Friday, December 31, 2004
[புத்தகம்] Bobby Fischer goes to war
சமீபத்தில் (அதாவது, நேற்று!) படித்த புத்தகம் Bobby Fischer goes to war. ஒவ்வொரு தடவை சென்னை வரும்பொழுதும் நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க் புத்தக கடைக்கு செல்லுவது வழக்கம். என் அண்ணன் பையனுக்கு ஏதாவது புத்தகம் ஒன்று வாங்கி தரலாம் என்று இந்த தடவை போயிருந்த பொழுதுதான் இந்த பாபி பிஷர் புத்தகத்தை வாங்கினேன். போன தடவையே இதை பார்த்திருந்தாலும், அப்போது வேறு ஒரு புத்தகம் இதை விட படு இன்ட்ரெஸ்டிங்காய் தெரிந்ததால் இதை வாங்காமல் விட்டு வந்திருந்தேன். இப்புத்தகம் 1972ல் நடந்த போரிஸ் ஸ்பாஸ்கி - பாபி பிஷர் மேட்ச்சினை பற்றியது. பிஷர் வென்ற இந்த மேட்ச்சினை "Match of the century" என்று சிலர் சொல்வர். ஆனால், அந்த அளவுக்கு இதில் ஒன்றுமே இல்லை என்று சொல்பவர்களும் உண்டு. இந்த மேட்சில் ஒரு சில விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை:
1) அது வரை சோவியத் இரஷியாவுக்குள்ளயே சுற்றி வந்துக்கொண்டிருந்த இந்த பட்டத்தை முதன் முதலில் இரஷியர்களிடம் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டு வந்தது பிஷர்தான்.
2) அது கோல்ட் வார் (cold war) நடந்துக் கொண்டிருந்த நேரம். இந்த சேம்பியன்ஷிப்பை ஒரு வகையில் இரு தேசங்களும் நிலம், நீர், ஆகாய மார்க்கங்களை தவிர போர் புரிய மற்றொரு மார்க்கமாகத்தான் கருதின. அதிலும், ஸ்பாஸ்கிக்கு சோவியத் பக்கமிருந்து பயங்கர பிரஷர். அமெரிக்கா அவ்வளவு தூரம் ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை, பிஷரின் பைத்தியக்காரத்தனமான செயல்களும் இதற்கு ஒரு காரணம் என்பது வேறு விஷயம்.
பாபி பிஷர் பயங்கர ஜீனியஸ், ஆனால் ஒரு மாதிரி (கொஞ்சம் டீஸண்ட்டா சொல்லணும்னா) eccentric. கம்யூனிஸம் வெறுமனே கப்ஸா என்பது பிஷரின் எண்ணம். செஸ் போர்ட்டே வாழ்க்கை என்று இருந்தவர் பிஷர் (இப்போ நார்மல் செஸ் தண்டம், fischer randomமே பெஸ்ட் என்று சொல்லி வருகிறார். அதே போல், anti-communismல் இருந்து anti-americaவாக மாறிவிட்டார்!) . 64 கட்டங்களுக்குள் 24 மணி நேரமும் மூழ்கி கிடந்தவர். கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லுகிற மாதிரி தெரிந்தாலும், இதுதான் உண்மை. செஸ்ஸின் intricacies அப்படி. கொஞ்சம் மட்டும் புரிய ஆரம்பிச்சுடுச்சுன்னா செஸ் மாதிரி இன்ட்ரெஸ்டிங் ஆட்டம் கிடையவே கிடையாதுன்னு நீங்களே சொல்லுவீங்க. ஸ்பாஸ்கி அப்படியே பிஷருக்கு நேர் எதிர். அவரும் பயங்கர டேலண்டட் ப்ளேயர். ஆனால், செஸ் போர்ட்டில் நடப்பவை போர்டு தாண்டி வெளியே வரக்கூடாது என்ற கொள்கை கொண்டவர். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், பக்கா ஜென்டில்மேன். பாட்வின்னிக், கோர்சனாய் போன்றவர்கள் "நமக்கு எதிராக விளையாடுபவர்களை விரோதிகளை போல் வெறுக்க வேண்டும், அப்பொழுதுதான் நம்மோட செஸ் திறமை முழுவதும் வெளிவரும்" என்பதில் மிகுந்த நம்பிக்கை உடையவர்கள், ஸ்பாஸ்கியோ யாரையும் வெறுக்கத் தெரியாதவர் (சில இரஷிய அதிகாரிகளை தவிர!).
