Thursday, April 28, 2005

 

செஸ் பைத்தியம்?!

செஸ் பாலிடிக்ஸை கொஞ்ச நாள் பாலோ பண்ணினா, பைத்தியம் பிடிக்கிறது உறுதி (அதுவும் FIDE announcements-லாம் ஒண்ணு விடாம படிச்சா அவ்வளவுதான்!!). ஒவ்வொரு தடவையும் FIDE ஏதாவது ஒரு டோர்னமெண்ட் பத்தி அனெளன்ஸ் பண்ணுவதும், அதுல லிஸ்ட் பண்ணிருக்கிற ப்ளேயர்கள் "எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை, என்னைய கேட்காம நான் இதுல விளையாடப்போறேன்னு போட்டுட்டாங்க"-னு சொல்லுறதும் எப்பவும் நடக்கறதுதான். கொஞ்ச நாளைக்கு முன்னாடி FIDE நடத்த போறதா சொன்ன ஒரு டோர்னமெண்டுக்கு வழக்கம் போல க்ராம்னிக் "நான் இதுல எல்லாம் விளையாட மாட்டேன்"-னு சொல்லிருக்காரு. ஆனா, at least மனுஷன் "நான் இதுல விளையாடலை. ஆனா, இதுல வின் பண்ணறவங்களோட நான் விளையாடறேன். அதுல வின் பண்ணறவங்க unified champion-னா இருக்கட்டும்"-னு சொல்றார். FIDE இதுக்கு ஒத்துக்குமான்னு தெரியலை. முதல்ல, இது எவ்வளவு தூரம் credible-லா இருக்கும்னு தெரியலை. Suppose, Kasimdzhanov மாதிரி ஒரு second tier super GM ஜெயிச்சுட்டா, க்ராம்னிக் அவரோட விளையாடறது ரெடியா இருப்பாரான்னு தெரியலை. Of course, பைசா ப்ராப்ளமும் இருக்கு. க்ராம்னிக்கும் ஒரு நார்மல் GM-மும் விளையாடற மேட்சுக்கு யாரு மில்லியன் கணக்குல பைசா தருவாங்க? பைசா இல்லைன்னா நிச்சயம் க்ராம்னிக் விளையாட மாட்டார். முன்னொரு காலத்தில் (1998?) கேஸ்பரோவ் - ஷிரோவ் இதுனாலத்தான் கேன்சல் ஆச்சு. இத்தனைக்கும் ஷிரோவ் அப்போ 2700+ னு நினைக்கிறேன்.

I think, இது more of an ego game. யாருக்கும் unified championship-ன்றதுல இண்ட்ரெஸ்ட் இருக்கிற மாதிரி தெரியலை. கேஸ்பரோவ் இன்னிக்கு வரைக்கும் க்ராம்னிக் எப்படி அவரோட re-match விளையாடாம எஸ்கேப் ஆனாருன்னு பார்க்கறவங்ககிட்ட எல்லாம் புலம்பிண்டுத்தான் இருக்கார். க்ராம்னிக் பதிலுக்கு "நான் உத்தமன், Prague agreement-ல நான் எந்தெந்த clause-களுக்கு sign பண்ணினேனோ, அதுபடித்தான் இன்னிக்கு வரைக்கும் நடந்துண்டு இருக்கேன்'-னு சொல்லிண்டிருக்கார். செஸ் டாப்ல ஆனந்த், ஆடம்ஸ், டோப்பலோவ் மாதிரி ஒரு சிலரை தவிர மீதி எல்லாரும் "அவன் மேலத்தான் தப்பு", "இல்லை, இல்லை, இவன் மேலத்தான் தப்பு"-னு அடிச்சிக்கிறதுலயே குறியா இருக்காங்க. இந்த மாதிரியான ஒரு நிலமை நம்ப AICF-லயும் இப்போ இருக்குறதுதான் வருத்தமான விஷயம்.

திடீர்னு செஸ்ல பைசா நிறைய புழங்க ஆரம்பிச்சதுதான் இதுக்கு முக்கிய காரணம்னு நினைக்கிறேன்.
Comments: Post a Comment

<< Home
The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?