Sunday, January 22, 2006

 

கோரஸ் - 2006

கோரஸ் டோர்னமெண்ட் கலக்கலா போயிண்டு இருக்கு. படு ஸ்ட்ராங்கா ஆரம்பிச்ச ஆனந்த் தேவையேயில்லாம Kamsky-கிட்ட அஞ்சாவது ரவுண்ட்ல தோத்து போய் இப்போ செகண்ட் பொசிஷனுக்கு போயிட்டார். டோபலோவ் நேத்து சோகலோவை தோக்கடிச்சதுனால முதல் இடத்துல இருக்கார். கர்யாகின் சத்தமே இல்லாம ஆனந்தை எட்டி பிடிச்சுட்டார். காம்ஸ்கியோட ஒப்பனிங் ப்ரிப்பரேஷன் கொஞ்சம் வீக்காத்தான் இருக்கு மத்தவங்களை கம்ப்பேர் பண்ணும்போது! ஆனா மனுஷன் ஒரு காலத்துல ஸ்ட்ராங்கா இருந்தவருன்றது அவரோட ப்ளேல பல நேரம் பளிச்சுன்னு தெரியுது.


Thx Chessbase

க்ரூப் - Bல கார்ல்ஸன் அடி கிளப்பிண்டு இருக்கார். 14 வயசு பையன் மாதிரியா விளையாடிண்டு இருக்கார்? அதுவும், specific-கா, பெலியாவ்ஸ்கிக்கு எதிராவும், நைடிச்சுக்கு எதிராவும் அவரோட ஆட்டங்கள் சான்ஸே இல்லை! சண்டே ஈவினிங் அந்த இரண்டு கேமையும் கொஞ்சம் டீப்பா விளையாடி பார்க்கணும்னு ஒரு ப்ளான் வைச்சிருக்கேன், பார்ப்போம். வீட்ல மிசஸ் என்ன ப்ளான் வைச்சிருக்காங்கன்னு தெரியலை :)


Thx Chessbase
Comments:
அப்பாடி ஒரு வழியா நேரம் கிடைச்சுதா? தலைவர் ஜெயிச்சா அமர்க்களமா இருக்கும்.
 
வாழ்த்துகள்!

சிரில் அலெக்ஸ் பதிவில் பார்த்தேன் பாஷா இந்தியாவின் சிறந்த தமிழ் வலைப்பதிவு(sports) என தேர்வு பெற்றதை.மேலும் பல சாதிக்க வாழ்த்துகள்!
 
Post a Comment

<< Home
The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?