Friday, November 19, 2004
கேஸ்பரோவுக்கு வயசாயிடுச்சு!!
நேத்து (18/11) நடந்த நாலாவது சுற்றில் நடந்த 5 ஆட்டங்களில் 4 ஆட்டம் ட்ரா. Grishcukனால மட்டும்தான் ஒரு முழு பாயிண்ட் எடுக்க முடிந்தது. என்னோட latest favorite Tsheshkosky தோத்து போனது கொஞ்சம் வருத்தம்தான், ஆனா 55 மூவ் வரைக்கும் நல்ல tough fight கொடுத்ததுக்கே அவரை பாராட்டணும். கடைசியிலே அவர் பண்ணின ஒரு சின்ன தப்பினால Grischukகுக்கு 1 பாயிண்ட். கேஸ்பரோவ் வழக்கம் போல (!?) ஒரு advantageல இருக்கிற பொசிஷனை, Motylevக்கு எதிரா, win பண்ணாம ட்ரா பண்ணினார். "Winning a won position is the most difficult thing"னு சொல்லுவது என்னை மாதிரி Patzerக்குதான்னு நினைச்சேன், பார்த்தா கேஸ்பரோவுக்கும் ஒத்து வரும் போல இருக்கு! :) (Patzerனா "செஸ் கத்துக்குட்டி"ன்னு அர்த்தம்). அவரு கடைசில ஒரு easy மூவ்வை மிஸ் பண்ணினது, அவரோட ரேஞ்சுக்கு கொஞ்சம் கேவலம்தான். இதே ஒரு பத்து வருஷத்துக்கு முந்தின கேஸ்பரோவ்வா இருந்திருந்தா Motylevவை தூக்கி போட்டு மிதிச்சிருப்பாரு (உண்மையில இல்லைங்க, Chess gameலதான்!). இப்போ இருக்கிற கேஸ்பரோவினால், வயது காரணமாகவோ இல்லை அவரோட மத்த commitmentsனாலயோ, முன்ன மாதிரி விளையாட முடியலைன்றதுதான் உண்மை! ஆனா ஒண்ணுங்க, அவரு நாளைக்கு என்கிட்டயே தோத்து போற அளவு மோசமானாலும் அவர் ஒரு living legendதாங்க. செஸ் சரித்திரத்தில் கேஸ்பரோவ் மாதிரி ஒரு ஆள் கிடையவே கிடையாது! Capablanca, Alekhineலாம் இருக்காங்க, ஆனாலும் கேஸ்பரோ கேஸ்பரோதான்!
கேஸ்பரோ ஏதோ ELO ரேட்டிங் லிஸ்ட்டில் முதலில் இருக்காரே தவிர, இப்போதைக்கு #1 ப்ளேயர் ஆனந்துதான். இந்த தடவை ரேட்டிங் லிஸ்ட்டில், பல வருஷங்களுக்கு பிறகு முதல் முறையாக க்ராம்னிக் 3ஆவது இடத்தில் இருந்து கீழிறங்க போறாரு. முக்காவாசி Topalovதான் மூணாவதா இருப்பாரு. Morozevich இந்த டோர்னமெண்ட்டில் மீதி இருக்கிற ஆட்டங்கள்ல எவ்வளவு win பண்றாருன்றதை பொறுத்துதான் அவரோட place முடிவாகும். அவரோட இப்பொழுதைய formமை பார்க்கும்போது அவரு ELO listல நாலாவதுதான் வருவாருன்னு நினைக்க தோணுது. நேத்து Svidlerரோட ட்ரா பண்ணிண்டுட்டார். ரெண்டு பேருமே முந்தின ரவுண்ட்டில் தோற்றுப் போனதால், இது எதிர்பார்த்ததுதான். Bareev - Dreev ட்ரா, அதே மாதிரி Korotylev - Epishin ட்ரா. எனக்கென்னமோ Epishin எல்லாரோடையும் ட்ரா பண்ணியே அவரோட ரேட்டிங்கை 2600க்கு மேலே கொண்டு வந்திடுவார்னு தோணுது. அவர் பயங்கர strong & solid ப்ளேயர்ன்றது வேற விஷயம்.
Standings after round 4
இன்னிக்கு (19/11) ரெஸ்ட் டே.
நாளைக்கு Motylev bye. Svidler - Grischuk, Dreev - Korotylev, Timofeev - Morozevich, Epishin - Kasparov, Tsheshkovsky - Bareev ஆட்டங்கள் இருக்கு. Grishcukதான் இப்போதைய leader. +2 வச்சிருக்காரு. கேஸ்பரோ +1லயும், Svidler +0விலும், Morozevich -2லயும் இருக்காங்க. கேஸ்பரோ +4 எடுத்தே ஆகணும், இல்லைன்னா அவரோட ரேட்டிங் நிச்சயமா அடி வாங்கும்!
(மேலே இருக்கிற டேபிளில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு wins (1 point) இருக்கோ அவ்வளவு +1ம், தோல்வி ஒவ்வொண்ணுக்கும் -1ம் போட்டு மொத்தமா கூட்டுங்க. அதுதான் இந்த final + அல்லது - ஸ்கோர்).

