Monday, November 22, 2004
Chess is a violent game!
Tseshkovsky - Kasparov (c) Chesspro.ru
அப்படியே கட்டிலில் மல்லாக்க படுத்துண்டு, computerரை நெஞ்சில் முட்டுக்கொடுத்து வைத்து ஏதாவது தின்றுக்கொண்டே கேஸ்பரோவ் ஜெயிக்கறதை ICCயில் பார்ப்பதில் உள்ள சுகம் அட அட அட...அனுபவித்தால்தான் புரியும். நேத்து ஒரு 4 மணி நேரம் "நாளைக்கு ஒரு presentation இருக்கே, deadline வேற பக்கத்துல வந்துடுச்சே!" அப்படின்ற கவலையெல்லாம் மறந்து நான் ICCலயும் Playchessலயும் ஐக்கியமாயிட்டேன்னா பாருங்க, அவ்வளவு இன்ட்ரெஸ்டிங்கா இருந்தது நேத்து ஆட்டங்கள்!!
அதுலயும், இந்த Tseshkovsky இருக்காரே...அம்மா! அவருக்கு 60 வயசுன்னா யாரும் நம்ப மாட்டாங்க...அவரு பாட்டுக்கு World #1 கேஸ்பரோவோட விளையாடறோம், பார்த்து ஜாக்கிரதையா விளையாடணும்னெல்லாம் கவலையே படாம, பயங்கர attacking ஆட்டம் ஆடினார்! அதுவும் கேஸ்பரோவோட இஷ்ட ஓப்பனிங்கான Sicilian Scheveningenலயே (சிசிலியன் ஷவெனிகன்) !!
(3) Tseshkovsky,V (2577) - Kasparov,G (2813)
[B84]57th ch-RUS Moscow RUS (7),
22.11.2004
1.e4 c5 2.Nf3 d6 3.d4 cxd4 4.Nxd4 Nf6 5.Nc3 a6 6.Be2 e6 7.0-0 Be7 8.a4 Nc6 9.Be3 0-0 10.f4 Qc7 11.Kh1 Re8 12.Bg1 Bd7 13.Nb3 b6 14.Bf3 Rab8 15.Qe2 Nb4 16.e5 Nfd5 17.Nxd5 Nxd5 18.Be4 b5 19.Nd4 g6 20.f5 exf5 21.Bxd5 dxe5 22.Nxf5 Bxf5 23.Rxf5 gxf5 24.Qh5 Bf8 25.Qxf5 Bg7 26.Ra3 e4 27.Rh3 h6 28.Rg3 Qe5 29.Bxf7+ Kh8 30.Qg6 Rf8 31.axb5 axb5 32.Bd5 Rf1 33.c3 Rbf8 34.h3 Qf6 35.Bxe4 Qxg6 36.Rxg6 Re8 37.Bd3 Rd1 38.Rd6 Bf8 39.Bg6 Bxd6 0-1
21)...dxe5 க்கு பிறகு Tseshkovsky ஒரு முழு piece upபா இருந்தாரு, அவர் சிம்பிளா இந்த அட்வான்ட்டேஜ்ஜை தக்க வச்சிண்டிருந்தாலே கேஸ்பரோவுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கும். ஆனா, நம்ப Tsheshkovskyக்குதான் fighting spirit ரொம்ப ஆச்சுதே..அவருகிட்ட இருந்த extra pieceசை exchange, அடுத்து ஒரு ரூக்கை sacrificeன்னு விளையாடி கேஸ்பரோவோட king sideடை நிர்மூலமாக்கிட்டார். நிஜம்மா சொல்றேங்க, இந்த மூவ்களை நேரிடையா பார்த்த போது எனக்கு கிடைத்த ஒரு adrenaline rush எனக்கு ஒரு சில விஷயங்களை தவிர எதிலும் கிடைச்சதில்லை!!
