Tuesday, November 30, 2004

 

Puzzle 4


Puzzle 4. White to play and mate in 2.

D.O.P 3யின் விடை: 1) Qxf6+ Nxf6 2) Bxf6# ["#" என்பது Checkmateடை குறிக்கும். ]

Sunday, November 28, 2004

 

கேஸ்பரோ::ரஷியன் சேம்பியன்

பத்தாவது சுற்றின் முடிவிலேயெ இந்த டோர்னமெண்ட் வின்னர் யாருன்னு தெரிஞ்சு போச்சு. வேற யாரு, கேஸ்பரோதான்! இந்த சுற்றில் கேஸ்பரோவும் மொரோசெவிச்சும் விளையாடினார்கள். Slav ஒப்பனிங். கேஸ்பரோ ஓப்பனிங்கில் நல்லா விளையாடி அட்வான்டேஜில் இருந்தாரு. ஒரு ஸ்டேஜில் மொரோசெவிச் தோத்துடுவார்னுதான் நினைச்சேன். ஆனா, மொரோசெவிச் நல்லா defend பண்ணி ஒரு அரை பாயிண்ட் எடுத்துட்டார். பெரிய விஷயம்தான், ஏன்னா அவரோட பொசிஷன் ஆரம்பத்துல அவ்வளவு கேவலமா இருந்தது! கேஸ்பரோக்கு ஒரு பாயிண்ட் பின்னாடி இருந்த Grischuk, Korotylevகிட்ட தோத்து போயிட்டாரு, அதுனால ஒரு ட்ராவே கேஸ்பரோக்கு இந்த டோர்னமெண்ட்டை ஜெயிக்க போதுமானதாக இருந்தது. Tseshkovsky Dreevகிட்ட தோத்து போனார். அவரி -5 எடுத்து கடைசில இருக்கார். ஆனா டோர்னமெண்ட்டை interestingகா வச்சிருந்ததுக்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு. அடுத்த சுற்றில் அவர் bye. Epishin - Svidler ட்ரா. Epishin பயங்கர creativeவா விளையாடி ட்ரா பண்ணிடறாரு!! Motylev - Timofeevவும் ட்ரா.

Standings after Round 10
Final standings

11வது சுற்றில் கேஸ்பரோவும் Grischukகும் ட்ரா பண்ணிண்டுட்டாங்க. ஒப்பனிங்கை தாண்டும்போது Grischukகுக்கு கொஞ்சம் அட்வான்டேஜ் இருந்தது, ஆனா அதை ஒழுங்கா follow-up பண்ணாம் விட்டுட்டார். கேஸ்பரோ, இந்த ட்ராவையும் சேர்த்து, பத்து ஆட்டத்துல இருந்து 7.5 பாயிண்ட்ஸ் எடுத்திருக்கார். அது கிட்டத்தட்ட 2855 ரேட்டிங் performance. இன்னும் கேஸ்பரோ அவரோட 100% formக்கு வரலைன்னுதான் நினைக்கிறேன், இல்லைன்னா இது நிச்சயம் 3000 வரை போயிருக்கும். ஆனா, rustyயா இருக்கும்போதே இவ்வளவு ஸ்ட்ராங் டோர்னமெண்ட்டில் +5 ஸ்கோர் எடுக்க கேஸ்பரோ ஒருத்தரால் மட்டும்தான் முடியும்!! Svidlerக்கு எதிரா Dreev Sicilian விளையாண்டார். இது ரொம்ப ஆச்சரியமான விஷயம், ஏன்னா Dreevவோட strong point Sicilian கிடையாது, ஆனா அதே சமயம் Svidlerக்கு Sicilian ரொம்ப பழகின ஒப்பனிங். எதிர்பார்த்த மாதிரியே, ஆரம்பத்துல Dreev பண்ணின சில inaccurate மூவ்களை exploit பண்ணி ஸ்விட்லர் ட்ரீவ்வை தோக்கடிச்சுட்டார். Morozevich - Motylev 1-0. இந்த ஆட்டத்துல மொரோசெவிச்சோட ட்ரேட்மார்க்கான tactical shotsலாம் எதுவும் இல்லை, ஆனா அருமையான ஒரு squeeze game இது. Bareev - Korotylevவும் 1 - 0. Timofeev - Epishin ட்ரா.

Standings after Round 11 (Final round)

Final standings




Friday, November 26, 2004

 

இந்த கேஸ்பரோ ரொம்ப மோசம்!

இடது பக்கம் Timofeev

இந்த கேஸ்பரோ ரொம்ப மோசம். தினமும் இப்படி ஜெயிச்சுண்டே இருந்தா, அவரை பத்தி என்னதாங்க வித்தியாசமா சொல்றது?! :-) அவரு back to formமா, இல்லை அவருக்கு எதிரா விளையாடறவங்க தப்பா ஆடறாங்களான்னு தெரியலை, அவரு பாட்டுக்கு பாயிண்ட் மேலே பாயிண்ட்டா எடுத்துண்டே இருக்காரு நேத்து Timofeevவோட, அதான் அந்த 19 வயசு பையன், ஆடினார். மேலே இருக்கிற படத்தை பாருங்க. குட்டியூண்டு Timofeevக்கு முன்னாடி வலது பக்கம் தலைவர் மலை (சிங்கம்!?) மாதிரி உட்கார்ந்திருக்கிறதை! அவன் கேஸ்பரோ எதிரே உட்கார்ந்தவுடனே பயந்துட்டான்னு நினைக்கிறேன், பயங்கர passive கேம் விளையாடினான். கேஸ்பரோக்கு இந்த மாதிரியெல்லாம் சான்ஸ் கொடுத்தா நடக்குமா, சொல்லுங்க, அவர் பயங்கர preciseசா Timofeevவின் பொசிஷனை கொஞ்சம் கொஞ்சமா கஷ்டமாக்கி கடைசில ரிசைன் பண்ண வச்சுட்டார். தலைவர் இப்போ +5ல இருக்கார்!!! இன்னிக்கு அவர் மொரோசெவிச்சோட ஆடணும். இன்னிக்கும் ஜெயிச்சாருன்னா கலக்கலா இருக்கும்.

நேத்து ஆட்டத்துல கேஸ்பரோகிட்ட தோத்ததுனாலயா என்னன்னு தெரியலை, Svidler இன்னிக்கு ரொம்ப மோசமா விளையாண்டாரு. செஸ்ல வெறுமனே உங்களுக்கு திறமை இருந்தா மட்டும் போதாது. கொஞ்சம் பதறாம cool headedடாவும் இருக்கணும்னு பெரியவங்க சொல்லிருக்காங்க. இதை Nervesனு சொல்லுவாங்க! இப்போ, ஏற்கனவே ஒரு பயங்கர மோசமான போர்ட் பொசிஷன்ல, இன்னும் நீங்க 10 மூவ் விளையாடணும், ஆனா ஒரு நிமிஷம்தான் டைம் இருக்குன்னு வச்சிக்குங்க, நீங்க பாட்டுக்கு இந்த டென்ஷன்ல போர்ட்டையெல்லாம் தூக்கி opponentடை அடிச்சிர கூடாது. (அட, நான் காமெடி பண்ணலை, நிஜம்மாவே இதெல்லாம் நடந்துருக்கு!) அப்போ கூட, அந்த tensionலயும் கரெக்டான மூவ்வை கண்டுப்பிடிக்கிறது தனி திறமை! அது நம்ப Vassily Ivanchukக்கு கிடையாது. அது மட்டும் இருந்திருந்தா, அவருக்கு இருக்கிற செஸ் understandingகுக்கு அவருதான் இப்போதைக்கு ELO listல முதல்ல இருந்திருக்கணும்!! நேத்து Svidler கதையும் அந்த மாதிரிதான் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். கேஸ்பரோகிட்ட தோக்கறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை (எல்லாரும்தான் அவர்கிட்ட தோக்கறாங்க. இவர் மட்டுமா தோத்தாரு?), ஆனா அது பயங்கர unnervingகா இருந்திருக்கும் என்பது உண்மை!

