Friday, July 29, 2005

 

சில பல விஷயங்கள்!

டார்ட்மண்ட்டை யாருமே எதிர்பார்க்காத Naiditsch ஜெயிச்சுட்டு போயிட்டார். இது ஒரு மாதிரி கொஞ்சம் கேவலமான ரிசல்ட்டுன்னுதான் சொல்லணும்…லீகோ, க்ராம்னிக், டோப்பலோவ்னு ஏகத்துக்கு பெரிய ஆட்கள் இருக்கும் போது, டோர்னமெண்ட் ரேட்டிங் டேபிள்ல கடைசில இருந்த Naiditsch ஜெயிக்கறாருன்னா, I think, டாப் 10ல இருக்கற ஆட்கள் ரொம்ப டாமினேட்டிங்கா இல்லைன்னுதான் சொல்லணும். இதே கேஸ்பரோவ் இருந்திருந்தா இந்த மாதிரி Naiditsch-னால ஜெயிச்சிருக்க முடியுமான்றது சந்தேகம்தான். ஆனந்த் இருந்திருந்தா கூட ரிசல்ட் வேற மாதிரிதான் இருந்திருக்குமோன்னு தோணுது. லீகோ ஃபார்ம்ல இல்லாதது ஒரு ஆச்சரியம்னா, க்ராம்னிக்குக்கு இன்னும் ஃபார்ம் வராதது யாருக்கும் ஆச்சரியமால்லாம் ஒண்ணும் இல்லை. அவர் விளையாடறதை பார்த்தா, அவரோட ப்ரைம் தாண்டிட்ட மாதிரி இருக்கு, which is very hard to believe. Bacrot கடைசி ஆட்டத்துல க்ராம்னிக்கை கூலா outplay பண்ணினதை பார்க்க ரொம்ப நல்லா இருந்தது. Bacrot நிறைய நேரம் அந்த ஒரு 2700 டச்சை காண்பிக்கறார். ஸ்விட்லர் ஒண்ணும் சொல்லிக்கற மாதிரியெல்லாம் ஒண்ணும் விளையாடலை. எதிர்பார்த்த மாதிரி சுடோவ்ஸ்கி டமால் டுமீல்னுதான் விளையாண்டார். மனுஷன் இந்த மாதிரி விளையாடி கிட்டத்தட்ட ஒரு 2700 ரேட்டிங் (கரெக்டா சொல்லணும்னா, 2674) maintain பண்ணறாருன்னா அதிசயம்தான். நீல்சன் இந்த league-ஏ இல்லைன்னுதான் சொல்லணும். மனுஷனோட ப்ரிப்பரேஷன் இந்த மாதிரி elite GM டோர்னமெண்ட்டுக்கு பத்தாதோன்னு எனக்கு அவரோட சில ஆட்டங்களை பார்த்த போது தோணிச்சு.

Thx Chessbase

நார்த் யூரல்ஸ் கப்பை நம்ப ஹம்பி ஜெயிச்சிருக்காங்க. ரொம்ப நல்ல விஷயம். ரொம்ப நாளைக்கு அப்புறம் அவங்க ஜெயிக்கற ஒரு international டோர்னமெண்ட் இது. இதே மாதிரி Accentus டோர்னமெண்ட்ல விஜயலக்ஷ்மியும், ஸ்க்ரிப்சன்கோவும் ஈக்வல் பாயிண்ட்ஸ் எடுத்து முதலாம் இடத்தை பிடிச்சாங்க. ஆனா, டை ப்ரேக்கர்ல ஸ்க்ரிப்சன்கோவுக்கு போயிடுச்சு டைட்டில்! Hard luck, Vijayalakshmi… Skripchenko - Vijayalakshmi கடைசி ஆட்டத்துல நிஜம்மாவே விஜயலக்ஷ்மி கலக்கலா ஆடிருப்பாங்க.


Thx

விஜயலக்ஷ்மியோட ஹஸ்பண்ட் நம்ப ஸ்ரீராம் ஜான்ற விஷயம் எனக்கு இப்போதான் தெரியும். ஏன் இப்படி செஸ் ப்ளேயர்களுக்கு உள்ளயே கல்யாணம் பண்ணிக்கறாங்க? ஆர்த்தி – ரமேஷ், Thipsay family, Viji – Sriram jha, இந்த வரிசைல அடுத்து நம்ப ஒரு போட்டியே வைக்கலாம் போல இருக்கு – சசிகிரண் யாரை கல்யாணம் பண்ணிப்பார்?! கரெக்ட்டா யாராவது கெஸ் பண்ணினா அவங்களுக்கு BCO பரிசு!
Comments: Post a Comment

<< Home
The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?