செஸ் ஒரு violent கேம். வெறுமனே ஒரு போர்ட்டுக்கு முன்னாடி இரண்டு ஆளுங்க உட்கார்ந்த்து வெட்டித்தனமா பொழுது போக்கறாங்கன்னு யாராவது நினைச்சிங்கன்னா, sorry, you cannot be more wrong! செஸ்ல கேஸ்பரோவ், Fischer, லாஸ்கர் மாதிரி பெரியாட்கள்லாம், பெரியாட்கள் ஆக காரணமே அவங்ககிட்ட இருந்த அந்த ஒரு killer instinctதான். ஆனந்துக்கிட்ட அது குறைவாயிருக்கறனாலதான் இன்னும் அவரால கேஸ்பரோவை convincingகா தோக்கடிக்க முடியலன்னு சொல்ற ஒரு கும்பலும் இருக்கு (அதுல நானும் ஒருவன் என்பது வேறு விஷயம்!). இந்த Killer instinct எல்லார்கிட்டயும் ஏதாவது ஒரு அளவில் இருப்பதால்தான் இன்னும் நம்மால் சினிமா சண்டை காட்சிகள், WWF போன்ற விஷயங்களை இரசித்து பார்க்க முடிகிறது. சில பேருக்கு WWF, சில பேருக்கு செஸ்! எனக்கு செஸ் பிடித்துப் போனதற்கு இதுவும் ஒரு காரணமோ என்று இப்பொழுது யோசித்து பார்க்கையில் தோணுது. நம்ப "ஹாய் மதன்"கிட்ட கேட்டா "இதெல்லாம் ஒரு வகையில் நமக்குள் இருக்கும் மிருகத்துக்கு தீனி போடுவது"ன்னு சொல்லுவார்னு நினைக்கிறேன்! Don't get me wrong, WWF பார்க்கறவங்களும் செஸ் விளையாடறவங்களும் violentடானவங்கன்னு நான் சொல்ல வரலை. மக்களுக்கு violenceசுன்னு ஒண்ணு பிடிப்பதற்கு காரணமே they get a vicarious releaseன்றதுனாலதான்!
சரி, என்னோட புலம்பல்ஸை அப்புறம் வச்சிக்கிறேன்....
Tseshkovsky மட்டும் அந்த அட்டாக்கை ஒழுங்கா follow-up பண்ணியிருந்தாருன்னா கேஸ்பரோ நிச்சயம் தோத்திருப்பாரு. ஆனா, Tseshkovsky இரண்டு மூணு தப்பான ஐடியாக்களை விளையாடவும், கேஸ்பரோவ் அப்படியே ஆட்டத்தின் போக்கை மாத்திட்டார். கடைசியில் Tseshkovsky resign பண்ணுமாறு ஆயிற்று. உங்களுக்கு செஸ்ல interest இருந்தா நிச்சயம் இந்த ஆட்டத்தை ஒரு போர்ட்டில் விளையாடி பாருங்க, miss பண்ணிடாதீங்க....ஆட்டத்தை algebraic notationனில் மேலே கொடுத்திருக்கிறேன். Tseshkovsky 2 தடவை ரஷியன் சேம்பியன் பட்டம் பெற்றவர். இவரோட பழைய ஆட்டங்களை இந்த சனி/ஞாயிறு தேடி பிடிச்சு விளையாடி பார்க்கணும்னு இருக்கேன். அதே போல, Tseshkovskyக்கு ஒரு இரசிகர் மன்றமும் ஆரம்பிக்கலாமுன்னு ஐடியா. என்ன சொல்றீங்க? :)
Svidlerரும் நேத்து Korotylevவை தோக்கடிச்சு +1க்கு வந்துட்டார். இவர் பெரிய ஆளுங்க. So, இவர் ஒரு 2600 GMமை தோக்கடிக்கறது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை. Timofeev - Bareev, Morozevich - Grischuk & Dreev - Motylev இவங்களோட ஆட்டங்கள் ட்ராவில் முடிஞ்சது. Dreev - Motylev மட்டும்தான் நிஜம்மாவே சண்டை போட்டு (போர்ட்டில்தான்!) சமாதானமானாங்க..மத்த இரண்டு ஆட்டங்களும் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே முடிஞ்சிருச்சு!
Standings after Rd 7
கேஸ்பரோதான் இப்போதைக்கு லீடிங், +3 வச்சிருக்கார் . Svidler +1 வந்துட்டார். நம்ப ஹீரோ Tseshkovsky கடைசில இருக்காரு. For playing brilliant, attacking chess, kudos to him!
இன்னிக்கு ரெஸ்ட் டே. நாளைக்கு Kasparov Svidlerரோட விளையாடணும். மத்த ஆட்டங்கள்: Epishin - Dreev, Korotylev - Timofeev, Bareev - Morozevich & Motylev - Tseshkovsky.
|