Sunday, March 06, 2005

 

Hot Hot Linares !!

கேஸ்பரோவ் +2 லீடிங்ல இருக்கார், அவருக்கு அடுத்து இருக்கறது நம்ப ஆனந்த். கேஸ்பரோவ் ஏதோ ஒரு முடிவோடத்தான் விளையாடற மாதிரி இருக்கு, அடி தூள் கிளப்பிண்டு இருக்காரு. இது வரைக்கும் கிட்டத்தட்ட எல்லா ஆட்டத்துலயும் ஒரு நல்ல அட்வான்டேஜ் இருக்கிற பொசிஷன் கொண்டு வந்துட்டார், எப்படித்தான் அவரால இன்னும் ஒப்பனிங்ல இவ்வளவு ஐடியாக்களை அவுத்து விட முடியுதோ தெரியலை!! மனுஷன் முழு form-ல இல்லாத போதே இவ்வளவு forceful-லா விளையாடறாரே, 95 to 99-ல அவர் முழு form-ல இருந்த போது எப்படி இருந்திருப்பாருன்னு நினைச்சே பார்க்க முடியலை. நம்ப படையப்பா படத்துல ஒரு சீன் உண்டு, கடைசில சூப்பர் ஸ்டார் சட்டையெல்லாம் அவுத்துட்டு (!?) ஒரு ஸ்டண்ட் போடுவார், அப்ப அப்பாஸ் "WOW! What a man!?"-னு ஒரு டையலாக் சொல்லுவார். அந்த டையலாக் கேஸ்பரோவுக்கும் நச்சுன்னு suit ஆகும்.

ஆனந்த் என்னமோ தெரியலை, ரிஸ்க் எடுக்க ரொம்ப யோசிக்கிறார். ஆனா, அவரையும் ஒண்ணும் சொல்ல முடியாது, 2786-ல, இன்னும் 14 பாயிண்ட் எடுத்தா 2800 டச் பண்ணிடலாம்னு இருக்கும்போது, யாருக்குமே இருக்கிற ELO-வை தக்க வச்சிக்கணும்னுதான் இருக்கும். ஆனாலும், அவர் Pons Vallejo-வை தோக்கடிக்காம சிம்பிளா ஒரு ட்ரா பண்ணிண்டதை ஒத்துக்கவே முடியலை. நேத்து கஸிம்ஜனோவை தோக்கடிச்சது கொஞ்சம் ஆறுதல். அன்னிக்கு கேஸ்பரோவோட ரொம்ப நல்லா விளையாண்டார், 1995க்கு பிறகு கேஸ்பரோவை ஒரு க்ளாசிக்கல் டைம் கண்ட்ரோலில் தோக்கடிக்க போறார் ஆன்ந்த்துன்னு நினைச்சிண்டு இருக்கும்போதே, கேஸ்பரோவ் ரொம்ப கரெக்ட்டா defend பண்ணி தப்பிச்சுட்டார். ரவுண்ட் 13-ல இவங்க திரும்பி விளையாடணும், என்ன ஆகுதுன்னு பார்ப்போம்.

லீகோ ஒண்ணும் சொல்லிக்கற மாதிரி form-ல இல்லை, ஒரு இரண்டு மூணு தடவை வழக்கம் போல பயங்கரமா defend பண்ணினார். ஒரு ஆட்டம் கூட இன்னும் வின் பண்ணலை, ஆனாலும் வாய் இன்னும் அப்படியேத்தான் இருக்கு :) "ஆனந்த் என்னோட விளையாடும்போது Petroff விளையாடி ட்ரா பண்ணத்தான் பார்க்கறாரு, ஏன்னே தெரியலை!"-னு பேட்டி தந்தாரு அன்னிக்கு! டோப்பலோவ் அன்னிக்கு அவரை தோக்கடிச்சிருக்கணும், மிஸ் பண்ணிட்டார்.

Thx Chessbase

ஆனந்த் போட்டோவை பாருங்க கீழே, லேசா நடு மண்டைல முடி குறைய் ஆரம்பிச்சுருக்கு, கூடிய சீக்கிரம் ஒரு ப்ரொபஸர் look வந்துடும்னு நினைக்கிறேன்.

ஆனந்துக்கு வயசாயிண்டு இருக்கு!
Comments:
இதெல்லாம் நல்லதுக்கில்லை கண்ணன். இத்தனை நாள் ஆச்சா எழுதறதுக்கு. Linares ஆரம்பிச்சாச்சே, இன்னும் ஒரு குறிப்பும் காணுமேன்னு நினைச்சேன். தலைவர் ஆனந்த் இருந்தாலும் கொஞ்சம் aggresive'ஆ ஆடலாம்.
சரி அதை விடுங்க, இந்த கமெண்டு எழுதறதுக்குள்ளே ஒரு பத்து விண்டோ திறக்க வேண்டியிருக்கே, கொஞ்சம் சரி பண்ணுவீங்களா?
- யக்ஞா
 
கொஞ்சம் வேலை சம்பந்தமா வெளியூர் போக வேண்டியிருந்தது, அதுனாலத்தான் எதுவும் போஸ்ட் பண்ண முடியாம போயிடுச்சு (எப்படி இருந்தாலும், பாலோ பண்ணிண்டுதான் இருந்தேன்னு வச்சிக்கோங்க, அது வேற விஷயம்!).

நேர கமெண்ட்ஸ் கொடுக்கற இடத்துக்கு போற மாதிரி பண்ணலாம், ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை, I guess I will schedule this for this weekend! thx for the suggestion.
 
Post a Comment

<< Home
The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?