Thursday, November 25, 2004

 

50 - 50 டீல்!?

கேஸ்பரோ திரும்பி formக்கு வந்தாச்சு!! நேத்து Svidlerரை தோக்கடிச்சு கேஸ்பரோ இப்போ +4 வந்துட்டார். Svidler நான் ஏற்கனவே வேறொரு பதிவுல சொன்ன மாதிரி, பயங்க Strong ப்ளேயர். ஆனா அவர் நேத்து விளையாண்ட விதம் ஒரு மாதிரி unlike-Svidlerரா இருந்தது. ஒரு வேளை கேஸ்பரோவும் Svidlerரும் ஆட்டத்துக்கு முன்னாடியே "50-50 எடுத்தக்கலாம்"னு deal போட்டுட்டாங்களோ? எது எப்படியோ, கேஸ்பரோ ஜெயிச்சுட்டாரு. அவர் மீதி இருக்கிற ஆட்டங்களை ட்ரா பண்ணினாலே அவரு இன்னும் கொஞ்சம் ELO பாயிண்ட்ஸ் எடுத்து திரும்பி 2800க்கு மேலே போயிடுவார். ஆனந்த் முதல் இடத்துக்கு வந்துடுவார் போல இருக்கேன்னு எல்லாம் நினைச்சுண்டு இருக்கும்போதே, "அதெல்லாம் சான்ஸ்சே இல்லை"ன்ற மாதிரி கேஸ்பரோ தன்னோட ரேட்டிங்கை கூட்டிண்டுட்டார். ஆனா ஒண்ணு, எனக்கு personalலா ஆனந்த் ஒரே ஒரு தடவையாவது ELO listல முதல்ல வரணும்னு ஆசை. அவர் World Champion ஆகலைன்னா கூட, கிட்டத்தட்ட 20 வருஷமா ரேட்டிங் லிஸ்ட்ல முதல்ல இருந்த கேஸ்பரோவை முந்தின ஒரே ஆள் அப்படின்னாவது செஸ் ஹிஸ்டரியில் அவர் பேர் இருக்குமில்லையா?! அதே மாதிரி, நம்ப latest favorite, Tseshkovskyக்கு டோர்னமெண்ட்டில் கடைசி பரிசுன்னு எதுவும் கிடையாதுன்னு யாராவது சொன்னா தேவலை, அவரு பாட்டுக்கு எல்லார்கிட்டயும் தோத்துண்டு இருக்கார். நேத்து தோத்து போனது Motylevகிட்ட. பேசாம நானும் போய் அவரோட விளையாடலாம்னு இருக்கேன். யார் கண்டா, அவரு என்கிட்டயும் தோத்தாலும் தோப்பார் (அட, ஒரு பேச்சுக்குத்தான்!).

Timofeev Korotylevகிட்ட தோற்றுப்போனார். இத்தனைக்கும் ஆரம்பத்துல ஒரு நல்ல பொசிஷன்ல இருந்து கொஞ்சம் கொஞ்சமா மோசமாகி தேவையில்லாம ஒரு பாயிண்டை விட்டார். Dreev நம்பளோட ட்ராமாஸ்டர் Epishinனை எப்படியாவது ஜெயிச்சுடணும்னு முயற்சி செஞ்சு பார்த்தார். ம்ஹூம், பப்பு வேகலை. ஆட்டம் ட்ரா. Bareevவும் Morozevichசும் மத்த எல்லா காய்களையும் exchange பண்ணிண்டு, ஒரு Bishop endgameல ட்ரா பண்ணிண்டாங்க. ஆக, இப்போ கேஸ்பரோ +4லயும், Grischuk +2லயும், Dreev +1லயும், Timofeev/Bareev/Svidler/Korotylev/Motylev +0லயும், Epishin -1லயும், Morozevich -2லயும், Tseshkovsky -4லயும் இருக்காங்க. கேஸ்பரோவை இனிமேல் யாராலயும் நிப்பாட்ட முடியாது. அவரு கிட்டத்தட்ட இந்த டோர்னமெண்ட்டை ஜெயிச்சுட்டாருன்னுதான் சொல்லணும். இன்னிக்கு அவரு Motylevவோட விளையாடணும். இதுலயும் ஒரு பாயிண்ட் எடுத்தாருன்னா அவருக்கு இப்பவே கப்பை கொடுத்து கைத்தட்டி வீட்டுக்கு அனுப்பிச்சுடலாம்.

Standings after Rd 8



Comments:
§¸¡Ê ¿ýÈ¢. ¦ÅÌ ¿¡ð¸ÙìÌô À¢ÈÌ ¦ºŠ ¬ð¼õ ÀüÈ¢
ÀÊì¸ ¨Åò¾¾üÌ. «ó¾ ICC Ä¢í¸¢üÌõ. ±ÉìÌô À¢Êò¾
¸¡ŠÀ§Ã¡Å¢ý ¬ð¼õ ÀüÈ¢ ÀÊòРŢðÎ «í§¸ ¦ºýÈ¡ø ¯ñ¨Á¢§Ä§Â ¸¡ŠÀ§Ã¡ ¬Êì ¦¸¡ñÊÕ츢ýÈ¡÷. ÀÄ ¿¡ð¸û ÓýÒ Ëô·À¢Ã£Š…¤¼ý ¬Ê¨¾ô À¡÷ò¾ À¢ý ÁüÚ¦Á¡Ú ¿øÅ¡öôÒ. ¸¡ö¸û ¿¸Ã ¿¸Ã ¦Áö º¢Ä¢÷ò¾Ð. þýÚõ «À¡Ã ¬ð¼õ. ¿øÄ Å¨¸ô À¾¢¦Å¡ý¨È ¿¼òи¢ýÈ£÷¸û.

Á£ñÎõ ¿ýÈ¢Ô¼ý,
«É¡¨¾
 
நன்றி அனாதை. ICC மாதிரி Playchessசும் செஸ் ஆட்டங்களை பார்ப்பதற்கு ஒரு நல்ல இடம்.

மேலே இருக்கும் பின்னூட்டத்தின் யுனிகோட் வடிவம்:

---===-----
கோடி நன்றி, வெகு நாட்களுக்கு பிறகு செஸ் பற்றி படிக்க வைத்ததற்கு, அந்த ICC லிங்கிற்கும். எனக்கு பிடித்த காஸ்பரோவின் ஆட்டம் பற்றி படித்து விட்டு அங்கே சென்றால் உண்மையிலேயே காஸ்பரோ ஆடிக் கொண்டிருக்கிறார். பல நாட்கள் முன்பு டீப் பிரீஸ்ஸுடன் ஆடியதை பார்த்த பின் மற்றுமொறு நல்வாய்ப்பு. காய்கள் நகர நகர மெய் சிலிர்த்தது. இன்றும் அபார ஆட்டம். நல்ல வகைப் பதிவொன்றை நடத்துகின்றீர்கள்.

மீண்டும் நன்றியுடன்
அனாதை
---===-----
 
Post a Comment

<< Home
The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?