Friday, December 31, 2004

 

[புத்தகம்] Bobby Fischer goes to war



சமீபத்தில் (அதாவது, நேற்று!) படித்த புத்தகம் Bobby Fischer goes to war. ஒவ்வொரு தடவை சென்னை வரும்பொழுதும் நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க் புத்தக கடைக்கு செல்லுவது வழக்கம். என் அண்ணன் பையனுக்கு ஏதாவது புத்தகம் ஒன்று வாங்கி தரலாம் என்று இந்த தடவை போயிருந்த பொழுதுதான் இந்த பாபி பிஷர் புத்தகத்தை வாங்கினேன். போன தடவையே இதை பார்த்திருந்தாலும், அப்போது வேறு ஒரு புத்தகம் இதை விட படு இன்ட்ரெஸ்டிங்காய் தெரிந்ததால் இதை வாங்காமல் விட்டு வந்திருந்தேன். இப்புத்தகம் 1972ல் நடந்த போரிஸ் ஸ்பாஸ்கி - பாபி பிஷர் மேட்ச்சினை பற்றியது. பிஷர் வென்ற இந்த மேட்ச்சினை "Match of the century" என்று சிலர் சொல்வர். ஆனால், அந்த அளவுக்கு இதில் ஒன்றுமே இல்லை என்று சொல்பவர்களும் உண்டு. இந்த மேட்சில் ஒரு சில விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை:

1) அது வரை சோவியத் இரஷியாவுக்குள்ளயே சுற்றி வந்துக்கொண்டிருந்த இந்த பட்டத்தை முதன் முதலில் இரஷியர்களிடம் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டு வந்தது பிஷர்தான்.

2) அது கோல்ட் வார் (cold war) நடந்துக் கொண்டிருந்த நேரம். இந்த சேம்பியன்ஷிப்பை ஒரு வகையில் இரு தேசங்களும் நிலம், நீர், ஆகாய மார்க்கங்களை தவிர போர் புரிய மற்றொரு மார்க்கமாகத்தான் கருதின. அதிலும், ஸ்பாஸ்கிக்கு சோவியத் பக்கமிருந்து பயங்கர பிரஷர். அமெரிக்கா அவ்வளவு தூரம் ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை, பிஷரின் பைத்தியக்காரத்தனமான செயல்களும் இதற்கு ஒரு காரணம் என்பது வேறு விஷயம்.

பாபி பிஷர் பயங்கர ஜீனியஸ், ஆனால் ஒரு மாதிரி (கொஞ்சம் டீஸண்ட்டா சொல்லணும்னா) eccentric. கம்யூனிஸம் வெறுமனே கப்ஸா என்பது பிஷரின் எண்ணம். செஸ் போர்ட்டே வாழ்க்கை என்று இருந்தவர் பிஷர் (இப்போ நார்மல் செஸ் தண்டம், fischer randomமே பெஸ்ட் என்று சொல்லி வருகிறார். அதே போல், anti-communismல் இருந்து anti-americaவாக மாறிவிட்டார்!) . 64 கட்டங்களுக்குள் 24 மணி நேரமும் மூழ்கி கிடந்தவர். கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லுகிற மாதிரி தெரிந்தாலும், இதுதான் உண்மை. செஸ்ஸின் intricacies அப்படி. கொஞ்சம் மட்டும் புரிய ஆரம்பிச்சுடுச்சுன்னா செஸ் மாதிரி இன்ட்ரெஸ்டிங் ஆட்டம் கிடையவே கிடையாதுன்னு நீங்களே சொல்லுவீங்க. ஸ்பாஸ்கி அப்படியே பிஷருக்கு நேர் எதிர். அவரும் பயங்கர டேலண்டட் ப்ளேயர். ஆனால், செஸ் போர்ட்டில் நடப்பவை போர்டு தாண்டி வெளியே வரக்கூடாது என்ற கொள்கை கொண்டவர். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், பக்கா ஜென்டில்மேன். பாட்வின்னிக், கோர்சனாய் போன்றவர்கள் "நமக்கு எதிராக விளையாடுபவர்களை விரோதிகளை போல் வெறுக்க வேண்டும், அப்பொழுதுதான் நம்மோட செஸ் திறமை முழுவதும் வெளிவரும்" என்பதில் மிகுந்த நம்பிக்கை உடையவர்கள், ஸ்பாஸ்கியோ யாரையும் வெறுக்கத் தெரியாதவர் (சில இரஷிய அதிகாரிகளை தவிர!).

