Monday, December 20, 2004

 

K.Venkatesh: கண்ணீர் அஞ்சலி

25 வயதே ஆன K.வெங்கடேஷ் இந்த மாதம் (டிசம்பர்) 17ஆம் தேதி காலை மரணமடைந்தார். வெங்கடேஷுக்கு Duchenne Muscular Dystrophy (MD) எனப்படும் சதைகளை பாதிக்கும் கொடும் நோய். இந்த Duchenne வகையால் பாதிக்கப்பட்டவர்கள் 30 வயதை தாண்ட மாட்டார்கள் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். கொடுமையான விஷயம்!!! வெங்கடேஷ் ஒரு செஸ் ப்ளேயரும் கூட.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோ நாளையோ என்ற நிலையிலும் வெங்கடேஷ் தனது உறுப்புகளை தானமாக எடுத்துக்கொள்ள சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். உயிருடன் (அதாவது மூளை தன் செயல்திறனை இழப்பது வரை) இருப்பவரிடம் இருந்து உறுப்புகளை எடுக்க சட்டம் இடம் கொடுக்காததால் தன்னை கருணை கொலை செய்யுமாறு சொல்லியுள்ளார்!!! ஆந்திரா அரசு அதை மறுத்துவிடவே மேல்முறையீடும் செய்திருக்கிறார். வெங்கடேஷின் கவலையெல்லாம் வெகு நாட்கள் இயந்திரங்களின் உதவியுடனேயே உறுப்புகள் இயங்கி கொண்டிருந்தால் கெட்டுவிடாமல் இருக்கவேண்டுமே என்பதுதான்! உடனே நம்ப ஆட்கள் ஒரு குழு அமைத்து அதை பற்றி விவாதியோ விவாதின்னு விவாதித்துக்கொண்டிருந்தபோதே MD வெங்கடேஷை விட்டு வைக்கவில்லை. உயிர் பிரிந்தவுடனே அவரின் கண்களை மட்டும் பாதுகாக்க முடிந்ததாம், மற்ற உறுப்புகள் அனைத்தும் வெங்கடேஷ் பயந்தவாறே infect ஆகி பயனில்லாமல் போயிருக்கிறது.

கிட்டத்தட்ட அனைத்து நாட்டிலும் Euthanasia எனப்படும் இந்த கருணைக் கொலை உண்டு. இந்தியாவிலும் இதை ஆதரிக்க ஒரு சட்டம் வேண்டும் என்று இப்பொழுது எல்லாரும் குரல் எழுப்பி உள்ளனர். இது சரியா தவறா என்பதெல்லாம் வேறு விஷயம், ஆனால் வெங்கடேஷ் தனது உறுப்புகளை தானமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று கோர்ட் வரை போனது என்னை ரொம்பவே பாதித்தது!! தனது மகனின் மரணத்தை அருகிலேயே இருந்து ஒரு தாய் பார்ப்பது மாதிரி ஒரு கொடுமையான விஷயம் இருக்கவே முடியாது, வெங்கடேஷின் அம்மாவை என்னவென்று சொல்லி தேற்றுவது?! Deep condolences to K.Venkatesh's family and to all those who knew him.

Other articles on K.Venkatesh & the legal battle

Comments: Post a Comment

<< Home
The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?