மற்றொரு ஆட்டத்தில் Grischuk Bareevவை தோக்கடித்தார். So இப்போதைக்கு கேஸ்பரோக்கு ஒரு பாயிண்டு பின்னாடி இருக்காரு Grischuk. இன்னிக்கு ஆட்டத்துல அவரு Korotylevவோட விளையாடணும். ஜெயிக்கணும்னு ஒரு வெறியோடதான் நிச்சயம் ஆடுவார். சில நேரம் எனக்கு Bareevவை பார்த்தா பயங்கர ஆச்சரியமா இருக்கும், அவரோட ரேட்டிங் 2715, அந்த ரேட்டிங்குக்கு போறதெல்லாம் லேசுபட்ட காரியம் இல்லை, ஆனாலும் பார்த்தீங்கன்னா திடீர் திடீர்னு ஒரு 2600 ப்ளேயர்கிட்டயோ, இல்லை ஒரு 2500 ப்ளேயர்கிட்டயோ நான் விளையாடற ரேஞ்சுக்கு கேவலமா விளையாடி தோத்து போவாரு!! மனுஷன் எப்படிதான் இன்னும் 2700க்கு மேலே ரேட்டிங்கை தக்க வச்சிண்டிருக்காரோ தெரியலை (இதுக்குத்தான் நம்ப வெங்கட் ஒரு பயங்கர theory ஒண்ணு ப்ரொபோஸ் பண்ணினார்). Korotylev மொரோசெவிச்சுக்கிட்ட (என்னமோ மொரொ "சேவிச்சுண்டு"ன்னு சொல்ற மாதிரி இருக்குல்ல?! :-)) தோத்து போனார். மொரோசெவிச்சுக்கு இது லக்கி வின். Korotylev சுலபமா ட்ரா பண்ணிருக்கலாம், ஆனா கடைசில போய் ஒரு சொதப்பு சொதப்பி முழு பாயிண்ட்டையும் தாரை வார்த்துட்டார். Tseshkovsky - Epishin ட்ரா. Epishinன்ற பேரை "ட்ரா"ன்ற வார்த்தைக்கு பதிலா உபயோகிக்கலாம்னு நினைக்கிறேன் ("Don't try to Epishin me!")!!


Standings after Rd 9



Thursday, November 25, 2004

 

50 - 50 டீல்!?

கேஸ்பரோ திரும்பி formக்கு வந்தாச்சு!! நேத்து Svidlerரை தோக்கடிச்சு கேஸ்பரோ இப்போ +4 வந்துட்டார். Svidler நான் ஏற்கனவே வேறொரு பதிவுல சொன்ன மாதிரி, பயங்க Strong ப்ளேயர். ஆனா அவர் நேத்து விளையாண்ட விதம் ஒரு மாதிரி unlike-Svidlerரா இருந்தது. ஒரு வேளை கேஸ்பரோவும் Svidlerரும் ஆட்டத்துக்கு முன்னாடியே "50-50 எடுத்தக்கலாம்"னு deal போட்டுட்டாங்களோ? எது எப்படியோ, கேஸ்பரோ ஜெயிச்சுட்டாரு. அவர் மீதி இருக்கிற ஆட்டங்களை ட்ரா பண்ணினாலே அவரு இன்னும் கொஞ்சம் ELO பாயிண்ட்ஸ் எடுத்து திரும்பி 2800க்கு மேலே போயிடுவார். ஆனந்த் முதல் இடத்துக்கு வந்துடுவார் போல இருக்கேன்னு எல்லாம் நினைச்சுண்டு இருக்கும்போதே, "அதெல்லாம் சான்ஸ்சே இல்லை"ன்ற மாதிரி கேஸ்பரோ தன்னோட ரேட்டிங்கை கூட்டிண்டுட்டார். ஆனா ஒண்ணு, எனக்கு personalலா ஆனந்த் ஒரே ஒரு தடவையாவது ELO listல முதல்ல வரணும்னு ஆசை. அவர் World Champion ஆகலைன்னா கூட, கிட்டத்தட்ட 20 வருஷமா ரேட்டிங் லிஸ்ட்ல முதல்ல இருந்த கேஸ்பரோவை முந்தின ஒரே ஆள் அப்படின்னாவது செஸ் ஹிஸ்டரியில் அவர் பேர் இருக்குமில்லையா?! அதே மாதிரி, நம்ப latest favorite, Tseshkovskyக்கு டோர்னமெண்ட்டில் கடைசி பரிசுன்னு எதுவும் கிடையாதுன்னு யாராவது சொன்னா தேவலை, அவரு பாட்டுக்கு எல்லார்கிட்டயும் தோத்துண்டு இருக்கார். நேத்து தோத்து போனது Motylevகிட்ட. பேசாம நானும் போய் அவரோட விளையாடலாம்னு இருக்கேன். யார் கண்டா, அவரு என்கிட்டயும் தோத்தாலும் தோப்பார் (அட, ஒரு பேச்சுக்குத்தான்!).

Timofeev Korotylevகிட்ட தோற்றுப்போனார். இத்தனைக்கும் ஆரம்பத்துல ஒரு நல்ல பொசிஷன்ல இருந்து கொஞ்சம் கொஞ்சமா மோசமாகி தேவையில்லாம ஒரு பாயிண்டை விட்டார். Dreev நம்பளோட ட்ராமாஸ்டர் Epishinனை எப்படியாவது ஜெயிச்சுடணும்னு முயற்சி செஞ்சு பார்த்தார். ம்ஹூம், பப்பு வேகலை. ஆட்டம் ட்ரா. Bareevவும் Morozevichசும் மத்த எல்லா காய்களையும் exchange பண்ணிண்டு, ஒரு Bishop endgameல ட்ரா பண்ணிண்டாங்க. ஆக, இப்போ கேஸ்பரோ +4லயும், Grischuk +2லயும், Dreev +1லயும், Timofeev/Bareev/Svidler/Korotylev/Motylev +0லயும், Epishin -1லயும், Morozevich -2லயும், Tseshkovsky -4லயும் இருக்காங்க. கேஸ்பரோவை இனிமேல் யாராலயும் நிப்பாட்ட முடியாது. அவரு கிட்டத்தட்ட இந்த டோர்னமெண்ட்டை ஜெயிச்சுட்டாருன்னுதான் சொல்லணும். இன்னிக்கு அவரு Motylevவோட விளையாடணும். இதுலயும் ஒரு பாயிண்ட் எடுத்தாருன்னா அவருக்கு இப்பவே கப்பை கொடுத்து கைத்தட்டி வீட்டுக்கு அனுப்பிச்சுடலாம்.

Standings after Rd 8



Tuesday, November 23, 2004

 

உலகத்துல வேறு என்னதான் நடக்குது?

