Wednesday, March 09, 2005

 

The real boss!

இது வரைக்கும் நடந்த எந்த ரவுண்டுமே இவ்வளவு இண்ட்ரெஸ்டிங்கா இருந்தது இல்லை, ஒரு பக்கம் கேஸ்பரோவ் ஆடம்ஸை 26 மூவில் தோக்கடிக்கறார், இன்னொரு பக்கம் டோப்பலோவ் கஸிம்ஜனோவை அழ விட்டுண்டு இருந்தார், இன்னொரு போர்ட்டில் நம்ப ஆனந்த் தோத்து போற நிலையில், ஒரு ட்ராவுக்காக் ரொம்ப கஷ்டப்பட்டுண்டு இருந்தார்...எந்த ஆட்டத்தை பாலோ பண்ணுறதுன்னே தெரியலை!! Pretty exciting stuff.

Thx Chessbase

சில பல weird things-சும் நடந்தது. ஆடம்ஸ் ஏன் இவ்வளவு ஷார்ப் Najdorf லைன் ஓப்பனிங்ல விளையாண்டாருன்னு தெரியலை. அவர் ஸ்டாண்டர்ட் English attack formation-னுக்கு போன போது, வழக்கம் போல படு solid-டா விளையாடி ஒரு ட்ராத்தான் ஆகப்போகுதுன்னு நினைச்சேன், ஆனா, அவர் g5, h4, h5. g6 விளையாடி வேற ஏதோ ஐடியா வச்சிருக்கற மாதிரி ஒரு build up கொடுத்தார். சரி, மனுஷன் ஏதோ வீட்டில் prepare பண்ணிண்டு வந்திருக்கார்னு பார்த்தா, ரொம்ப நேரம் யோசிச்சி Bg5?! விளையாடினார்...கேஸ்பரோவ்கிட்ட, அதுவும் Najdorf-ல, intuition-னை மட்டும் நம்பி விளையாடறது, கண்ணை மூடிண்டு மவுண்ட் ரோட்டில் நடக்கற மாதிரி. நிச்சயம் சங்குதான்!!

அப்படியே சைடில் ChessFM கமெண்டரியும் கேட்டுண்டு இருந்தேன். நேத்து Larry Christiansen-னும், Jennifer Shahade-ம் அனலைஸ் பண்ணினாங்க. Christiansen analysis வழக்கம் போல படு ப்ரில்லியண்ட். Jennifer analyze பண்ணி இதுதான் முதல் முறையா கேட்கறேன், அவங்க pronounciation reminded me of my Chinese-American colleague :)

கேஸ்பரோவ் எப்போ 12)...Nxb4 விளையாண்டாரோ, அப்போ இருந்தே Christiansen Nxc2 ஐடியாவை அனலைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டார், கடைசில ஆடம்ஸின் Nb3? மூவிற்கு கேஸ்பரோவ் அதைதான் விளையாண்டாரு, very impressive. அவர் பயங்கர tactical ப்ளேயர்ன்றதுனாலதான் இந்த ஐடியாவை அவ்வளவு சீக்கிரமே candidate moves list-ல சேர்த்துண்டாருன்னு நினைக்கிறேன். அதே மாதிரி, Adams Bh6!? விளையாண்டா என்ன ஆகும்னு ஒரு சூப்பர் லைன் கொடுத்தார், excellent stuff, just heard to be believed!! எனக்கு அவர் பேசி கேட்க கேட்க, அப்படியே உடனே போய் ஏதாவதொரு Chess club-ல சேர்ந்து ஒரு GM கிட்ட்யோ, இல்லை ஒரு IM கிட்டயோ கத்துண்டு பெரிசா ஏதாவது பண்ணனும்னு தோணிச்சு ( இன்னிக்கு காலையில் வழக்கம் போல ஆபீஸ் கவலை மட்டும்தான், மத்தது எல்லாமே "போயே போச்சு"! :) அந்த enthu persistent-டா இருந்தா நல்லா இருக்கும்). Christiansen-னோட புக் "Storming the barricades" full-லா tactics-தான், கிடைச்சா நிச்சயம் படிச்சு பாருங்க. நல்ல புக்.

