Friday, July 08, 2005

 

எங்கங்க நேரம் இருக்கு?!

ஆபீஸ்ல காலைல வந்து 10.30-க்கு மீட்டிங் அட்டெண்ட் பண்ண ஆரம்பிச்சா சாயந்திரம் ஆறு மணி, இல்லை சில நேரம் நடு இராத்திரி வரைக்கும் மீட்டிங் ரூம்லயே பொழுது ஓடி போயிடுது. என்னமோ கம்பெனி GM ரேஞ்சுக்கு சொல்லுறனேன்னு நினைக்காதிங்க, என் கம்பெனியோட culture அப்படி! இதுலயும், ஒவ்வொரு மீட்டிங்லயும் என்னோட ப்ராஜக்ட் எந்த நிலமைல இருக்கு, அடுத்த வாரம் எங்க இருப்போம், என்ன என்னல்லாம் பிரச்சினையா இருக்குன்னு பேசறதுதான் வேலையே! எல்லா டைமும் இப்படி status update கொடுக்கறதுல என்ன ப்ராப்ளம்னா, அடுத்த ரிப்போர்ட் தரதுக்கு வேற எதுவும் வேலை செய்ய டைம் கிடைக்காம போறதுதான்! சரி, ஒவ்வொரு நாள் ஈவினிங்காவது ஏதாவது பண்ணலாம்னு பார்த்தா, கரெக்ட்டா 6.30 மணிக்கு வருங்கால வீட்டுக்காரிக்கிட்ட இருந்து ஃபோன் வந்துடுது - "எப்ப கிளம்பறே??" ! என்னத்தான் டைம் மேனேஜ்மண்ட் ப்ளான் போட்டாலும், ஒரு நாளைக்கு 24 மணி நேரம்ன்றது பத்தாமத்தான் போயிண்டு இருக்கு! இந்த ப்ளாக்லாம் அப்டேட் பண்ணி ரொம்ப நாளாகுதேன்னு அடிக்கடி தோணினாலும், எழுதறதுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும், கிடைக்கற ஒரு அரை மணி நேரத்தையும் ப்ளாக்குக்கு செலவழிக்கறத விட வேற எதுக்காகவாவது யூஸ் பண்ணலாமேன்னுதான் தோணுது.

இன்னிக்கு (Friday) Dortmund ஆரம்பிக்குது. இதுக்கு லைவ் கேஸ்ட் கிடையாதுன்னுட்டாங்க, அப்பத்தான் நிறைய மக்கள் நேர வந்து பார்ப்பாங்களாம். என்ன லாஜிக்கோ, என்ன எழவோ! லீகோ/க்ராம்னிக்/டோப்பலோவ்/ஆடம்ஸ் விளையாடறாங்க. சுடோவ்ஸ்கி எப்படி விளையாடறார்னு பார்க்கணும். எப்படியாவது நேரம் ஒதுக்கி இந்த டோர்னமெண்ட்டை ஃபாலோ பண்ணனும்!

அமுதசுரபி பத்திரிக்கைல இந்த தடவை என்னோட ஆர்டிகிள் ஒண்ணு வந்திருக்கு. அதோட எடிட்டர் அண்ணா கண்ணன் ஒரு நாள் ஏதாவது செஸ் பத்தி என்னால எழுதி தர முடியுமான்னு கேட்டாரு. இரண்டு நாள்ல தரேன்னு அவர்கிட்ட ஒத்துண்டுட்டனே தவிர என்னால பாதிதான் நான் நினைச்சதுல எழுத முடிஞ்சது. ஆபீஸ் வேலைகளை ரொம்ப under estimate பண்ணினதுனாலே வந்த வினை! கடைசில நான் எழுதின வரைக்கும் அவருக்கு அனுப்பிச்சு வச்சேன்! மனுஷன் அதையும் ஒரு ஆர்டிகிளா மதிச்சு அங்கங்கே கரெக்ட்டும் பண்ணி publish பண்ணியிருக்கார்! ரொம்ப தேங்ஸ், அண்ணா கண்ணன்!
Comments:
கண்ணன்,

puzzle 14-க்கு விடை யோசித்து யோசித்து மண்டை காய்ந்துவிட்டது. ஏதோ எனக்குத் தெரிந்ததை puzzle 14-ன் பின்னூட்டமாக எழுதியுள்ளேன்.
 
As Jorn Barger, inventor of the term 'weblog', says,

"The more interesting your life becomes, the less you post... and vice versa."

So I guess you are doing fine. ;-). Amuthasurabhi paarkanum!
 
லதா, ரொம்ப சாரிங்க, கூடிய சீக்கிரம் இன்னொரு புதிரையும் + புதிர் 14க்கான விடையையும் போஸ்ட் பண்ணறேன்.

Yagna, இங்க office-ல வேலை ரைட் அண்ட் லெப்ட் வாங்கறாங்க! Unfortunately, I was not able to follow the live transmission of the last 3 games of Dortumund too! Btw, Barger said it right :)
 
It seems you are not updating on this Blog anymore..

I am also a chessPlayer and an avid follower of International Chess

would like to start a blog in Tamil in chess...Can u guide?
 
Post a Comment

<< Home
The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?