இருவரும் 24 ஆட்டங்கள் விளையாடினர். இந்த ஆட்டங்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசும் பல புத்தகங்கள் இருந்தாலும், திரை மறைவில் நடந்தவைகளை (chess politics) விளக்கும் புத்தகங்கள் ரொம்பக் கம்மி. இரஷிய ஸ்போர்ட்ஸ் கமிட்டி எப்படி இந்த மேட்சிற்கு ஸ்பாஸ்கியை தயார் பண்ண விரும்பியது, அந்தக் காலக்கட்டங்களில் இரஷிய GMகளின் நிலை என்ன, இரஷியாவில் எப்படி செஸ் ஒரு ideology representativeவாக இருந்தது போன்ற பல விஷயங்கள் பயங்கர இன்ட்ரெஸ்டிங். சில பெருந்தலைகளை (பாட்வின்னிக், தால், கீரஸ், கோர்சனாய், பெட்ரோஷியன்) பற்றிய சில விஷயங்கள் அவர்களை பற்றிய எனது ஒப்பீனியன்களை தலை கீழாக புரட்டிப் போட்டன. கேண்டிடேட் டோர்னமெண்ட்டில் ஆரம்பித்து 1992 யுகோஸ்லாவ் மேட்ச் வரை பலவற்றை இப்புத்தகம் விவரிக்கிறது. பிஷர் அடித்த கூத்துகளை படிக்கும் போது (பல முறை இவைகளை மற்ற வலைத்தளங்களில் படித்திருந்தாலும்) சிரிப்புத்தான் வந்தது, சில நேரம் எரிச்சல் வந்ததும் உண்மை. எப்படித்தான் இவரை சகித்துக்கொண்டு ஸ்பாஸ்கி விளையாடினாரோ, தெரியலை! உதாரணத்திற்கு சில:

- முதலில் இந்த மேட்சிற்கு வர ஒத்துக்கொண்ட பிஷர், திடீரென "எனக்கு இன்னும் பைசா வேணும். இது பத்தாது" என்று சொல்லி வர மறுத்து விட்டார். மேட்ச் அவ்வளவுதான் என்று பலர் நினைக்க தொடங்கிய வேளையில் பிரிட்டிஷ் நாட்டினை சேர்ந்த ஸ்லேட்டர் குறுக்கிட்டு சேம்பியனுக்கான பரிசு தொகையை இரட்டிப்பாக்கினார். ஒரு செஸ் மேட்சில் இவ்வளவு அதிகமான பரிசு தொகை அறிவிக்கப்பட்டது அதுவே முதல் முறை.

- இது போதாதென்று, கேட் பாஸ் தொகையில் 30 சதவீதம் தனக்கு வேண்டுமென்றும் அடம் பிடித்தார் பிஷர். அதே நேரத்தில் ஆடிட்டோரியத்தில் முதல் 7 வரிசைகள் காலியாக இருக்க வேண்டுமென்றும் ஒரு கண்டிஷன் போட்டார்!!

- மேட்ச் ஒப்பனிங் பங்ஷனிற்கு பிஷர் வரவில்லை. பிஷர் இந்த மேட்சிற்கு வருவாரா மாட்டாரா என்றே தெரியாமல் இருந்த நேரம் அது.

- விளையாடும் இடத்தில் கேமிரா இருக்க கூடாது என்று அடம் பிடித்தார் பிஷர். ஒரு ஆட்டத்தை இதனால், ஆடிட்டோரியத்தை விட்டு பின்னால் இருந்த ஒரு சின்ன டேபிள் டென்னிஸ் ரூமில் நடத்துமாறு ஆயிற்று.

