Tuesday, May 10, 2005

 

யார் Super-GM ?

ஒரு காலத்துல Grand Master (GM) ஆகறதே பெரிய விஷயம். GMலாம்தான் final authority மாதிரி! ஆனா இப்போ இருக்கிற நிலைமையில் வெறும் (!?) GMன்ற டைட்டிலுக்கு top tournament circuit-ல அவ்வளவு மதிப்பில்லைன்னுதான் சொல்லணும். Of course, Tsheshkovsky/Torre/Nunn/Christiansen மாதிரி ஆட்களெல்லாம், இப்போ நார்மல் ரேட்டிங்ல (< 2600) இருந்தாலும் ஒரு காலத்துல கலக்கினவங்க. இப்போ 2300, 2400 ரேட்டிங்ல எல்லாம் GMs இருக்கிறதுதான் கொடுமை. இதுனாலதான், 2650க்கு மேலே இருக்கிறவங்களை Super GMன்னும், அதுக்கு மேலே, 2700+ எல்லாரையும் elite-GMன்னும் சொல்ல ஆரம்பிச்சாங்க. இதுலயும், கேஸ்பரோவை எதுலயும் சேர்க்கவே முடியாது, அவரோட 2800+ ரேட்டிங் அப்படி! அவரை தனியா ஒரு லெவல்லதான் வைக்கணும்.

இந்த Super-GMக்கும், elite-GMக்கும் பார்த்தீங்கன்னா அவ்வளவு ஒண்ணும் வித்தியாசம் இல்லாத மாதிரி இருக்கும், ஆனா, 2700+ கிட்ட ஒரு consistency எதிர்பார்க்கலாம். அதே மாதிரி, நார்மல் ரேட்டட் ப்ளேயர்களுக்கு எதிரா அவங்களோட ப்ளே extraordinary-யா இருக்கும்! உதாரணத்துக்கு, இந்த Ivanchuk - Jobava ஆட்டம்!


Ivanchuk,V (2739) - Jobava,B (2637) [A45]
Capablanca Mem Elite Havana CUB (2), 07.05.2005

1.d4 Nf6 2.Bg5 Ne4 3.Bf4 d5 4.e3 c5 5.Bd3 Nc6 6.Bxe4 dxe4 7.d5 Nb4 8.Nc3 e6 9.d6 Nc6 10.Nge2 f5 11.Nb5 Kf7 12.Nc7 Rb8 13.g4 fxg4 14.Ng3 Nb4 15.a3 Nd5 16.Nxe4 Nxf4 17.exf4 Kg8 18.Qxg4 h5 19.Qg3 b5 20.Rg1 Rh6 21.0-0-0 Kh8 22.Nxc5 b4 23.axb4 Rxb4 24.d7 Rc4 25.N5xe6 1-0

இத்தனைக்கும் Jobava கிட்டத்தட்ட 2650 ப்ளேயர்! Jobava-வுக்கு Trompowsky அவ்வளவு பழக்கம் இல்லைன்னு நினைக்கிறேன், நம்ப சகலகலா வல்லவன் இவான்சுக்கோ எல்லா ஓப்பனிங்லயும் கிங், அடி நிமித்திருப்பார் இந்த ஆட்டத்துல!
Comments: Post a Comment

<< Home
The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?