இருவரும் 24 ஆட்டங்கள் விளையாடினர். இந்த ஆட்டங்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசும் பல புத்தகங்கள் இருந்தாலும், திரை மறைவில் நடந்தவைகளை (chess politics) விளக்கும் புத்தகங்கள் ரொம்பக் கம்மி. இரஷிய ஸ்போர்ட்ஸ் கமிட்டி எப்படி இந்த மேட்சிற்கு ஸ்பாஸ்கியை தயார் பண்ண விரும்பியது, அந்தக் காலக்கட்டங்களில் இரஷிய GMகளின் நிலை என்ன, இரஷியாவில் எப்படி செஸ் ஒரு ideology representativeவாக இருந்தது போன்ற பல விஷயங்கள் பயங்கர இன்ட்ரெஸ்டிங். சில பெருந்தலைகளை (பாட்வின்னிக், தால், கீரஸ், கோர்சனாய், பெட்ரோஷியன்) பற்றிய சில விஷயங்கள் அவர்களை பற்றிய எனது ஒப்பீனியன்களை தலை கீழாக புரட்டிப் போட்டன. கேண்டிடேட் டோர்னமெண்ட்டில் ஆரம்பித்து 1992 யுகோஸ்லாவ் மேட்ச் வரை பலவற்றை இப்புத்தகம் விவரிக்கிறது. பிஷர் அடித்த கூத்துகளை படிக்கும் போது (பல முறை இவைகளை மற்ற வலைத்தளங்களில் படித்திருந்தாலும்) சிரிப்புத்தான் வந்தது, சில நேரம் எரிச்சல் வந்ததும் உண்மை. எப்படித்தான் இவரை சகித்துக்கொண்டு ஸ்பாஸ்கி விளையாடினாரோ, தெரியலை! உதாரணத்திற்கு சில:
- முதலில் இந்த மேட்சிற்கு வர ஒத்துக்கொண்ட பிஷர், திடீரென "எனக்கு இன்னும் பைசா வேணும். இது பத்தாது" என்று சொல்லி வர மறுத்து விட்டார். மேட்ச் அவ்வளவுதான் என்று பலர் நினைக்க தொடங்கிய வேளையில் பிரிட்டிஷ் நாட்டினை சேர்ந்த ஸ்லேட்டர் குறுக்கிட்டு சேம்பியனுக்கான பரிசு தொகையை இரட்டிப்பாக்கினார். ஒரு செஸ் மேட்சில் இவ்வளவு அதிகமான பரிசு தொகை அறிவிக்கப்பட்டது அதுவே முதல் முறை.
- இது போதாதென்று, கேட் பாஸ் தொகையில் 30 சதவீதம் தனக்கு வேண்டுமென்றும் அடம் பிடித்தார் பிஷர். அதே நேரத்தில் ஆடிட்டோரியத்தில் முதல் 7 வரிசைகள் காலியாக இருக்க வேண்டுமென்றும் ஒரு கண்டிஷன் போட்டார்!!
- மேட்ச் ஒப்பனிங் பங்ஷனிற்கு பிஷர் வரவில்லை. பிஷர் இந்த மேட்சிற்கு வருவாரா மாட்டாரா என்றே தெரியாமல் இருந்த நேரம் அது.
- விளையாடும் இடத்தில் கேமிரா இருக்க கூடாது என்று அடம் பிடித்தார் பிஷர். ஒரு ஆட்டத்தை இதனால், ஆடிட்டோரியத்தை விட்டு பின்னால் இருந்த ஒரு சின்ன டேபிள் டென்னிஸ் ரூமில் நடத்துமாறு ஆயிற்று.
- செஸ் போர்ட் வைத்திருந்த டேபிள் பெரிதாக உள்ளது என்றும் அதனை உடனடியாக மாற்றியே தீர வேண்டுமென்று அடம்பிடித்தார். அதுவும் எப்போ? சில ஆட்டங்கள் முடிந்த பிறகு.
பிஷர் போர்ட்டுக்கு வெளியேத்தான் இந்த மாதிரி. போர்டிற்குள் என்ன மாதிரின்னு அவரோட "My 60 memorable games" புத்தகம் படிச்சீங்கன்னா தெரியும்.
Comments:
<< Home
இங்கு சென்று பாருங்கள்
http://www.uni-klu.ac.at/~gossimit/c/book.htm
நிறைய புத்தகங்கள் உள்ளன.
பரணீதரன்
http://blog.baranee.net
Post a Comment
http://www.uni-klu.ac.at/~gossimit/c/book.htm
நிறைய புத்தகங்கள் உள்ளன.
பரணீதரன்
http://blog.baranee.net
<< Home
|