரை தோக்கடிச்சிருப்பார், கார்போவை நான் தோக்கடிச்சேன். லாஜிக்கலா பார்த்தா நான் பிஷரை விட பெரிய ஆள்னு நான் சொல்ல வரலை. I know there is a conspiracy (sic!) theory like this" அப்படீன்னு சொல்வார். I think, இது ஒரு தேர்ந்த பேச்சாளருக்கான அடையாளம். தன்னை பத்தின ஒரு மோசமான கமெண்ட்டில் இருந்து ஓடி ஒளிஞ்சுக்காம, பயங்கர டெக்னிக்கா அதையே தான் பேசறதுக்கு யூஸ் பண்ணிக்கறது, very practical.

அவரின் இந்த புக் series-ன் பெயர் "My Great Predecessors"னு இருப்பதையே நிறைய பேரு ஓட்டிருக்காங்க. "அது என்ன Great Predecessors?? அப்ப இவரு Great-னு இவரே சொல்லிக்கறாரா?"ன்றதுதான் எல்லாரும் கேட்டது. கேஸ்பரோவ் இந்த மாதிரி mean பண்ணியிருந்தாலும் அதுல தப்பே இல்லைன்னுதான் சொல்லுவேன். கேஸ்பரோவ் "Great Predecessors"னு போட்டுக்க முடியாதுன்னா வேற யாரு போட்டுக்க முடியும்?

[Update: ஆனந்தோட பேட்டி பத்தி சொல்ல மறந்துட்டேன். ஒரு வாரம் சென்னைல இருந்திருக்காரு, சும்மா ரெஸ்ட்தான். அப்ப அவர் கொடுத்த பேட்டிகளை படிக்க இங்க க்ளிக் பண்ணுங்க. பயங்கர அடக்கமா அவர் சொல்லிருக்கிற பதில்களை பார்த்தா அவர் World #2-ன்னு எவனும் நம்பமாட்டான்!!) ]

Sunday, January 02, 2005

 

KKA முக்கோணம்

கிட்டத்தட்ட பத்து வருடங்களா செஸ் டாப் 3 Kasparov, Kramnik & Anandதான். (இதைதான் KKA triangleனு சொல்லுவாங்க). நம்பர் 3 ப்ளேயருக்கும் நம்பர் 4 ப்ளேயருக்கும் இருக்கும் பாயிண்ட் வித்தியாசம் சில நேரம் ரொம்ப கம்மியா ஆயிருக்கு, ஆனா இது வரைக்கும் இந்த் KKA சீலீங்கை யாரும் தொட்டதில்லை. டோப்பலோவ் முதல் முறையா இதை ப்ரேக் பண்ணிருக்கார். க்ராம்னிக்கோட ELO கம்மியாயிட்டதால டோப்பலோவ் மேலே போயிட்டார்ரு, அவ்வளவுதான். மொரோசெவிச் ரஷியன் சேம்பியன்ஷிப்ல பாயிண்ட்ஸ் விடாம இருந்திருந்தாருன்னா அவர்தான் மூணாவதுக்கு வந்திருக்கணும். க்ராம்னிக் இப்போ நாலாவது பொசிஷனில் இருக்காரு, லீகோ 5th. லீகோவோட விளையாடறதுக்கு ப்ரிப்பேர் பண்ணினதையெல்லாம் க்ராம்னிக் இனிமேதான் வெளியே காண்பிப்பார், நிச்சயம் மனுஷன் டாப் - 3க்கு இன்னும் இரண்டு லிஸ்ட்ல வந்துடுவார். லீகோவும் இன்னும் கொஞ்சம் நாளைக்கு தியரில வெளுத்துக் கட்டுவார்.


ஆனந்த் 5 பாயிண்ட் மேலே போயிருக்கார். 2800க்கு இன்னும் 14 பாயிண்ட்டுதான்!! இந்த ரஷியன் சேம்பியன்ஷிப்ல கலக்கலா விளையாடினதால கேஸ்பரோவோட ரேட்டிங் 2800க்கு மேலேயே இன்னும் இருக்கு, இல்லைன்னா 2795க்கு வந்திருக்கணும்!

The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?