U.S (நேஷனல்) சேம்பியன்ஷிப் நேற்று ஆரம்பித்தது, இன்றுதான் முதல் சுற்று. இதில் Gata Kamsky, Hikararu Nakamura, Kaidanov, Onishchuk, Larry Christiansen, Joel Benjamin போன்ற பெரிய தலைகள் அனைவரும் விளையாடுகிறார்கள். இதில இந்த தடவை ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பது Nakamuraக்குதான். Nakamuraக்கு 17வயசுதாங்க ஆகுது!! 17 வயசுல நான் 3 மூவ், 5 மூவ்ல எல்லாம் mate ஆயிண்டு இருந்தேன் :( இந்த U.S சேம்பியன்ஷிப் வலைத்தளத்தை வடிவமைத்து, அதை maintain பண்ணுவது Mig Greengard. இவரை பற்றி ஏற்கனவே ஒரு பதிவுல சொல்லிருக்கேன். இவரோட Chess Ninja வலைத்தளம் செஸ் ஆர்வலர்கள்கிட்ட (யப்பா, ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல தமிழ் வார்த்தை!) நல்ல famous (அதானே பார்த்தேன்!). அதே மாதிரி, காம்ஸ்கி திரும்பி செஸ் விளையாட வந்திருக்காரு. காம்ஸ்கி பயங்கர strong, இப்போ ரொம்ப நாள் seriousசா எதுவும் விளையாடாததால் கொஞ்சம் டச் விட்டு போயிருக்கும். அவர் 1996ல கார்ப்போவ்வோட FIDE World Championship titleக்கு எல்லாம் விளையாடிருக்கார். (அந்த FIDE World Championshipபை யாருமே மதிக்கவில்லை என்பது வேறு விஷயம்!)

நம்ப கொச்சின்லயும் ஒரு செஸ் டோர்னமெண்ட் நடந்துண்டு இருக்கு, World Junior Championship. Juniorனா 20 வயசுக்கு கம்மியானவங்க, ஏதோ குழந்தைங்க டோர்னமெண்ட்டுன்னு நினைச்சிக்காதிங்க. இதுல நம்ப ஊரு GMs ஹரிகிருஷ்ணா, கொனேரு ஹம்பி, WGM ஹரிகா விளையாடறாங்க. Humpy ஆண்கள் பிரிவுல விளையாடுகிறார். ஆறு சுற்றுக்களுக்கு பிறகு ஹரிகிருஷ்ணா முன்னணில இருக்காரு. எப்போ நம்ப ஆட்கள் இந்த மாதிரி டோர்னமெண்டுகளுக்கு ஒழுங்கான ஒரு வலைத்தளம் design பண்ண போறாங்களோ தெரியலை...உதாரணத்துக்கு இந்த ஹரிகாவோட personal details பக்கம். என்ன நம்ப ஊருல ஒழுங்கா Web design பண்ண தெரிஞ்சவங்களா இல்லை?! எல்லாத்தையும் இப்படி chessindia.orgலயே host பண்ணி, ஒரு drab interface கொடுத்து ரொம்ப amateurishசா பண்ணுறாங்கன்னுதான் சொல்லணும்.

Monday, November 22, 2004

 

Chess is a violent game!


Tseshkovsky - Kasparov (c) Chesspro.ru

அப்படியே கட்டிலில் மல்லாக்க படுத்துண்டு, computerரை நெஞ்சில் முட்டுக்கொடுத்து வைத்து ஏதாவது தின்றுக்கொண்டே கேஸ்பரோவ் ஜெயிக்கறதை ICCயில் பார்ப்பதில் உள்ள சுகம் அட அட அட...அனுபவித்தால்தான் புரியும். நேத்து ஒரு 4 மணி நேரம் "நாளைக்கு ஒரு presentation இருக்கே, deadline வேற பக்கத்துல வந்துடுச்சே!" அப்படின்ற கவலையெல்லாம் மறந்து நான் ICCலயும் Playchessலயும் ஐக்கியமாயிட்டேன்னா பாருங்க, அவ்வளவு இன்ட்ரெஸ்டிங்கா இருந்தது நேத்து ஆட்டங்கள்!!

அதுலயும், இந்த Tseshkovsky இருக்காரே...அம்மா! அவருக்கு 60 வயசுன்னா யாரும் நம்ப மாட்டாங்க...அவரு பாட்டுக்கு World #1 கேஸ்பரோவோட விளையாடறோம், பார்த்து ஜாக்கிரதையா விளையாடணும்னெல்லாம் கவலையே படாம, பயங்கர attacking ஆட்டம் ஆடினார்! அதுவும் கேஸ்பரோவோட இஷ்ட ஓப்பனிங்கான Sicilian Scheveningenலயே (சிசிலியன் ஷவெனிகன்) !!

(3) Tseshkovsky,V (2577) - Kasparov,G (2813)
[B84]57th ch-RUS Moscow RUS (7),
22.11.2004

1.e4 c5 2.Nf3 d6 3.d4 cxd4 4.Nxd4 Nf6 5.Nc3 a6 6.Be2 e6 7.0-0 Be7 8.a4 Nc6 9.Be3 0-0 10.f4 Qc7 11.Kh1 Re8 12.Bg1 Bd7 13.Nb3 b6 14.Bf3 Rab8 15.Qe2 Nb4 16.e5 Nfd5 17.Nxd5 Nxd5 18.Be4 b5 19.Nd4 g6 20.f5 exf5 21.Bxd5 dxe5 22.Nxf5 Bxf5 23.Rxf5 gxf5 24.Qh5 Bf8 25.Qxf5 Bg7 26.Ra3 e4 27.Rh3 h6 28.Rg3 Qe5 29.Bxf7+ Kh8 30.Qg6 Rf8 31.axb5 axb5 32.Bd5 Rf1 33.c3 Rbf8 34.h3 Qf6 35.Bxe4 Qxg6 36.Rxg6 Re8 37.Bd3 Rd1 38.Rd6 Bf8 39.Bg6 Bxd6 0-1

21)...dxe5 க்கு பிறகு Tseshkovsky ஒரு முழு piece upபா இருந்தாரு, அவர் சிம்பிளா இந்த அட்வான்ட்டேஜ்ஜை தக்க வச்சிண்டிருந்தாலே கேஸ்பரோவுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கும். ஆனா, நம்ப Tsheshkovskyக்குதான் fighting spirit ரொம்ப ஆச்சுதே..அவருகிட்ட இருந்த extra pieceசை exchange, அடுத்து ஒரு ரூக்கை sacrificeன்னு விளையாடி கேஸ்பரோவோட king sideடை நிர்மூலமாக்கிட்டார். நிஜம்மா சொல்றேங்க, இந்த மூவ்களை நேரிடையா பார்த்த போது எனக்கு கிடைத்த ஒரு adrenaline rush எனக்கு ஒரு சில விஷயங்களை தவிர எதிலும் கிடைச்சதில்லை!!

செஸ் ஒரு violent கேம். வெறுமனே ஒரு போர்ட்டுக்கு முன்னாடி இரண்டு ஆளுங்க உட்கார்ந்த்து வெட்டித்தனமா பொழுது போக்கறாங்கன்னு யாராவது நினைச்சிங்கன்னா, sorry, you cannot be more wrong! செஸ்ல கேஸ்பரோவ், Fischer, லாஸ்கர் மாதிரி பெரியாட்கள்லாம், பெரியாட்கள் ஆக காரணமே அவங்ககிட்ட இருந்த அந்த ஒரு killer instinctதான். ஆனந்துக்கிட்ட அது குறைவாயிருக்கறனாலதான் இன்னும் அவரால கேஸ்பரோவை convincingகா தோக்கடிக்க முடியலன்னு சொல்ற ஒரு கும்பலும் இருக்கு (அதுல நானும் ஒருவன் என்பது வேறு விஷயம்!). இந்த Killer instinct எல்லார்கிட்டயும் ஏதாவது ஒரு அளவில் இருப்பதால்தான் இன்னும் நம்மால் சினிமா சண்டை காட்சிகள், WWF போன்ற விஷயங்களை இரசித்து பார்க்க முடிகிறது. சில பேருக்கு WWF, சில பேருக்கு செஸ்! எனக்கு செஸ் பிடித்துப் போனதற்கு இதுவும் ஒரு காரணமோ என்று இப்பொழுது யோசித்து பார்க்கையில் தோணுது. நம்ப "ஹாய் மதன்"கிட்ட கேட்டா "இதெல்லாம் ஒரு வகையில் நமக்குள் இருக்கும் மிருகத்துக்கு தீனி போடுவது"ன்னு சொல்லுவார்னு நினைக்கிறேன்! Don't get me wrong, WWF பார்க்கறவங்களும் செஸ் விளையாடறவங்களும் violentடானவங்கன்னு நான் சொல்ல வரலை. மக்களுக்கு violenceசுன்னு ஒண்ணு பிடிப்பதற்கு காரணமே they get a vicarious releaseன்றதுனாலதான்!

