Wednesday, May 25, 2005

 

டோப்ப"ஹை"!!

MTel masters டோர்னமெண்ட்டை டோப்பலோவ் ஜெயிச்சதை எல்லா வெப் சைட்லயும் பார்த்திருப்பிங்க. இந்த டோர்னமெண்ட் பல கேள்விகளை கிளப்பி விட்டுருக்கு... ஏன் ஒரு டாப் 10 ப்ளேயர்னால முழு டோர்னமெண்ட்டையும் டாமினேட் பண்ண முடியலை? அப்போ, கேஸ்பரோவை தவிர மீதி டாப் - 20 ப்ளேயர்கள் எல்லாரும் கிட்டத்தட்ட ஒரே லெவல்தானா? கேஸ்பரோவுக்கு அடுத்து ஆனந்த்தா, க்ராம்னிக்கா, இல்லை லீகோவான்னு எல்லாரும் யோசிச்சுண்டு இருக்கும்போது, "நானும் இருக்கேன், மறந்துடாதீங்க!"-ன்னு டோப்பலோவ் கலக்கலா விளையாடறாரு... Actual-லா பார்த்தா, இப்போதைக்கு பெஸ்ட் ப்ளேயர்னு பார்த்தா, அது டோப்பலோவாத்தான் இருக்கும். டோப்பலோவோட ப்ளேதான் கொஞ்சமாவது கேஸ்பரோவோடது மாதிரி இருக்கு. ஆனந்த் சுத்தமா ஒரு ambition-னே இல்லாம விளையாடிண்டு இருக்கார், க்ராம்னிக்கோ "I am an artist" அப்படி இப்படின்னு ஏதாவது சொல்லிண்டு 20 மூவ்ல தோத்துண்டு இருக்கார், லீகோவோடது ஓவர் சாலிட் ப்ளே...நிஜமாவே கேஸ்பரோவ் மாதிரி ஒரு டோட்டல் டாமினேட்டிங் personality-யை இனிமே பார்க்கறது ரொம்ப கஷ்டம்தான்! கர்யாகின்தான் ஒரே ஹோப்!

இப்போ FIDE ப்ளான் பண்ணிண்டு இருக்கிற championship மட்டும் ஒழுங்கா நடந்ததுன்னா, யாரு அடுத்து நம்பர் ஒன் அப்படின்னு தெரிஞ்சுடும்! ஆனந்த் இந்த டோர்னமெண்ட்டை வின் பண்ணியே ஆகணும், இல்லைன்னா மத்தவங்கள்லாம் அவரை அப்படியே sideline பண்ணிட்டு போயிண்டே இருப்பாங்க..

செஸ்பேஸ் மேகசின் 105 நேத்து எனக்கு கொரியரில் வந்தது. இந்த தடவை ஆச்சரியமா, செஸ்பேஸ் அந்த மேகசினை ரிலீஸ் பண்ணின மூணாவது நாளே எனக்கு Chess Mate-கிட்ட இருந்து ஒரு மெயில் -- "We will send you your copy of CB magazine 106 today evening. You should be receiving it tommorow evening, at the most"-ன்னு! சொன்ன மாதிரியே கைக்கும் வந்தாச்சு, ஆனா இன்னும் நான் அந்த CD-யை போட்டு பார்க்கலை...ஒவ்வொரு நாளும் hectic-கா போயிண்டு இருக்கு, எப்போடா வீட்டுக்கு போவோம், தூங்குவோம்னுதான் இருக்கு, போற போக்கை பார்த்தா வீட்டுக்கு தூங்கறதுக்கும் பல்லு தேய்க்கறதுக்கும் மட்டும்தான் போவேன்னு நினைக்கிறேன்...At least, இந்த வார சனி, இல்லை ஞாயிறிலாவது இந்த் CD-யை பார்த்தே ஆகணும்.
Comments: Post a Comment

<< Home
The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?