Comments:
<< Home
// கேஸ்பரோ ஏதோ ELO ரேட்டிங் லிஸ்ட்டில் முதலில் இருக்காரே தவிர, இப்போதைக்கு #1 ப்ளேயர் ஆனந்துதான். //
இப்படி பொத்தம் பொதுவாக ஆனந்தான் # 1 என்பதை கொஞ்சம் விளக்கி சொன்னால் நன்றாக இருக்கும், ELO ரேட்டிங்கில் வேறு காஸ்பரோவ் முதலிடம் என்று சொல்கிறீர்கள்.

கண்ணன் - தோப்லோவ் மூன்றாவது இடத்திற்கு வந்தாலும் மோரோஸெவிச் ரொம்ப நாளைக்கு விட்டு வைக்காமாட்டார் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் க்ராம்னிக் கீழே வருவது நல்லதுதான்.
இந்த ஈஎல் ஓ ரேட்டிங்கே ரஷ்யர்கள் தோற்றாலும் கீழே இறங்காமல் இருக்க ஏற்ற வகையில்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. மற்ற விளையாட்டுகளில் இப்படி பழங்கதைகளுக்கு அதிக மதிப்பு இருக்காது. ஆனந்த் பொதுவிலும் ஹம்பி இளம் பெண்கள் பகுதியிலும் முதலிடத்தில் வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். - வெங்கட்

பரணீதரன், ஆனந்த்துதான் இப்போதைக்கு the most strong active player. ஒரு இரண்டு வருஷமா எல்லா பெரிய டோர்னமெண்ட்டையும் அவர்தான் ஜெயிச்சுண்டு இருக்காரு. அவரோட ELO ரேட்டிங் மேலே போயிண்டு இருக்கறதும், அதே நேரத்துல Kasparov/Kramnik ELO listல கீழே போயிண்டு இருக்கறதுமே இதுக்கு proof. ஆனா அதுக்காக Kramnik weakனு நான் சொல்லவரலை.
வெங்கட், டொப்பலோவே அடுத்த listல திரும்பி அவரோட usual இடமான ஐந்தாவது இடத்துக்கோ, இல்லை ஆறாவது இடத்துக்கோ போயிடுவாருன்னுதான் நினைக்கிறேன். மொரோசெவிச் நான்காவது இடத்துக்கு svidlerரோட போட்டி போடுவாரே தவிர KKA முக்கோணத்தை அவரால உடைக்க முடியும்னு தோணலை. அதே மாதிரி, Kramnik & Leko நிச்சயம் அடுத்த ELO listல மேலே வந்துடுவாங்க.
Post a Comment

|