சரி, என்னோட புலம்பல்ஸை அப்புறம் வச்சிக்கிறேன்....

Tseshkovsky மட்டும் அந்த அட்டாக்கை ஒழுங்கா follow-up பண்ணியிருந்தாருன்னா கேஸ்பரோ நிச்சயம் தோத்திருப்பாரு. ஆனா, Tseshkovsky இரண்டு மூணு தப்பான ஐடியாக்களை விளையாடவும், கேஸ்பரோவ் அப்படியே ஆட்டத்தின் போக்கை மாத்திட்டார். கடைசியில் Tseshkovsky resign பண்ணுமாறு ஆயிற்று. உங்களுக்கு செஸ்ல interest இருந்தா நிச்சயம் இந்த ஆட்டத்தை ஒரு போர்ட்டில் விளையாடி பாருங்க, miss பண்ணிடாதீங்க....ஆட்டத்தை algebraic notationனில் மேலே கொடுத்திருக்கிறேன். Tseshkovsky 2 தடவை ரஷியன் சேம்பியன் பட்டம் பெற்றவர். இவரோட பழைய ஆட்டங்களை இந்த சனி/ஞாயிறு தேடி பிடிச்சு விளையாடி பார்க்கணும்னு இருக்கேன். அதே போல, Tseshkovskyக்கு ஒரு இரசிகர் மன்றமும் ஆரம்பிக்கலாமுன்னு ஐடியா. என்ன சொல்றீங்க? :)

Svidlerரும் நேத்து Korotylevவை தோக்கடிச்சு +1க்கு வந்துட்டார். இவர் பெரிய ஆளுங்க. So, இவர் ஒரு 2600 GMமை தோக்கடிக்கறது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை. Timofeev - Bareev, Morozevich - Grischuk & Dreev - Motylev இவங்களோட ஆட்டங்கள் ட்ராவில் முடிஞ்சது. Dreev - Motylev மட்டும்தான் நிஜம்மாவே சண்டை போட்டு (போர்ட்டில்தான்!) சமாதானமானாங்க..மத்த இரண்டு ஆட்டங்களும் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே முடிஞ்சிருச்சு!

Standings after Rd 7


கேஸ்பரோதான் இப்போதைக்கு லீடிங், +3 வச்சிருக்கார் . Svidler +1 வந்துட்டார். நம்ப ஹீரோ Tseshkovsky கடைசில இருக்காரு. For playing brilliant, attacking chess, kudos to him!

இன்னிக்கு ரெஸ்ட் டே. நாளைக்கு Kasparov Svidlerரோட விளையாடணும். மத்த ஆட்டங்கள்: Epishin - Dreev, Korotylev - Timofeev, Bareev - Morozevich & Motylev - Tseshkovsky.

 

கேஸ்பரோவுக்கு தமிழ் தெரியுமா?!

முந்தின பதிவுல "கேஸ்பரோவ் ஜெயிச்சா நல்லா இருக்கும்"னு நான சொன்னதை கேஸ்பரோவ் படிச்சிட்டார்னுதான் நினைக்கிறேன். ஏன்னா, நேத்து ட்ரீவ்வோட விளையாண்ட ஆட்டத்துல கடைசில (end game) கலக்கலா விளையாடி ஒரு பாயிண்ட் எடுத்துட்டார். ட்ரீவ் நிறைய உதவி செஞ்சார்னாலும், கேஸ்பரோ ஒரு drawish-looking செட்டப்பில் இருந்து ஒரு முழு பாயிண்ட் எடுத்தது, ஒரு magician காலி தொப்பில இருந்து முயல் வரவைத்த மாதிரிதான் எனக்கு தோணியது. ட்ரீவ் Anti-Meran செட்டப்பில் பெரியாளு, அவர் 15தாவது மூவ்விலயே Nd7 விளையாடி material downனா ஆன போது, "சரி சரி, கேஸ்பரோவ் 25 மூவ்ல தோத்துருவாரு போல இருக்கு!"ன்னுதான் நினைச்சேன். அதுக்கேத்த மாதிரி கேஸ்பரோவ்கிட்ட ஒரு extra pieceசும், ட்ரீவ்கிட்ட extraவா மூணு சிப்பாய்களும் இருந்தது. ரொம்ப risky பொசிஷன் அது. கேஸ்பரோவ் ஒழுங்கா விளையாடலைன்னா தோத்து கூட போயிருக்கலாம்.

ட்ரீவ்னால அந்த பொசிஷன்ல நிச்சயம் ஒரு ட்ராவாவது வாங்க முடியும்னுதான் எல்லாரும் நினைச்சாங்க, ஆனா, ட்ரீவ்க்கு எதுவுமே chances கொடுத்திடாம விளையாடி கேஸ்பரோ கடைசில முழு பாயிண்ட்டையும் தட்டிண்டு போயிட்டார். I think, நேரமின்மையால் ட்ரீவ்னால strong continuationsசை கண்டுப் பிடிக்கமுடியாமல் போயிருக்கவேண்டும். இல்லைன்னா அவரு நிச்சயம் அந்த 15)...Nd7!? விளையாடியே இருக்க மாட்டார். எது எப்படியோ, கேஸ்பரோவும் இப்போ +2. Grischuk, Dreev & Kasparov மூணு பேரும்தான் இப்போதைக்கு டோர்னமெண்ட் லீடர்ஸ்.

கேஸ்பரோவ்னால பண்ண முடியாததை Motylev பண்ணினாரு நேத்து. இதுவரைக்கும் எல்லாரோடையும் ட்ரா பண்ணிண்டிருந்த Epishinனை தோக்கடிச்சு அவரோட ஸ்கோரை -2ல இருந்து -1க்கு update பண்ணியிருக்காரு. Timofeev Grischukக்கு எதிரா ரொம்ப நல்லாவே விளையாடினாரு. ஒப்பனிங்குக்கு அப்புறம் actualla Timofeevக்குதான் அட்வான்டேஜ் இருந்தது. ஒரு perpetual check ஒண்ணை பார்த்த Grischuk, உடனே அதை விளையாடி ஆட்டத்தை ட்ரா பண்ணிட்டார். தலைவர் Tseshkovskyயோட ஆட்டம் மறுபடியும் பயங்கர interesting. கறுப்பு காய்களை வைத்துக்கொண்டு Korotylevவை ஒரு கலக்கு கலக்கிவிட்டார். ஆனால், கடைசியில் ட்ராவுக்கு ஒத்துக் கொள்ள்வேண்டியதாயிற்று. Bareev - Svidler ட்ரா. இரண்டு பேரும் பயங்கர தோஸ்து. அதுனாலதான் பாசத்தோட ட்ரா பண்ணிண்டிருக்கணும். ஆனா அந்த ட்ரா பொசிஷன் சமமானது கிடையாது. பரீவ் இன்னும் கொஞ்சம் Svidlerஐ pressurize பண்ணியிருக்கலாம். BTW, பரீவ், ஸ்விட்லர் இரண்டு பேருமே சமீபத்தில் முடிந்த Kramnik - Leko மேட்ச்சில் க்ராம்னிக்குக்கு உதவியாளர்கள் (seconds).

