Wednesday, May 25, 2005
டோப்ப"ஹை"!!
இப்போ FIDE ப்ளான் பண்ணிண்டு இருக்கிற championship மட்டும் ஒழுங்கா நடந்ததுன்னா, யாரு அடுத்து நம்பர் ஒன் அப்படின்னு தெரிஞ்சுடும்! ஆனந்த் இந்த டோர்னமெண்ட்டை வின் பண்ணியே ஆகணும், இல்லைன்னா மத்தவங்கள்லாம் அவரை அப்படியே sideline பண்ணிட்டு போயிண்டே இருப்பாங்க..
செஸ்பேஸ் மேகசின் 105 நேத்து எனக்கு கொரியரில் வந்தது. இந்த தடவை ஆச்சரியமா, செஸ்பேஸ் அந்த மேகசினை ரிலீஸ் பண்ணின மூணாவது நாளே எனக்கு Chess Mate-கிட்ட இருந்து ஒரு மெயில் -- "We will send you your copy of CB magazine 106 today evening. You should be receiving it tommorow evening, at the most"-ன்னு! சொன்ன மாதிரியே கைக்கும் வந்தாச்சு, ஆனா இன்னும் நான் அந்த CD-யை போட்டு பார்க்கலை...ஒவ்வொரு நாளும் hectic-கா போயிண்டு இருக்கு, எப்போடா வீட்டுக்கு போவோம், தூங்குவோம்னுதான் இருக்கு, போற போக்கை பார்த்தா வீட்டுக்கு தூங்கறதுக்கும் பல்லு தேய்க்கறதுக்கும் மட்டும்தான் போவேன்னு நினைக்கிறேன்...At least, இந்த வார சனி, இல்லை ஞாயிறிலாவது இந்த் CD-யை பார்த்தே ஆகணும்.
Tuesday, May 17, 2005
MTel masters & Dasha Tarasova
ஆனந்த் எப்பவும் ஆடம்ஸ்கிட்ட இருந்து ஒரு முழு பாயிண்ட்டை உருவிடுவார், ஆனா இந்த தடவை ஆடம்ஸ் நல்ல ஃபார்ம்ல இருக்கறனால அதுவும் இல்லாம போச்சு! க்ராம்னிக்கும் ஒண்ணும் சூப்பர் ஃபார்ம்ல இல்லை, ஆனா அவரோட technical skills நிஜம்மாவே ரொம்ப இம்ப்ரெஸிவ்! நேத்து போல்கரை ஒரு pawn up-பா இருந்து அவர் தோக்கடிச்சதை பார்த்தபோது, நான் ஒரு மாதிரி பயங்கரமா மோட்டிவேட் ஆகி ஒரு endgame புக்கை எடுத்துண்டு உட்கார்ந்தேன்னா பாருங்க! வழக்கம் போல ஒரு 3 பக்கத்துல அந்த initial enthusiasm ebb out ஆயிடுத்து, அது வேற விஷயம்.

![]() | கேஸ்பரோவோட பேட்டிகள் பத்தி முன்னாடியே ஒரு பதிவுல சொல்லிருந்தேன், லேட்டஸ்ட்டா இன்னும் ஒண்ணு வந்திருக்கு. அவரோட பாலிடிக்ஸ் இண்ட்ரெஸ்ட்ஸ் பத்தி நிறைய சொல்லிருக்கார். இதுல ஒரு இண்ட்ரெஸ்டிங் விஷயம் என்னன்னா, Dasha Tarasova-ன்னு ஒரு லேடியை அவரோட "would-be wife"ன்னு போட்டிருக்கறதுதான்! யாரு இவங்கன்னு ஒரு கூகிள் search பண்ணி பார்த்தேன், ஒண்ணும் கிடைக்கலை. இவங்களை கேஸ்பரோவ் கல்யாணம் பண்ணிக்கப் போறாருன்னா, ஜூலியா என்ன ஆனாங்க? I know, it is none of my business, ஆனாலும் இந்த மாதிரி general knowledge (?!) விஷயமெல்லாம் தெரிஞ்சுக்கலைன்னா தலை வெடிச்சிடும். |
Dasha பத்தி தேடும்போது எனக்கு இன்னொரு interesting link கிடைச்சது:
Why Kramnik Can't Get No Respect as World Chess Champion
Sam Sloan எழுதின ஆர்டிகிள், So, ரொம்ப serious-சா எல்லாம் எடுத்துக்க முடியாது.
Capablanca memorial ஒரு farce மாதிரி ஆயிண்டு இருக்கு. இவான்சுக் என்னமோ சின்ன பசங்களோட ப்ராக்டிஸ் மேட்ச் விளையாடற மாதிரி பாயிண்ட் மேல பாயிண்ட்டா எடுத்துண்டு போயிண்டிருக்கார், மனுஷன் இப்போ 8 ரவுண்டுக்கு அப்புறம் 6.5 பாயிண்ட்ஸ்ல இருக்கார். நல்ல பெர்ஃபார்மன்ஸ்! Good to see Ivanchuk in such a commanding position.
Tuesday, May 10, 2005
யார் Super-GM ?
இந்த Super-GMக்கும், elite-GMக்கும் பார்த்தீங்கன்னா அவ்வளவு ஒண்ணும் வித்தியாசம் இல்லாத மாதிரி இருக்கும், ஆனா, 2700+ கிட்ட ஒரு consistency எதிர்பார்க்கலாம். அதே மாதிரி, நார்மல் ரேட்டட் ப்ளேயர்களுக்கு எதிரா அவங்களோட ப்ளே extraordinary-யா இருக்கும்! உதாரணத்துக்கு, இந்த Ivanchuk - Jobava ஆட்டம்!
Ivanchuk,V (2739) - Jobava,B (2637) [A45]
Capablanca Mem Elite Havana CUB (2), 07.05.2005
1.d4 Nf6 2.Bg5 Ne4 3.Bf4 d5 4.e3 c5 5.Bd3 Nc6 6.Bxe4 dxe4 7.d5 Nb4 8.Nc3 e6 9.d6 Nc6 10.Nge2 f5 11.Nb5 Kf7 12.Nc7 Rb8 13.g4 fxg4 14.Ng3 Nb4 15.a3 Nd5 16.Nxe4 Nxf4 17.exf4 Kg8 18.Qxg4 h5 19.Qg3 b5 20.Rg1 Rh6 21.0-0-0 Kh8 22.Nxc5 b4 23.axb4 Rxb4 24.d7 Rc4 25.N5xe6 1-0
இத்தனைக்கும் Jobava கிட்டத்தட்ட 2650 ப்ளேயர்! Jobava-வுக்கு Trompowsky அவ்வளவு பழக்கம் இல்லைன்னு நினைக்கிறேன், நம்ப சகலகலா வல்லவன் இவான்சுக்கோ எல்லா ஓப்பனிங்லயும் கிங், அடி நிமித்திருப்பார் இந்த ஆட்டத்துல!
|