செஸ்பேஸ் Fredrick Friedel லைவ் வீடியோ பேட்டி ஒண்ணு ட்ரை பண்ணினார். நம்ப ஆனந்த்தோட செகண்ட் உபிலவாதான் (Ubilava) முதல்ல மாட்டினது. உபிலவா கார்ப்போவ்கிட்ட செகண்ட்டா இருந்தவராம், எனக்கு நேத்து அவர் சொல்லித்தான் தெரியும். பயங்கர soft spoken. வீடியோ ரொம்ப மக்கர் பண்ணினதுனால, வெறும் ஆடியோ இண்டெர்வியூ மட்டும் பண்ணிண்டு இருந்தாரு, ப்ரெட்ரிக். அடுத்து மாட்டினது Ljubojevic. பயங்கர டைனமிக் ஆளா தெரிஞ்சார் அவர். திடீர்னு ஸ்பானிஷ், திடீர்னு இங்கிலீஷ்னு பூந்து விளையாடிண்டு இருந்தார். ஜார்ஜியன் வேற பேசுவாராம்! அவரோட அனலிசிஸ் எல்லாம், I felt, were to the point, அப்படியே நச்சுன்னு இருந்தது. No wonder he was at the top in the 80s. அதுக்கப்பறம் ஒரு IM ஒருத்தரோட (IM Poldeuf) ப்ரெட்ரிக் பேசிண்டு இருந்தார். Anand தோத்துட்டார்னு இவர் சொல்லிண்டு இருக்கும்போதே, ஷார்ட் (Nigel Short) Playchess.com-ல "இது நிச்சயம் ட்ரா"-னு சொல்ல ஆரம்பிச்சுட்டார். உடனே ப்ரெட்ரிக் போல்ட்யூப்கிட்ட அதை சொல்ல அவர் அப்படியே ப்ளேட்டை திருப்பிட்டார். Actualla, அந்த பொசிஷன் Vallejo easy-யா வின் பண்ணிருக்கணும், மிஸ் பண்ணிட்டார். ஆனா, ஒரு GM சொன்னவுடனே இவர் அப்படியே மாறினது பார்க்க இண்ட்ரெஸ்டிங்கா இருந்தது. கடைசில, Vallejo-வோட Kb2-க்கு அப்புறம் ஷார்ட் "I am a total patzer. I am an idiot. This is an easy win for Vallejo"-னு சொன்னது வேற விஷயம். இதுல இன்னொரு இண்ட்ரெஸ்டிங் விஷயம், ஷார்ட் ட்ரான்னு சொன்னவுடனே அங்க இருந்த ரஷியன் T.V டீம் ஒடி வந்து "எப்படி, எப்படி??"-னு ஷார்ட்கிட்ட கேட்டாங்க, ஷார்ட் நைசா ஒண்ணும் பதிலே சொல்லாம எஸ்கேப் ஆயிட்டார்.

ஆனந்த், Vallejo-க்கு எதிரா 1.Nf3 ஆரம்பிச்சதே ஒரு பெரிய ஷாக், ஏன்னா அவர் இப்போ வின் பண்ணியே ஆகணும்னு ஒரு கண்டிஷன்ல இருக்கார், இப்ப போய் இவ்வளவு passive-வா ஆரம்பிச்சது பெரிய ஆச்சரியம்தான். மெதுவா, கொஞ்சம் கொஞ்சமா ஒரு அட்வாண்டேஜ் கொண்டு வந்துட்டு, 30) f5? ஒரே மூவில் தோத்துப்போற ஸ்டேஜுக்கு போனது இன்னும் ஆச்சரியம்! என்ன ஐடியால இருக்காரோ, தெரியலை. ஒண்ணும் புரிஞ்சுக்கவே முடியலை. Vallejo என்னடான்னா, கடைசில அல்வா பொசிஷன்ல (எனக்கு இல்லை!! நான் அந்த Vallejo பொசிஷனில் இருந்து தோத்தாலும் தோத்திருப்பேன். நம்ப end game knowledge அவ்வளவு strong!!) Kb1?? விளையாடி ஆனந்துக்கு ஒரு அரை பாயிண்ட் கொடுத்தார். ஆனந்தை தோக்கடிக்கற மாதிரி, இப்படி ஒரு பொசிஷன் அவருக்கு இனிமே எப்ப கிடைக்கும்?! மனுஷன் மிஸ் பண்ணிட்டார். தெரியாம தப்பு பண்ணிட்டாரா, இல்லை, தெரிஞ்சே அவர் ப்ரெண்ட் ஆனந்துக்கு ஒரு அரை பாயிண்ட் விட்டுக்கொடுத்தாரான்றதுதான் நேத்து hot டிஸ்கஷன்!

டோப்பலோவ் - கஸிம்ஜனோவ்ல கஸிம்ஜனோவ் ஒப்பனிங் முடிவுல இருந்தே ஏகப்பட்ட ப்ராப்ளம்லதான் இருந்தார். கஸிம்ஜனோவோட இராணியை பேஸ் பண்ணியே டோபாலோவ் அவர் pieces-சை centralize பண்ணினது excellent play. FIDE சேம்பியன் இப்படி மாறி மாறி உதை வாங்கறதை பார்க்க பாவமாத்தான் இருக்கு.

Thx Chessbase

இன்னிக்கு ஆடம்ஸை தோக்கடிச்சது மூலம், கேஸ்பரோவ் லினாரஸை நிச்சயம் வின் பண்ணறார்னு ஆயிடுச்சு. கேஸ்பரோவ்க்கு வயசாயிடுச்சுன்னு இனிமே எவனும் பேச முடியாது, அதே மாதிரி இப்போதைக்கு பெஸ்ட் ப்ளேயரும் அவர்தான்னு ப்ரூவ் பண்ணிட்டார், சுருக்கமா, he is letting the world know who the real boss is!

TWIC report on Round 12
Comments: Post a Comment

<< Home
The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?