- செஸ் போர்ட் வைத்திருந்த டேபிள் பெரிதாக உள்ளது என்றும் அதனை உடனடியாக மாற்றியே தீர வேண்டுமென்று அடம்பிடித்தார். அதுவும் எப்போ? சில ஆட்டங்கள் முடிந்த பிறகு.

பிஷர் போர்ட்டுக்கு வெளியேத்தான் இந்த மாதிரி. போர்டிற்குள் என்ன மாதிரின்னு அவரோட "My 60 memorable games" புத்தகம் படிச்சீங்கன்னா தெரியும்.

Wednesday, December 22, 2004

 

செஸ் டேட்டாபேஸ்

செஸ்ல ஆர்வம் உள்ள எல்லாரும் செஸ்பேஸ் (Chessbase) பற்றி நிச்சயம் கேள்வி பட்டிருப்பாங்க. கிட்டத்தட்ட செஸ் ப்ளேயர்கள் அனைவரும் உபயோகிப்பது செஸ்பேஸ்தான். செஸ் டேட்டாபேஸ்னு பார்த்தா இரண்டு மூணு சாப்ட்வேர்தான் இருக்கு; Chessbase, Chess Assistant இது இரண்டும் கமர்ஷியல் சாப்ட்வேர், இதை தவிர Scidனு ஒரு open sourceம் இருக்கு. செஸ் டேட்டாபேஸ் நம்ப நார்மல் டேட்டாபேஸ் மாதிரிதான் (செஸ் டேட்டாபேஸ் செஸ் ஆட்டங்களை சேமித்து வைத்துக்கொள்ள, அதனை annotate பண்ண, பல ஆட்டங்களை ஒரு opening keyக்கு கீழே தொகுக்க, சேமித்து வைத்த ஆட்டங்களில் நமக்கு தேவையானதை எடுக்க, இந்த மாதிரி விஷயங்களுக்கு உபயோகமாகும்)

Scid முன்னைக்கு இப்போ நல்லாவே powerfulலா ஆயிருக்கு, ஆனாலும் commercial softwareகளை beat பண்ணனும்னா இன்னும் நிறைய features வேணும். செஸ்பேஸ்சுக்கு ஒரே போட்டி செஸ் அசிஸ்டெண்ட்தான். செஸ்பேஸ்தான் இப்போதைக்கு நிறைய வித்துண்டு இருக்கு, முக்கிய காரணம் கேஸ்பரோவ், க்ராம்னிக், ஆனந்த் முதற்கொண்டு ஒரு 2000 ELO ப்ளேயர் கூட இதை உபயோகிப்பதுதான், அட மத்தவங்களை விடுங்க, கேஸ்பரோவ் இதைதான் உபயோகிச்சுண்டிருக்கார்னா பாருங்க. Infact, கேஸ்பரோவ்கிட்ட நிறைய suggestions வாங்கிதான் chessbase 1.0 டெவலப் பண்ணினாங்க. கேஸ்பரோவ் மட்டுமே செஸ்ஸிற்கு கம்ப்யூட்டரை உபயோகித்து கொண்டிருந்த காலம் அது (பாட்வின்னிக்கோட (Botvinnik) ஐடியா. கேஸ்பரோ பாட்வின்னிக்கோட பிரதம சிஷ்யன்). கிட்டத்தட்ட Chessbase 1.0 கேஸ்பரோவின் personal useக்காகவே பண்ணின மாதிரி இருக்கு. செஸ்பேஸ் 9 தான் இப்போதைக்கு latest version.

செஸ் அசிஸ்டெண்ட், Convektaன்னு ஒரு ரஷிய கம்பெனி develop பண்ணுவது. பயங்கர powerful. அப்பிடியே ஜிகு ஜிகுன்னு எதுவும் interfaceலாம் இருக்காது, ஆனா ஒரு 5 மில்லியன் ஆட்டங்கள்ல ஒரு பொசிஷன் தேடறோமுன்னு வச்சிக்கங்க, உடனே நச்சுன்னு ரிசல்ட் காண்பிக்கும். பயங்கர fast. ஏகப்பட்ட features இருக்கு. அதையெல்லாம் கத்துக்கவே ஒரு மாசமாவது பிடிக்கும். வெர்ஷன் 8தான் latest.