Standings after Round 6


கேஸ்பரோவுக்கு இந்த வெற்றி நிச்சயம் ஒரு பெரிய boost, பார்ப்போம் இதுனால திரும்பி கேஸ்பரோவ் அவரோட பழைய formக்கு வராருன்னு. Hoping to see the lion roar again !!

Sunday, November 21, 2004

 

கலக்கும் Tseshkovsky!

நேத்து நடந்த 5th சுற்றிலும் கேஸ்பரோவினால் ஒரு முழு பாயிண்ட் எடுக்க முடியலை. இந்த டோர்னமெண்ட்டின் ட்ரா மாஸ்டரான Epishin கேஸ்பாரோவோடையும் ட்ரா பண்ணிண்டுட்டார். அவரு ஒரு ஆட்டம் கூட ஜெயிக்காம, +0 வைத்தே 2615 க்ராஸ் பண்ணிடுவார்னுதான் நினைக்கிறேன். ஆனா, ஒரு 2700+ GMகிட்ட ட்ரா பண்ணுறதே பெரிய விஷயம்தான். அதை அவை பயங்கர consistentடா பண்ணுவதை நிச்சயம் பாராட்டணும். கேஸ்பரோவ் இன்னும் +1லதான் இருக்காரு. மீதி இருக்கிற 6 ஆட்டங்கள்ல அவரு இன்னும் மூணு ஆட்டம் ஜெயித்து final score +4 கொண்டு வந்தே ஆகணும். இல்லைன்னா, அவரோட ரேட்டிங் 2793க்கும் கீழே போயிடும். ஆனந்த் ஏற்கனவே 2781ல இருக்காரு. ஜனவரி 2005ல நடக்கப் போற Wijk Aan Zeeல மட்டும் ஆனந்த் ஜெயிச்சாருன்னா நிச்சயம் கேஸ்பரோவை ELO listல ஓவர்டேக் பண்ணிடுவார்னுதான் நினைக்கிறேன். ஜனவரியில் Kasparov - Kasimdzhanov டோர்னமெண்ட் வேற இருக்கு. இதில Kasimdzhanovவோட பண்ணுற ஒவ்வொரு ட்ராவுக்கும் Kasparov அநியாயத்துக்கு பாயிண்ட்ஸ் விடுவாரு; அவங்க இரண்டு பேருக்கும் அவ்வளவு ELO difference ! ஆனந்த்தான் இப்போதைக்கு Chess World சூப்பர் ஸ்டார். கடந்த இரண்டு வருஷமா அவரு பயங்கரமா perform பண்ணிண்டு இருக்காரு. கேஸ்பரோவும் க்ராம்னிக்குமே இப்போதைக்கு பெஸ்ட் ப்ளேயர் ஆனந்த்துதான்னு பேட்டிகளில் சொல்ற அளவு நல்லா விளையாடறாருன்னா பார்த்துக்கங்க.

நேத்து Tseshkosky, Bareevவோட விளையாண்டாரு. பரீவ் அவரோட characteristic openingகான ப்ரெஞ்ச் ஒப்பனிங்கை விளையாண்டாரு. ஒரு இன்ட்ரெஸ்டிங் விஷயம் என்னன்னா, இந்த ஒப்பனிங்ல Bareev Expert. ஆனாலும் 15 மூவ்ல, 20 மூவ்ல எல்லாம் தோத்திருக்காரு! Tseshkovsky பயங்கரமான அட்டாக் ஒண்ணு ஆரம்பிச்சாரு. ஆரம்பத்துல Bareevக்கு defend பண்ணுவதை தவிர வேறு வழியில்லாமல் போனது. கொஞ்சம் மூவ் கழித்து Tseshkvosky ஒரு தப்பான plan விளையாட, Bareev முழுமூச்சாக திரும்பி அட்டாக் பண்ண ஆரம்பித்தார். ஒரு குதிரையை வெட்டுக்கொடுத்து விட்டு, இன்னுமொரு ரூக்கும் போக போகிறதுன்ற நிலைமையில் Tseshkovsky ரிசைன் பண்ணினார். தைரியமா, வெறுமனே ட்ராவுக்கு மட்டும் விளையாடாமல், பெரிய ஆட்களுக்கு நேரயே இந்த மாதிரி விளையாடறாருன்னா, அவருக்கு அவரோட Chess Knowledge மேலே எவ்வளவு நம்பிக்கை இருக்கணும்!!? Tseshkovsky மாதிரி ஒரு நல்ல Chess understanding இருக்கிறவரை நம்ப இந்தியன் செஸ் குழுவுக்கு பயிற்சியளிக்க வைத்தோமென்றால் ரொம்ப நல்லாயிருக்கும்.

Svidlerம், தற்போதைய டோர்னமெண்ட் லீடர் Grishchukகும் விளையாண்ட ஆட்டம் ட்ராவில் முடிந்தது. Dreev ஒருத்தர்தான் full formல இருக்காருன்னு நினைக்கிறேன். பயங்கர masterfulலா அவர் Korotylevவை தோற்கடித்து Grischukகுடன் முன்னணியில (+2) சேர்ந்துண்டார். இன்னிக்கு (21/11/04) கேஸ்பரோவும் ட்ரீவும் விளையாடணும். என்ன ஆகுதுன்னு பார்ப்போம் (என்னோட guess, ட்ரா! ஆனா, கேஸ்பரோவ் ஜெயிச்சா நல்லாதான் இருக்கும் :)). மொரோசெவிச் ஏனோ இந்த டோர்னமெண்ட்டில் இது வரை ஒழுங்காவே விளையாடலை. நேத்து Timofeevக்கு எதிரா ஒரு முழு பாயிண்ட் எடுத்துடறதுன்னு ரொம்ப முயற்சி பண்ணினார், ஆனா Timofeev நல்லா defend பண்ணி ட்ரா பண்ணிட்டாரு. ஒரு ஆட்டம் ட்ரா ஆச்சுன்னா, ஆளுக்கு அரை பாயிண்ட்டுன்னு பிரிச்சுக்கணும். So, இன்னும் மொரோசெவிச் -2லதான் இருக்காரு. ஒரு ஆட்டமும் ஜெயிக்கலை, ஆனா 2 ஆட்டம் தோத்திருக்கார்.

Standings after Round 5


இன்னிக்கு Grischuk - Timofeev, Kasparov - Dreev, Korotylev - Tseshkovsky, Bareev - Svidler & Motylev - Epishin விளையாட போறாங்க. யாராவது ICCல இதை நேரிடையா பார்க்க வந்தீங்கன்னா எனக்கு ஒரு சவுண்ட் விடுங்க. நான் ஒரு Guest loginல உள்ளதான் இருப்பேன். ஆமாம், ICC client BlitzIn Unicode சப்போர்ட் பண்ணுமா? பண்ணினா, தமிழ்லயே பேசலாம் :)


Saturday, November 20, 2004

 

Chessmasterகிட்ட வாங்கின உதை!

நான் Chessmaster 10th edition software வாங்கின கதையை ஒரு சில வாரங்களுக்கு முன்னால் என்னோட ஆங்கில வலைப்பதிவுல சொல்லிருந்தேன் (actualla, புலம்பிருந்தேன்!). அதை வாங்கின புதுசுல ஒரு இரண்டு மூணு நாளைக்கு போட்டு தாக்கு தாக்குன்னு தாக்கிண்டு இருந்தேன் (office timeலதான் :)), ஆனா கொஞ்ச நாளிலேயே வழக்கம் போல போரடிச்சு போய் அதை தூக்கி மூலையில போட்டுட்டேன் (குப்பை தொட்டில போட மன்சு வரலை! என்னதான் இருந்தாலும் நான் காசு கொடுத்து வாங்கினதாக்கும்!).

