Saturday, April 23, 2005

 

Sigemen செஸ் டோர்னமெண்ட் & more

சசிகிரண் ரொம்ப நாளைக்கு அப்புறம் கொஞ்சம் நல்ல form-ல இருக்கார். Sigemen-ல அவரும் டிம்மனும் முதல் பொசிஷன்ல இருக்காங்க. அதுவும் ஏழாவது ரவுண்டில் நகமுராவ் - சசிகிரண் ஆட்டம் பயங்கர இண்ட்ரெஸ்டிங். நகமுரா சசிகிரணுக்கு எதிரா என்னமோ என்னை மாதிரி ஒரு patzer-கிட்ட விளையாடற மாதிரி 1) e4 e5 2) Qh5?! விளையாடினாரு. என்னத்தான் shock value-னு எடுத்துண்டாலும், இது கொஞ்சம் ஓவர்தான். அந்த ஆட்டம் சசிகிரண்தான் வின் பண்ணினார். இந்த மாதிரி சர்ப்ரைஸ்லாம் மொரோசெவிச்சுக்குத்தான் கை வந்த கலை. திடீர்னு ஒரு albin counter gambit விளையாடி முன்னாடி இருக்கிறவரை confuse பண்ணிடுவார் (infact, நிறைய தடவை பண்ணிருக்கார்!). நம்ப ஆனந்த் கூட 1995 PCA செஸ் சேம்பியன்ஷிப்பின் போது, கேஸ்ப்பரோவ்க்கு எதிரா Scandinavian விளையாண்டார். அந்த ஆட்டம் கேஸ்பரோவ்தான் வின் பண்ணினார்னு நினைக்கிறேன்.

நேத்து எட்டாவது ரவுண்டில், சசிகிரணுக்கு இன்னுமொரு முழு பாயிண்ட். இந்த தடவை Hillarp-persson-னுக்கு எதிரா. இதுல முக்கியமா சில மூவ்கள் (23) Ne6, 30) Rxe5, 40) Rg8) tactically very sound. இன்னிக்கு டிம்மனோட ஆடணும். இதுல யார் வின் பண்ணறாங்களோ, டைட்டில் அவங்களுக்குத்தான். டிம்மனும் திரும்பி form-க்கு வந்துட்ட மாதிரி இருக்கு. So, இன்னிக்கு ஆட்டம் சரியான tough fight-டா இருக்கும்னு நினைக்கிறேன்.

இப்போத்தான் போன போஸ்ட்டோட டேட்டை பார்த்தேன். கரெக்ட்டா ஒரு மாசம்! இந்த ஒரு மாசத்துல ஏகப்பட்ட விஷயங்கள் நடந்துருக்கு, செஸ்ல. செஸ்பேஸ்ல பார்த்திருப்பிங்க, கேஸ்பரோவை எவனோ ஒருத்தன் அடிச்சது, பிஷர் Iceland-க்கு போனது, Amber tournament-டை ஆனந்த் வின் பண்ணினது, Teimour Radjabov Dos Hermanes வின் பண்ணினது, முக்கியமா கேஸ்பரோவோட பேட்டிகள் (1 & 2). விக்டர் கோர்சனாயோட "My life for chess" சி.டிக்களும் பயங்கர இண்ட்ரெஸ்டிங்கா தெரியுது, செஸ்மேட்கிட்ட விசாரிக்கணும். வந்திருந்தா இதை நிச்சயம் வாங்கலாம்.
Comments:
இந்த ஃபிஷரை பத்தி படிச்சாலே தலை சுத்துது. அவரை பத்தி ஏதோ படம் வருதாமே, வந்தா பார்க்கணும்.
சசிகிரன் கொஞ்ச நாலாவே நல்ல ஃபார்ம்ல இருக்கார், கேட்கவே சந்தோஷமா இருக்கு. ஆனந்துக்கு அப்புறம் யாராவது வாங்கப்பா!
 
Fischer பத்தி படமா? ஏற்கனவே "Searching for Bobby Fischer"-னு ஒரு படம் இருக்கு. ஆனா, அது Josh Waitzkin பத்தின படம். இந்த புது படம் பத்தி ஏதாவது டீடெயில் தெரியுமா?
 
Post a Comment

<< Home
The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?