Wednesday, February 02, 2005
AICFக்குள்ள சண்டை?
நம்ப AICF (All India Chess Federation) உள்ள ரொம்ப நாளா புகைஞ்சுண்டு இருந்த சண்டை வெளியே வந்துடுச்சு. உமர் கோயா ப்ரசிடண்டா இருக்க கூடாதுன்னு சென்னை கோர்ட் சொல்லிருக்கு. மேனுவல் ஆரோன் (இந்தியாவோட முதல் IM இவர். Chess Mateனு ஒரு செஸ் மேகசின் நடத்திண்டு இருக்கார். எனக்கு தெரிஞ்சு இந்தியாவில் இருக்கிற ஒரே செஸ் மேகசின் இதுதான்! ஒரு 2 வருஷம் இதுக்கு subscribe பண்ணிருந்தேன், ஆனா அது ஒரு தனி கதை!) செஸ்பேஸுக்கு அனுப்பிச்சிருக்கிற ஆர்டிகிளை படிச்சு பார்த்தா, அவர் பயங்கர கோபமா இருக்கிற மாதிரி இருக்கு. சசிகிரண், ஹரிகிருஷ்ணா இவங்கெல்லாம் போன வருஷம் Parsvanath டோர்னமெண்ட்டின் போதே கறுப்பு band கையில கட்டிண்டு விளையாண்ட மாதிரி ஞாபகம்!
செஸ் மேட்ல இருக்கிற ப்ரெஸ் ரிலீஸ்: 1 2 3 4 5
செஸ்பேஸ் ஆர்ட்டிகிள்
சதுரங்கம் வெப்சைட்டில் இருக்கும் ரிப்போர்ட்
[Update: இந்த டாபிக்குக்கு சம்பந்தமில்லாத ஒரு சின்ன டீடெய்ல்: நம்ப சசிகிரண் இப்போ விளையாடி கொண்டிருக்கும் Gibtele.com மாஸ்டர்ஸ் டோர்னமெண்ட்டை லைவ்வா காண்பிக்கறாங்க. இது ஒண்ணும் புது விஷயம் இல்லை, ஆனா Stuart Conquestடோட ஆடியோ/வீடியோ கமெண்டரியும், விளையாடற இடத்தில் இருந்து எடுக்கப்படும் படங்களுமா சும்மா கலக்கலா இருக்கு. இந்த் மாதிரி Playchess.comல கோரஸ் ரவுண்ட்ஸ் எல்லாத்துக்கும் லைவ் வீடியோ காண்பிச்சாங்க, இதோட அப்படியே ChessFMல வரும் ஆடியோ analysisசையும் சேர்த்து கேட்பது ரொம்ப நல்லா இருந்தது. இந்த அளவு பண்ணலைன்னாலும், நம்ப இந்தியாவில் நடக்கும் டோர்னமெண்ட்களுக்கு, at least, லைவ் கேம்ஸ் டிஸ்ப்ளேயாவது இருக்கணும்.]
|