இன்னிக்கு என்னோட ப்ரெண்ட்ஸ் இரண்டு பேர் என்னோட officeக்கு வந்திருந்தாங்க. சரி, அவங்க ஒரு ஆட்டம் ஆடிப் பார்க்கட்டுமேன்னு Chessmasterல fun mode செலக்ட் பண்ணி கொடுத்தேன். Fun modeன்றது குழந்தைகளுக்கானது (இன்னும் மனசளவுல குழந்தையா இருக்கிறவங்களுக்கும்!). இந்த modeல க்ராபிக்ஸும், சவுண்ட்ஸும் ரொம்ப நல்லா இருக்கும். ஆனா, அதே சமயம் Chessmaster பயங்கர வீக்கா விளையாடும். அதோட playing strength மிஞ்சி மிஞ்சி போனா 1300 - 1400 ELOக்குள்ள இருக்கும். போர்ட் 3Dல இருந்தனாலயோ என்னமோ, என்னோட ப்ரெண்ட் கொஞ்சம் confuse ஆகி ஒரு ரூக்கையும், இரண்டு சிப்பாயையும் தாரை வார்த்துட்டான். எனக்கு அந்த 3D போர்ட் கொஞ்சம் போல பழகியிருந்ததால் (கொஞ்ச நஞ்ச ஆட்டமா தோத்திருக்கேன் Chessmasterகிட்ட!?) நானும் அவனோட சேர்ந்துண்டேன். அதை நல்லா outplay பண்ணி ஒரு ஜெயிக்கிற பொசிஷனுக்கு வந்தோம். எங்ககிட்ட ஒரு queen + rookகும், அதுகிட்ட ஒரு rookகும் இருந்தது. ஒரு mate-in-2 பார்த்த சந்தோஷத்தில வேகமா எங்க இராணியை கொண்டு போய் ரூக்கோட connect பண்ணி இராஜாவோட escape squaresசை block பண்ணினோம். mateல இருந்து தப்பிக்கறதுக்கு வழியே இல்லைன்னு ஒரு நிலைமை வந்ததுன்னா, கம்ப்யூட்டர் செஸ் engine எல்லாமே, generally, டமால் டுமீல்னு piecesசை sacrifice பண்ண ஆரம்பிச்சுடும். அது மாதிரி Chessmaster வேகமா அதுகிட்ட இருந்த ஒரே ரூக்கையும் எங்களோட இராஜா பக்கத்துல, supportடே இல்லாம, வச்சு செக் சொன்னபோது, "அவ்வளவுதான்! engine சுருண்டுருச்சு. நம்ப திறமையை பார்த்து பயந்துருச்சு"ன்னு சந்தோஷத்தோட அந்த ரூக்கை cut பண்ணினோம். பார்த்தா, உடனே "Stalemate, Game drawn"னு ஒரு மெசேஜ் பாக்ஸ் காண்பிச்சு Chessmaster எங்களுக்கு ஒரு பெரிய nosecut (என் மூக்கு இல்லை, இது எங்க மூக்கு ;) )கொடுத்திருச்சு :( அப்போதான் அதோட Kingக்கு breathing spaceஏ தராம எங்களோட queen நின்னுண்டு இருக்கிறதை கவனிச்சோம். தலையில அடிச்சிக்கறதை தவிர எங்களுக்கு வேற வழி தெரியலை (என் ப்ரெண்ட் என்னோட தலையில இரண்டு extraவா போட்டான்றது வேற விஷயம்!).

இதுல இருந்து ஒரு விஷயம் எனக்கு படு clearஆ தெரிந்தது. I have lost my touch. இதுவாவது பரவாயில்லை, ஆனா சுத்தமா concentrationனு ஒண்ணே இல்லாம போயிடுச்சு. Daily செஸ் விளையாடியோ, இல்லை, பெரியாட்களின் ஆட்டங்களை analyse பண்ணியோ அந்த touchஐ maintain பண்ணிண்டே இருக்கணும்னு நினைக்கிறேன்.

ஆச்சரியமான விஷயம் என்னன்னா, GMsலாம் 7 மணி நேரமா ஒரே ஆட்டத்தில concentrate பண்ணி விளையாடுவாங்க... எப்படிதான் பண்றாங்களோ தெரியலை!

Friday, November 19, 2004

 

கேஸ்பரோவுக்கு வயசாயிடுச்சு!!

நேத்து (18/11) நடந்த நாலாவது சுற்றில் நடந்த 5 ஆட்டங்களில் 4 ஆட்டம் ட்ரா. Grishcukனால மட்டும்தான் ஒரு முழு பாயிண்ட் எடுக்க முடிந்தது. என்னோட latest favorite Tsheshkosky தோத்து போனது கொஞ்சம் வருத்தம்தான், ஆனா 55 மூவ் வரைக்கும் நல்ல tough fight கொடுத்ததுக்கே அவரை பாராட்டணும். கடைசியிலே அவர் பண்ணின ஒரு சின்ன தப்பினால Grischukகுக்கு 1 பாயிண்ட். கேஸ்பரோவ் வழக்கம் போல (!?) ஒரு advantageல இருக்கிற பொசிஷனை, Motylevக்கு எதிரா, win பண்ணாம ட்ரா பண்ணினார். "Winning a won position is the most difficult thing"னு சொல்லுவது என்னை மாதிரி Patzerக்குதான்னு நினைச்சேன், பார்த்தா கேஸ்பரோவுக்கும் ஒத்து வரும் போல இருக்கு! :) (Patzerனா "செஸ் கத்துக்குட்டி"ன்னு அர்த்தம்). அவரு கடைசில ஒரு easy மூவ்வை மிஸ் பண்ணினது, அவரோட ரேஞ்சுக்கு கொஞ்சம் கேவலம்தான். இதே ஒரு பத்து வருஷத்துக்கு முந்தின கேஸ்பரோவ்வா இருந்திருந்தா Motylevவை தூக்கி போட்டு மிதிச்சிருப்பாரு (உண்மையில இல்லைங்க, Chess gameலதான்!). இப்போ இருக்கிற கேஸ்பரோவினால், வயது காரணமாகவோ இல்லை அவரோட மத்த commitmentsனாலயோ, முன்ன மாதிரி விளையாட முடியலைன்றதுதான் உண்மை! ஆனா ஒண்ணுங்க, அவரு நாளைக்கு என்கிட்டயே தோத்து போற அளவு மோசமானாலும் அவர் ஒரு living legendதாங்க. செஸ் சரித்திரத்தில் கேஸ்பரோவ் மாதிரி ஒரு ஆள் கிடையவே கிடையாது! Capablanca, Alekhineலாம் இருக்காங்க, ஆனாலும் கேஸ்பரோ கேஸ்பரோதான்!

கேஸ்பரோ ஏதோ ELO ரேட்டிங் லிஸ்ட்டில் முதலில் இருக்காரே தவிர, இப்போதைக்கு #1 ப்ளேயர் ஆனந்துதான். இந்த தடவை ரேட்டிங் லிஸ்ட்டில், பல வருஷங்களுக்கு பிறகு முதல் முறையாக க்ராம்னிக் 3ஆவது இடத்தில் இருந்து கீழிறங்க போறாரு. முக்காவாசி Topalovதான் மூணாவதா இருப்பாரு. Morozevich இந்த டோர்னமெண்ட்டில் மீதி இருக்கிற ஆட்டங்கள்ல எவ்வளவு win பண்றாருன்றதை பொறுத்துதான் அவரோட place முடிவாகும். அவரோட இப்பொழுதைய formமை பார்க்கும்போது அவரு ELO listல நாலாவதுதான் வருவாருன்னு நினைக்க தோணுது. நேத்து Svidlerரோட ட்ரா பண்ணிண்டுட்டார். ரெண்டு பேருமே முந்தின ரவுண்ட்டில் தோற்றுப் போனதால், இது எதிர்பார்த்ததுதான். Bareev - Dreev ட்ரா, அதே மாதிரி Korotylev - Epishin ட்ரா. எனக்கென்னமோ Epishin எல்லாரோடையும் ட்ரா பண்ணியே அவரோட ரேட்டிங்கை 2600க்கு மேலே கொண்டு வந்திடுவார்னு தோணுது. அவர் பயங்கர strong & solid ப்ளேயர்ன்றது வேற விஷயம்.