செஸ்பேஸ் 9 ல ஒரு சில விஷயங்கள்தான் புதுசு. இதை பத்தி detailedடா இன்னொரு பதிவுல பார்ப்போம்.

Monday, December 20, 2004

 

Puzzle 9


Puzzle 9. White to play & mate.

Puzzle 8 - ஒரு சின்ன விளக்கம்:

Puzzle 8 பொசிஷனில் கறுப்பு இராஜா கொஞ்சம் டேஞ்சர்ல இருக்காரு, கவனிச்சீங்களா? Back Rank mate threat இருக்கு. White இப்போ Rd8+ விளையாடுதுன்னு வச்சிப்போம், Blackனால Re8 விளையாடி இராஜாவை காப்பாற்ற முடியும் (f6ல் இருக்கும் குதிரை ரூக்குக்கு சப்போர்ட்). ஆனா, இப்போ அந்த ரூக் e6ல் இல்லைன்னு வச்சிப்போம், Rd8+ விளையாடி நம்ப c8ல் இருக்கும் bishopபை வெட்டலாம். அதாவது, 1)Rd8+ & 2)Rxc8. ஆக, இப்போ நம்பளோட ப்ளான் கறுப்பு ரூக் e8க்கு வராம தடுக்கணும் என்பதே. இதை மனசுல வச்சிண்டு இப்போ இன்னொரு தடவை போர்ட்டை பாருங்க, automaticகா எது strong moveனு உங்களுக்கே தெரியும்!

Solution: 1) Bc6!! 1-0

ஏன் Black ரிசைன் பண்ணினாரு? வொயிட்டின் இந்த பிஷப் மூவிற்க்கு பின்னால் உள்ள ஐடியா என்னவென்று பாருங்கள். வொயிட்டின் threat 2) Rd8+! இப்போ கறுப்பினால் Re8 விளையாட முடியாது, ஏன்னா வெள்ளை பிஷப் அதை வெட்டி விடும். அதே நேரம், கறுப்பினால் 1)...Rxc6?? விளையாட முடியாது, விளையாடினால், கறுப்பு இராஜாக்கு செக்மேட்தான்!! ( 1...Rxc6?? 2) Rd8+! Ne8 3) Rxe8#)

 

K.Venkatesh: கண்ணீர் அஞ்சலி

25 வயதே ஆன K.வெங்கடேஷ் இந்த மாதம் (டிசம்பர்) 17ஆம் தேதி காலை மரணமடைந்தார். வெங்கடேஷுக்கு Duchenne Muscular Dystrophy (MD) எனப்படும் சதைகளை பாதிக்கும் கொடும் நோய். இந்த Duchenne வகையால் பாதிக்கப்பட்டவர்கள் 30 வயதை தாண்ட மாட்டார்கள் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். கொடுமையான விஷயம்!!! வெங்கடேஷ் ஒரு செஸ் ப்ளேயரும் கூட.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோ நாளையோ என்ற நிலையிலும் வெங்கடேஷ் தனது உறுப்புகளை தானமாக எடுத்துக்கொள்ள சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். உயிருடன் (அதாவது மூளை தன் செயல்திறனை இழப்பது வரை) இருப்பவரிடம் இருந்து உறுப்புகளை எடுக்க சட்டம் இடம் கொடுக்காததால் தன்னை கருணை கொலை செய்யுமாறு சொல்லியுள்ளார்!!! ஆந்திரா அரசு அதை மறுத்துவிடவே மேல்முறையீடும் செய்திருக்கிறார். வெங்கடேஷின் கவலையெல்லாம் வெகு நாட்கள் இயந்திரங்களின் உதவியுடனேயே உறுப்புகள் இயங்கி கொண்டிருந்தால் கெட்டுவிடாமல் இருக்கவேண்டுமே என்பதுதான்! உடனே நம்ப ஆட்கள் ஒரு குழு அமைத்து அதை பற்றி விவாதியோ விவாதின்னு விவாதித்துக்கொண்டிருந்தபோதே MD வெங்கடேஷை விட்டு வைக்கவில்லை. உயிர் பிரிந்தவுடனே அவரின் கண்களை மட்டும் பாதுகாக்க முடிந்ததாம், மற்ற உறுப்புகள் அனைத்தும் வெங்கடேஷ் பயந்தவாறே infect ஆகி பயனில்லாமல் போயிருக்கிறது.

