Friday, November 26, 2004
இந்த கேஸ்பரோ ரொம்ப மோசம்!
இந்த கேஸ்பரோ ரொம்ப மோசம். தினமும் இப்படி ஜெயிச்சுண்டே இருந்தா, அவரை பத்தி என்னதாங்க வித்தியாசமா சொல்றது?! :-) அவரு back to formமா, இல்லை அவருக்கு எதிரா விளையாடறவங்க தப்பா ஆடறாங்களான்னு தெரியலை, அவரு பாட்டுக்கு பாயிண்ட் மேலே பாயிண்ட்டா எடுத்துண்டே இருக்காரு நேத்து Timofeevவோட, அதான் அந்த 19 வயசு பையன், ஆடினார். மேலே இருக்கிற படத்தை பாருங்க. குட்டியூண்டு Timofeevக்கு முன்னாடி வலது பக்கம் தலைவர் மலை (சிங்கம்!?) மாதிரி உட்கார்ந்திருக்கிறதை! அவன் கேஸ்பரோ எதிரே உட்கார்ந்தவுடனே பயந்துட்டான்னு நினைக்கிறேன், பயங்கர passive கேம் விளையாடினான். கேஸ்பரோக்கு இந்த மாதிரியெல்லாம் சான்ஸ் கொடுத்தா நடக்குமா, சொல்லுங்க, அவர் பயங்கர preciseசா Timofeevவின் பொசிஷனை கொஞ்சம் கொஞ்சமா கஷ்டமாக்கி கடைசில ரிசைன் பண்ண வச்சுட்டார். தலைவர் இப்போ +5ல இருக்கார்!!! இன்னிக்கு அவர் மொரோசெவிச்சோட ஆடணும். இன்னிக்கும் ஜெயிச்சாருன்னா கலக்கலா இருக்கும்.
நேத்து ஆட்டத்துல கேஸ்பரோகிட்ட தோத்ததுனாலயா என்னன்னு தெரியலை, Svidler இன்னிக்கு ரொம்ப மோசமா விளையாண்டாரு. செஸ்ல வெறுமனே உங்களுக்கு திறமை இருந்தா மட்டும் போதாது. கொஞ்சம் பதறாம cool headedடாவும் இருக்கணும்னு பெரியவங்க சொல்லிருக்காங்க. இதை Nervesனு சொல்லுவாங்க! இப்போ, ஏற்கனவே ஒரு பயங்கர மோசமான போர்ட் பொசிஷன்ல, இன்னும் நீங்க 10 மூவ் விளையாடணும், ஆனா ஒரு நிமிஷம்தான் டைம் இருக்குன்னு வச்சிக்குங்க, நீங்க பாட்டுக்கு இந்த டென்ஷன்ல போர்ட்டையெல்லாம் தூக்கி opponentடை அடிச்சிர கூடாது. (அட, நான் காமெடி பண்ணலை, நிஜம்மாவே இதெல்லாம் நடந்துருக்கு!) அப்போ கூட, அந்த tensionலயும் கரெக்டான மூவ்வை கண்டுப்பிடிக்கிறது தனி திறமை! அது நம்ப Vassily Ivanchukக்கு கிடையாது. அது மட்டும் இருந்திருந்தா, அவருக்கு இருக்கிற செஸ் understandingகுக்கு அவருதான் இப்போதைக்கு ELO listல முதல்ல இருந்திருக்கணும்!! நேத்து Svidler கதையும் அந்த மாதிரிதான் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். கேஸ்பரோகிட்ட தோக்கறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை (எல்லாரும்தான் அவர்கிட்ட தோக்கறாங்க. இவர் மட்டுமா தோத்தாரு?), ஆனா அது பயங்கர unnervingகா இருந்திருக்கும் என்பது உண்மை!
மற்றொரு ஆட்டத்தில் Grischuk Bareevவை தோக்கடித்தார். So இப்போதைக்கு கேஸ்பரோக்கு ஒரு பாயிண்டு பின்னாடி இருக்காரு Grischuk. இன்னிக்கு ஆட்டத்துல அவரு Korotylevவோட விளையாடணும். ஜெயிக்கணும்னு ஒரு வெறியோடதான் நிச்சயம் ஆடுவார். சில நேரம் எனக்கு Bareevவை பார்த்தா பயங்கர ஆச்சரியமா இருக்கும், அவரோட ரேட்டிங் 2715, அந்த ரேட்டிங்குக்கு போறதெல்லாம் லேசுபட்ட காரியம் இல்லை, ஆனாலும் பார்த்தீங்கன்னா திடீர் திடீர்னு ஒரு 2600 ப்ளேயர்கிட்டயோ, இல்லை ஒரு 2500 ப்ளேயர்கிட்டயோ நான் விளையாடற ரேஞ்சுக்கு கேவலமா விளையாடி தோத்து போவாரு!! மனுஷன் எப்படிதான் இன்னும் 2700க்கு மேலே ரேட்டிங்கை தக்க வச்சிண்டிருக்காரோ தெரியலை (இதுக்குத்தான் நம்ப வெங்கட் ஒரு பயங்கர theory ஒண்ணு ப்ரொபோஸ் பண்ணினார்). Korotylev மொரோசெவிச்சுக்கிட்ட (என்னமோ மொரொ "சேவிச்சுண்டு"ன்னு சொல்ற மாதிரி இருக்குல்ல?! :-)) தோத்து போனார். மொரோசெவிச்சுக்கு இது லக்கி வின். Korotylev சுலபமா ட்ரா பண்ணிருக்கலாம், ஆனா கடைசில போய் ஒரு சொதப்பு சொதப்பி முழு பாயிண்ட்டையும் தாரை வார்த்துட்டார். Tseshkovsky - Epishin ட்ரா. Epishinன்ற பேரை "ட்ரா"ன்ற வார்த்தைக்கு பதிலா உபயோகிக்கலாம்னு நினைக்கிறேன் ("Don't try to Epishin me!")!!
Standings after Rd 9
|