Standings after round 4



இன்னிக்கு (19/11) ரெஸ்ட் டே.

நாளைக்கு Motylev bye. Svidler - Grischuk, Dreev - Korotylev, Timofeev - Morozevich, Epishin - Kasparov, Tsheshkovsky - Bareev ஆட்டங்கள் இருக்கு. Grishcukதான் இப்போதைய leader. +2 வச்சிருக்காரு. கேஸ்பரோ +1லயும், Svidler +0விலும், Morozevich -2லயும் இருக்காங்க. கேஸ்பரோ +4 எடுத்தே ஆகணும், இல்லைன்னா அவரோட ரேட்டிங் நிச்சயமா அடி வாங்கும்!

(மேலே இருக்கிற டேபிளில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு wins (1 point) இருக்கோ அவ்வளவு +1ம், தோல்வி ஒவ்வொண்ணுக்கும் -1ம் போட்டு மொத்தமா கூட்டுங்க. அதுதான் இந்த final + அல்லது - ஸ்கோர்).

Wednesday, November 17, 2004

 

Moro/Svidler தோல்வி!!

மூன்று சுற்றுக்கள் முடிஞ்சிருக்கு. இரண்டாம் ரவுண்டில் வாங்கின உதைல இருந்து இன்னும் Morozevich மீண்டு வரலைன்னு நினைக்கிறேன். நேத்து மூணாவது ரவுண்டில் Tsheshkovskyகிட்ட திருப்பி தோத்து போயிட்டாரு. (இரண்டாம் சுற்றை பார்த்துக்கொண்டிருந்த Kasparov, Morozevichசோட ஆட்டத்தை பார்த்துட்டு "இவன் என்ன Pelletierரோட விளையாடறோமுன்னு நினைச்சிண்டு இருக்கானா?!"ன்னு சொன்னாராம். Source: MiG)

Tsheshkovskyயோட rating 2577, Morozevichசோ 2758! இன்னொரு முக்கியமான விஷயம் Tsheshkovskyக்கு 60 வயசு!! ரஷியாவில வெளியே தெரியாம பல செஸ் திறமைகள் இருக்குதுன்றது எவ்வளவு உண்மை பாருங்க. அதே நேரம், ஒரு இந்தியன் GMனால இந்த மாதிரி ஏன் பண்ண முடியலைன்னும் கொஞசம் வருத்தமாதான் இருக்கு. I think, நம்ப GMs opponentடோட ரேட்டிங்கை பார்த்து மலைச்சு போயிடறாங்க. அவங்க Anand மாதிரி Board positionனை மட்டும் பார்த்து விளையாண்டா நிச்சயம் பெரியாட்களை நம்பளாலயும் தோக்கடிக்க முடியணும். இன்னொரு ஆட்டத்துல Svidler ஒரு 19 வயசு GMகிட்ட தோத்து போனாரு. Svidler இத்தனைக்கும் பல முறை ரஷியன் நேஷனல் சேம்ப்பியன்ஷிப் ஜெயிச்சவரு. Timofeev (அதாங்க அந்த 19 வயசு GMமோட பேரு!) Svidlerரை படு சுலபமா outplay பண்ணினதை பார்க்கும் போது, நிஜம்மாவே உடம்பெல்லாம் புல்லரிச்சிருச்சு. Grishchuk Dreevவோட விளையாண்டாரு. இரண்டு பேரும் 10 மூவ்வுக்கு அப்புறம் கை குலுக்கிண்டு எழுந்து போனது கொஞ்சம் எரிச்சல்தான். ICCல எல்லா ஆட்டங்களையும் நேரிடையா பார்த்துண்டு இருந்தேன், ரொம்ப நேரமா இவங்க boardல மட்டும் எதுவுமே மூவ் ஆகலை. என்னடா இதுன்னு பார்த்தா ட்ரா. நாலாவ்து ஆட்டமான Motylev - Korotoylevல Korotylev ஜெயிச்சாரு. இவர் 2ஆம் சுற்றில் கேஸ்பரோவை ட்ரா பண்ணினவரு.

ஆக, இப்போதைக்கு நிலவரம் படி எல்லாரும் அரை பாயிண்டாவது எடுத்துருக்காங்க. கார்ப்போவ் விளையாடி இருந்தா அவரு நிச்சயம் கடைசியாதான் இருந்திருப்பாரு. "நான் விளையாடாததுக்கு என்னோட மோசமான formமும் ஒரு காரணம். Sorry!" அப்படின்னு ஒரு பேட்டி கொடுத்திருக்காரு.


இன்னிக்கு (Nov 18th) Svidler bye. Kasparov விளையாடறாரு. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.

Tuesday, November 16, 2004

 

பெருந்தலைகள் பங்கேற்கும் ரஷியன் சூப்பர் சேம்பியன்ஷிப்

ரஷியன் சூப்பர் சேம்பியன்ஷிப் மாஸ்கோவில் நேற்று ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது. கேஸ்பரோவ் (Kasparov), க்ராம்னிக் (Kramnik), கார்போவ் (Karpov), ஸ்விட்லர் (Svidler), பரீவ் (Bareev), மொரோசெவிச் (Morozevich) மற்றும் க்ரிஸ்சக் (Grischuk), ஆக ஏழு முன்னணி ரஷியன் பெருந்தலைகள் விளையாடுகின்றனர். இவங்களோட விளையாட இன்னும் ஒரு ஆறு க்ராண்ட் மாஸ்டர்ஸ் தேர்வாயிருக்காங்க. இதுல Dreev, Epishin & Tsheshkovsky செயின்ட் பீட்டர்ஸ்பர்க் டோர்னமெண்ட்டிலும், Motylev, Timofeev & Korotylev டோம்ஸ்க் டோர்னமெண்ட்டிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள்.

இந்த டோர்னமெண்ட் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்பாக க்ராம்னிக் "எனக்கு உடம்பு சரியில்லை, அதனால நான் விளையாட மாட்டேன்"னு ஒரு அறிக்கை விட்டாரு. அவரு "கேஸ்பரோவை கண்டு பயந்துதான் ஒதுங்கிட்டாரு", "இல்லை, இல்லை, அவருக்கு நிஜம்மாவே லீகோவோட விளையாண்டதுக்கு அப்புறம் ரொம்ப சோர்வா இருக்கும்"னும் இரசிகர்கள் சண்டை போட்டுண்டு இருக்கும்போதே கார்போவும் "நானும் வரலை"ன்னு ஜகா வாங்கிட்டாரு! ஆக, 13 ஆட்டக்காரங்களோட ஆரம்பிச்சது 11ஆ வந்து நின்னது.

முதல் ரவுண்ட் நேத்து முடிஞ்சது.

Garry Kasparov (2813) - Evgeny Bareev (2715)
Alexander Motylev (2596) - Alexander Grischuk (2704)
Vladimir Epishin (2599) - Alexander Morozevich (2758)
Alexey Dreev(2698) - Artyom Timofeev (2611)
Vitaly Tseshkovsky (2577) - Peter Svidler (2735)

Korotylev விளையாடவில்லை.

"விளையாடவில்லை"ன்னா அவரும் விளையாடாம ஜகா வாங்கிட்டாருன்னு அர்த்தம் கிடையாது. மொத்தம் பதினொன்னுன்னு odd நம்பர் இருப்பதால் ஒவ்வொரு சுற்றிலும் ஒருத்தர் விளையாடாம இருக்கற மாதிரிதான் ஆகும். (called "bye" in English).