கிட்டத்தட்ட அனைத்து நாட்டிலும் Euthanasia எனப்படும் இந்த கருணைக் கொலை உண்டு. இந்தியாவிலும் இதை ஆதரிக்க ஒரு சட்டம் வேண்டும் என்று இப்பொழுது எல்லாரும் குரல் எழுப்பி உள்ளனர். இது சரியா தவறா என்பதெல்லாம் வேறு விஷயம், ஆனால் வெங்கடேஷ் தனது உறுப்புகளை தானமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று கோர்ட் வரை போனது என்னை ரொம்பவே பாதித்தது!! தனது மகனின் மரணத்தை அருகிலேயே இருந்து ஒரு தாய் பார்ப்பது மாதிரி ஒரு கொடுமையான விஷயம் இருக்கவே முடியாது, வெங்கடேஷின் அம்மாவை என்னவென்று சொல்லி தேற்றுவது?! Deep condolences to K.Venkatesh's family and to all those who knew him.

Other articles on K.Venkatesh & the legal battle

Saturday, December 18, 2004

 

Puzzle 8


Puzzle 8. White to play & win (not mate).

Puzzle 7 சரியான விடை

Thursday, December 16, 2004

 

நேஷனல் 'A' சேம்பியன்ஷிப்

17 ரவுண்ட் முடிஞ்சிருக்கு. S.S.கங்குலியும் சந்தீபன் சந்தாவும் லீடிங்ல இருக்காங்க. தற்போதைய சேம்பியன் S.S.கங்குலி அது வரைக்கும் தோத்து போகாம நல்லா ஆடிண்டு இருந்துட்டு, 15ஆவது ரவுண்ட்ல M.R.வெங்கடேஷ்கிட்ட தோத்து போயிருக்கார். 24ஆவது மூவிலோ 25ஆவதிலோ வெங்கடேஷின் ஏதோ ஒரு மூவ்வை கவனிக்காம விட்டுட்டார்னு Hinduல படிச்சேன். அது என்னன்னு பார்ப்போம்னு games file தேடினா எங்கயுமே காணும்!!! அட, liveவா காண்ப்பிக்கலைன்னா கூட பரவாயில்லை, ஒவ்வொரு நாள் ஆட்டங்களையும் PGNனா தொகுத்து கொடுக்கலாம்ல?!!

 

Puzzle 7


Puzzle 7. White to play and mate.

முந்தின புதிருக்கான விடை:

1.Rc8 Rxc8 [ 1...Bxc8 2.Qxd8#] 2.Rxc8 Kd7 [ 2...Bxc8 3.Qxd8#; 2...Qxc8 3.Qe7#] 3.Rxd8+ Rxd8 4.Qxd8+ Kc6+-

Monday, December 13, 2004

 

செஸ் anecdotes

சமீபத்தில் முடிந்த ரஷியன் சேம்பியன்ஷிப் பற்றின interesting ரிப்போர்ட்கள்:


