Friday, February 11, 2005

 

இன்னும் ஒரு மேகசின்??

TWIC-ல இருந்து TWIC Theory-னு ஒரு மேகசின் ஒண்ணு புதுசா வர ஆரம்பிச்சிருக்கு. PDF file-லா நம்ப மெயில் பாக்ஸுக்கு வாரம் வாரம் வரும். இது ஒண்ணும் புது ஐடியா இல்லை, Chess Today (இதுக்கு முன்னாடி Coffee Table Chess!) ரொம்ப வருஷமா இந்த மாதிரிதான் வந்துண்டு இருக்கு. சரி, என்னத்தான் இதுல புதுசுன்னு பார்க்கலாம்னு February issue-வை படிச்சு பார்த்தேன். Andrew Martin Scandinavian-ல ஒரு ஐடியா பத்தி எழுதியிருக்கார். அப்படி ஒண்ணும் இம்ப்ரெஸிவால்லாம் இல்லை (ஆனா அந்த Groszpeter - Reprintsev ஆட்டம் நல்லாவே இருந்தது!). 12 மேகசின்ஸுக்கு (வாரம் ஒண்ணு) $15 subscription fee, அநியாயமா தெரியுது, செஸ் டுடே ஆறு மாசத்துக்கு 15 eurosதான் (செஸ் டுடே டெய்லி வரும்).

இந்த மேகசின்ஸ் எல்லாமே ஏன் இப்படி ஒரு ஒப்பனிங் சிஸ்டம்ல "15-ஆவது மூவ்ல ஒரு சூப்பர் ஐடியா"-ன்னு ஆர்ட்டிகிள்ஸ் போடறாங்கன்னு தெரியலை. அந்த ஒப்பனிங்கை ஏற்கனவே விளையாடிண்டு இருக்கறவனுக்கு வேணா இது உபயோகமாகலாம், என்னைய மாதிரி அந்த ஒப்பனிங்கை பத்தி சுத்தமா ஐடியாவே இல்லாதவன் என்ன பண்ணுவான்? இதுக்கு பதிலா செஸ் நின்ஜால Mig Greengard பண்ற மாதிரி பேசிக்ஸல இருந்து கவர் பண்ணினா ரொம்ப useful-லா இருக்கும்.

நம்ப ஊர் செஸ் மேட்டும் இந்த மாதிரி ஒரு e-magazine ஒண்ணு போடலாம்.

சசிகிரண் கொஞ்சம் out of formல இருக்காருன்னு நினைக்கிறேன் (gibtele.com மாஸ்டர்ஸ்), ஆனா ஹரிகிருஷ்ணா பெர்முடா டோர்னமெண்ட்ல joint first!! ஒரே ஒரு ஆட்டம்தான் தோத்தார், அதுவும் Gelfand-கிட்ட. அதுவும் ட்ரா பண்ணியிருந்தா clear first...anyway, well played Hari!!
Comments: Post a Comment

<< Home
The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?