கேஸ்பரோவுக்கு நல்ல ஸ்டார்ட்டுன்னுதான் சொல்லணும். பரீவ்வை தோக்கடிச்சு ஒரு பாயிண்ட்டில் இருக்காரு. Grischuk கறுப்பு காய்களை வைத்து விளையாடி Motylevவை தோக்கடிச்சார். Morozevich ஆரம்பத்துல Epishinனை பயங்கரமா போட்டு வாட்டு வாட்டுன்னு வாட்டிண்டு இருந்தாரு, ஆனா Epishin கலக்கலா எல்லா பிரச்சினையையும் சால்வ் பண்ணி ஆட்டத்தை ட்ரா பண்ணிட்டாரு. GM ஆட்டத்தை கமெண்ட் பண்ணுற அளவு எனக்கு ஒண்ணும் செஸ் தெரியாது, ஆனா Epishinனோட ஆட்டத்துல இருந்து நிச்சயம் நம்ப நிறைய கத்துக்கலாம்னுதான் தோணுது. (உம்மாச்சி கருணையினாலதான் Epishin தப்பிச்சாருன்னு எல்லாரும் சொல்றது வேற விஷயம்.) Dreev & Timofeev ஆட்டம் ட்ரா. Svidlerக்கு எதிரான ஆட்டத்துல 29ஆம் மூவில் Tsheshkovsky ஒரு தப்பு பண்ணினாரு. அவ்வளவுதான்! Svidler அதுக்கு அப்புறம் Tsheshkovskyக்கு கொஞ்சம் கூட வாய்ப்பே குடுக்காம முழு பாயிண்ட்டையும் எடுத்துண்டுட்டார்.

முதல் சுற்றுக்கு அப்புறம் பாயிண்ட்ஸ் டேபிள் :


இன்னிக்கு (Nov 16,04) இரண்டாவது சுற்று விளையாட போறாங்க.

Artyom Timofeev (2611) - Vitaly Tseshkovsky (2577)
Alexander Morozevich (2758) - Alexey Dreev (2698)
Alexander Grischuk (2704) - Vladimir Epishin(2599)
Evgeny Bareev (2715) - Alexander Motylev (2596)
Alexey Korotylev (2596) - Garry Kasparov (2813)

Svidler விளையாடவில்லை.

இன்னிக்கு கேஸ்பரோவ் எப்படி விளையாட போறார்ன்னு பார்ப்போம்.

[Update:
Korotylev - Kasparov 1/2 - 1/2.
Moro - Dreev 0-1]


Wednesday, November 10, 2004

 

தினம் ஒரு Puzzle 3


Puzzle for 2004/11/10

ஒரு நீண்ட விடுமுறையில் ஊர் சுற்றிக்கொண்டிருப்பதால் சில (பல ?!)நாட்களுக்குப் பின் மீண்டும் ஒரு Puzzle.

D.O.P 2 வின் விடை: 1) Qxf7+ Rxf7 2) Re8+ Rf8 3) Rxf8+ Kxf8 4) Re8#

Tuesday, November 09, 2004

 

ஆனந்த் பேட்டி

இந்து பேப்பரில் மட்டும்தான் செஸ் பற்றின அதிக கட்டுரைகளை காண முடிகிறது. மேனுவல் ஆரோன் (இந்தியாவின் முதல் International Master), அரவிந்த் ஆரோன் என்று பலரின் கட்டுரைகள் வெளியாகும். எல்லாமே அப்படியே "Best கண்ணா Best"ன்னு சொல்ல மாட்டேன், ஆனா செஸ் பற்றின ஆர்டிகிள்களை, அது எப்படி இருந்தாலும், படிக்கிறதே சுகம்தான்.

இன்னிக்கு (10/11/2004) இந்துவில் ஆனந்தை பேட்டி கண்டு போட்டிருக்கிறார்கள். ஆனந்த் அவரோட கோர்சிகா மாஸ்டர்ஸ் வெற்றி, இந்த வருஷமும் எப்படி அவருக்கு நல்ல வருஷமா இருக்கு ம்ற்றும் ரூப்லெவ்ஸ்கி/மோட்லீவ் பற்றியெல்லாம் சொல்லிருக்காரு.

Thursday, November 04, 2004

 

தினம் ஒரு Puzzle [2]


Puzzle for 2004/11/04

White to play and mate.

 

கோர்சிகா மாஸ்டர்ஸ்

கோர்சிகாவில் மாஸ்டர்ஸ் டோர்னமெண்ட் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. ஆனந்த், டோப்பலோவ், ஷிரோவ், பக்ராட் போன்ற பெரிய தலைங்க விளையாடறாங்க. இவங்க எல்லாரும் 2700க்கு மேல ரேட்டிங் வச்சிருக்கிறவங்க. 2650 ரேட்டிங் இருந்ததுன்னா அவங்க Super-GM, 2700க்கு மேலே இருந்தா Elite-GM. பக்ராட் 2700க்கு மேலே போனதை சிலரால இன்னும் நம்ப முடியலை, ஏன்னா அவரை விட திறமைசாலிங்க பலர் இன்னும் இந்த 2650 - 2700 கட்டத்தை தாண்டி போக முடியாம தவிச்சுண்டு இருக்காங்க.

இந்த கோர்சிகன் டோர்னமெண்டை ஆனந்த்தான் பல வருஷங்களா ஜெயிச்சுண்டு இருக்காரு. இந்த தடவையும் அவர்தான் கப் வாங்குவார்னு நினைக்கிறேன். ஷிரோவ் & டோப்பலோவ் அரை இறுதி ஆட்டத்துக்கு முன்னாடியே காலி. பக்ராட்டையும் ஆனந்த் அரை இறுதில ஒரு குத்து குத்தி வீட்டுக்கு அனுப்பிச்சுட்டார். ஆக, இப்போ இறுதி ஆட்டம் ஆனந்துக்கும் ரூப்லெவ்ஸ்கின்ற ரஷிய நாட்டை சேர்ந்தவருக்கும்தான். இவங்க இரண்டு ஆட்டம் விளையாடணும். முதல் ஆட்டம் இப்போதான் முடிஞ்சது. ஆனந்துக்கு ஒரு பாயிண்ட். :)

என்னோட ஆங்கில வலைப்பதிவுல இப்போ சமீபத்தில் முடிஞ்ச ஒலிம்பியாட் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கேன். ஒலிம்பியாட் பற்றி இங்க இன்னொரு பதிவுல பார்ப்போம்.

[Update:
இரண்டாவது ஆட்டத்தை ஆனந்த் ஜெயிச்சு இந்த வருஷ
கோர்சிகன் மாஸ்டர்ஸ் கப்பையும் வாங்கிட்டார். ஆனந்த் - ரூப்லெவ்ஸ்கி 2 - 0 :)
]


Wednesday, November 03, 2004

 

தினம் ஒரு Puzzle


Puzzle for 2004/11/03.

இந்த பொசிஷனில் கறுப்பு விளையாட வேண்டும். Mate in 3 ஒண்ணு இருக்கு. என்ன மூவ் சரின்னு நினைக்கறீங்க?

Monday, November 01, 2004

 

செஸ் அல்ஜீப்ரைக் குறியீடு - பாகம் 2

அல்ஜீப்ரைக் குறியீட்டை விளக்கும் டாக்குமெண்ட்டின் இரண்டாம் பாகத்தை படிக்க இங்கு க்ளிக்குங்கள். இதுதான் கடைசி பாகம். படிச்சு பார்த்துட்டு ஒரு பின்னுட்டம் போட மறந்துடாதிங்க.

The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?