Monday, October 11, 2004

 

சதுரங்கம் - The Royal Game

செஸ் விளையாட்டு பற்றிய செய்திகளை இங்கு உடனுக்குடன் படிக்கலாம் மற்றும் விவாதிக்கலாம். செஸ்ஸின் பெரும் ரசிகன் நான். கிரிக்கெட் புகழ் பெற்ற அளவு செஸ்ஸிற்க்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாதது வருந்ததக்கது என்றாலும் இரண்டு விஷயங்கள் ஊக்கமளிப்பதாக உள்ளது.

1) விஸ்வநாதன் ஆனந்த் - இவர் விளையாட ஆரம்பித்த பொழுது இவருக்கு விளம்பரதாரர் உதவி இல்லை, ஒழுஙகான பயிற்சியளிப்பவர் இல்லை, ஆனாலும் இன்று உலக தலை சிறந்த ஆட்டகாரர்களில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்.

2) இணையம் - இது மட்டும் இல்லாமல் போயிருந்தால் நான் எங்கு செஸ் பற்றி பேசுவதாம்?

"ஆனந்த் இரண்டாம் இடம் என்றால் யார் முதல் இடம்?" -- அடுத்த போஸ்டில் பதில் சொல்கிறேன்.

Comments:
ºÐÃí¸õ ÀüȢ ¾¸Åø¸ÙìÌ ´Õ ŨÄôâ ¯Õš츢 þÕôÀÐ ¿øÄ ÓÂüº¢.ºÐÃí¸ ãù¸û ÀüÈ¢Ôõ «ùÅô§À¡Ð ¦º¡øÄ¢ Å¡Õí¸û. «Ð ÀĨà Ţ¨Ç¡¼ò àñ¼Ä¡õ.
«ýÒ¼ý
Á¡Äý
 
நேரம் ஒதுக்கி இதை படிச்சதுக்கு ரொம்ப நன்றி, மாலன். ஆனா நீங்க எழுதினதை என்னால படிக்க முடியலை..அதை நோட்பேட் செயலியில் paste பண்ணி படிக்கவேண்டியதாயிற்று...
 
உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. Background colour இன்னும் கொஞ்சம் pleasing-ஆக வைக்கலாம் என்பது என்னுடைய அபிப்ராயம்.
 
ந்ன்றி மீனாக்ஸ். இப்ப எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லுங்க.
 
Test Comment.
 
சதுரங்கம் பற்றி ஒரு வலைப்பதிவு ஆரம்பித்திருக்கின்றீர்கள். அருமையான முயற்சி, வாழ்த்தி வரவேற்கிறோம். ஆனந்த், காஸ்ப்ரோவ், ஆர்த்தி, விஜயலட்சுமி, ஹம்பி போன்ற சில பெயர்கள்தான் பரிச்சயமான அளவிற்கு செஸ் எனக்கு பரிச்சயமில்லையென்றுதான் சொல்லவேண்டும். அதை உங்களின் இந்த வலைப்பதிவு மாற்றும் என்று நம்புகிறேன்.

திரு. மாலன் அவர்களின் கருத்து இங்கே - வாசிக்கும் வடிவில்:

சதுரங்கம் பற்றிய தகவல்களுக்கு ஒரு வலைப்பூ உருவாக்கி இருப்பது நல்ல முயற்சி.சதுரங்க மூவ்கள் பற்றியும் அவ்வப்போது சொல்லி வாருங்கள். அது பலரை விளையாடத் தூண்டலாம்.
அன்புடன்
மாலன்

தயவுசெய்து அனைவரும் தமிழ் யுனிக்கோடு மட்டுமே பயன்படுத்த முயற்சிக்கலாமே...
 
இதற்கு முந்தைய பின்னூட்டம் நான் இட்டதுதான், அது ஏனோ இன்று இரு இடங்களில் என்னுடைய பெயருக்குப்பதில் Anonymous என்றே வந்துள்ளது, மன்னிக்கவும்.
 
Post a Comment

<< Home
The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?