Thursday, March 10, 2005
கேஸ்பரோவ் :(
கேஸ்பரோவ் லினாரஸை டை ப்ரேக்கில் வின் பண்ணியிருக்கார். கடைசி ஆட்டத்துல டோப்பலோவ்க்கு எதிரா, கொஞ்சம் கணக்கு தப்பாகி போய் ஒரு மோசமான end game-க்கு போயிட்டார். டோப்பலோவ் எதுவும் தப்பு பண்ணாம க்ளீனா முழு பாயிண்ட்டை அள்ளிட்டார். ஒரு தப்பும் இல்லாமன்னு சொல்ல் முடியாது, டோப்பலோவோட h4? மூவ்வுக்கு அப்புறம் கேஸ்பரோவ் ஆட்டத்தை ட்ரா பண்ணிருந்திருக்கலாம், ஆனா அவர் பங்குக்கு அவரும் g6?? விளையாடி தோத்துப்போனார்! டை ப்ரேக்கை கேஸ்பரோவ் வர விட்டதே ஒரு ஆச்சரியமான விஷயம், அதை விட ஆச்சரியம் அவர் ரிடையர் ஆகப்போறேன்னு சொன்னது! கேஸ்பரோவ் இல்லாம டாப் - 3யை யோசிச்சே பார்க்க முடியலை. செஸ்ஸுன்னாலே கேஸ்பரோவ்தான் எல்லாருக்கும் தெரியும், அவர் இல்லாம, Chess will be losing a lot! ஒரு வேளை, நேத்து டோப்பலோவ்கிட்ட தோத்த எரிச்சல்ல சொல்லிருக்கலாம், திரும்பி மேஜிக் ஜான்ஸன் பண்ணின மாதிரி ஒரு 100 தடவை ரிடையர் ஆகலாம், என்ன வேணுமனாலும் நடக்கலாம், ஆனா, அவர் நிஜமாவே ஒதுங்கற ஐடியாலதான் இருந்தாருன்னா, ரொம்ப சோகமான விஷயம் இது! என்ன ஒரே சந்தோஷம்னா, ஏதோ நம்பள்லாம் கேஸ்பரோவ் பத்தி புத்தகத்துல படிச்சு தெரிஞ்சுக்காம, நம்பளும் அவர் காலத்துல இருந்தோம், அவர் ஆட்டங்களை லைவ்வா பார்த்தோம்ன்றதுதான்!! ஒரு ஆட்டத்துல இவ்வளவு டாமினேட்டிங்கான ஆளை பார்க்கறது கொஞ்சம் கஷ்டம்தான்! ஒரு பெரிய காலி இடம் இருக்கு டாப்ல, பார்ப்போம் யாரு அதை fill பண்ணறாங்கன்னு.
கேஸ்பரோவ் இல்லாததால், இன்னும் ஒரு இரண்டு ELO லிஸ்ட்ல ஆனந்த் முதல் இடத்துக்கு வந்திடுவார், அது வரைக்கும் டோப்பலோவோ, லீகோவோ அவரை தோக்கடிச்சு கீழே இழுக்காம இருந்தா! அவருக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை, கடைசி மூணு ஆட்டமும் சுத்தமா form-ல இல்லை...அன்னிக்கு ஏதோ Vallejo கிட்ட தப்பிச்சுட்டார், ஆனா நேத்து ஆடம்ஸ் ஒரு பிடி பிடிச்சுட்டார். தேவையில்லாம தோத்து போனாரு மனுஷன். ஒரு ELO பாயிண்டாவது விடுவார்னு நினைக்கிறேன். ஆனந்தும் ரிடையர்மெண்ட் பத்தி யோசிக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்னு நினைக்கிறேன் :(
லீகோ எப்படியாவது ஒரு பாயிண்ட் எடுத்துறணும்னு ட்ரை பண்ணினார், ஆனா Vallejo "இதுக்கு மேலே என்னால பாயிண்ட்ஸ் கொடுக்க முடியாது"ன்னு அடம் பிடிச்சு ட்ரா பண்ணிட்டார். ஆக, லீகோ விளையாண்ட 13 ஆட்டமும் ட்ரா! ஒரு புது ரிக்கார்ட்டுன்னு நினைக்கிறேன். Vallejo-வும் Kasim-மும் கடைசி இடத்தை share பண்ணிக்கிறாங்க. ஆடம்ஸ் இந்த கடைசி ஆட்டத்துல வின் பண்ணினது மூலம் ஒரு மாதிரி டீசண்ட் ஸ்கோர்ல இருக்காரு, அவருக்கு மேலேதான் நம்ப லீகோ இருக்கார்.
TWIC report on Round 14
TWIC reports Garry's retirement
|