இந்த மாதிரி ரிப்போர்ட்களில் என்ன ஒரு interesting விஷயம்னா உங்ளோட பேவரைட் ப்ளேயரை பற்றி நிறைய தெரிந்துக்கொள்ளலாம். கேஸ்பரோவ் ஆட ஆரம்பிப்பதற்கு முன்னால் இரண்டு விஷயங்கள் தவறாமல் செய்வாராம்: Watchசை கழட்டி டேபிளில் வைப்பது ஒன்று, தனது காய்களை சரியாக centre of squareல் அட்ஜஸ்ட் பண்ணுவது இரண்டாவது! இந்த மாதிரி விஷயமெல்லாம் அங்க நீங்க நேரே இருந்தா ம்ட்டும்தான் கவனிக்க முடியும். அதே மாதிரி கேஸ்பரோவ் கைக்கடிகாரத்தை எடுத்து கட்டிண்டுட்டாருன்னா, ஒண்ணு opponent இன்னும் கொஞ்சம் நேரத்துல resign பண்ண போறாருன்னு அர்த்தம், இல்லை இனிமேல் ஆடறதுக்கு ஒண்ணும் இல்லை, ட்ராதான்னு அர்த்தமாம்! இது நிஜமான்னு எனக்கு தெரியாது, ஒரு websiteல படிச்சது, ஆனா பயங்கர interesting.

Granda Zunigaன்னு Peru நாட்டை சேர்ந்த ப்ளேயர் ஒருத்தர் இருக்கார். அவரு ஒரு பயங்கர natural talent. திடீர்னு நடுவுல ஒரு இரண்டு வருஷம் விளையாடாம இருந்துட்டு திரும்பி 2001லயோ என்னமோதான் விளையாட ஆரம்பிச்சார். வந்தவுடனே Peru நேஷனல் சேம்பியன்ஷிப் ஜெயிச்சாரு. அவரை பத்தி நிறைய interesting anecdotes உண்டு. அவர் ஒப்பனிங்குக்கு அப்படீன்னு ஒண்ணும் ஸ்பெஷலா ப்ரிப்பேர் பண்ண மாட்டார், so, எப்பவுமே ஒப்பனிங் கொஞ்சம் தடவி தடவிதான் விளையாடுவார், ஆனா once ஒப்பனிங் தாண்டினவுடனே மனுஷன் பயங்கர ஸ்ட்ராங். ஒரு நாள் ஏதோ ஒரு டோர்னமெண்ட்டில் ஒரு ஆட்டம் ஆடுவதற்கு முன்னால், காரில் போய்கொண்டிருக்கும் போது அவரோட வந்துக்கொண்டிருந்த மேட்ச் refereeயிடம் "என்னோட இன்னிக்கு விளையாட போறவர் e4 ஒப்பனிங் விளையாடறவரா, இல்லை d4 விளையாடறவரா"ன்னு கேட்டராம். This probably didn't happen, ஆனா interestingகா இருக்கா இல்லையா? :) (ok, ok, I know I am an incorrigible gossip :p)

ஒரு காலத்துல வெறித்தனமா இந்த மாதிரி டீடெய்ல்ஸ்லாம் நிறைய collect பண்ணினேன். உங்களுக்கும் இந்த மாதிரி anecdotes ஏதாவது தெரியும்னா, please, எனக்கு அனுப்புங்க.

Sunday, December 12, 2004

 

செஸ் உலகம், இந்த வாரம்!

ஹிகாரு நகமுராவும் செர்ஜி கர்யாகினும் மெக்சிகோவில், ஆறு ஆட்டங்கள் கொண்ட மேட்ச் ஒன்று விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இது வரை மூன்று ஆட்டங்கள் முடிந்துள்ளது. நகமுரா 2 ஆட்டங்களும், கர்யாகின் 1 ஆட்டமும் ஜெயிச்சுருக்காங்க. முதல் ஆட்டம் ட்ராலதான் முடிஞ்சிருக்கணும், ஆனா திடீர்னு initiative form பண்ணி நகமுரா முழு பாயிண்ட்டை அள்ளிண்டுட்டார். இரண்டாவது ஆட்டத்தில், நகமுரா centre counter விளையாண்டார். இது இவ்வளவு high levelல விளையாடற opening கிடையாது, generally considered an unsound thing. ஆனா என்னோட levelல இந்த மாதிரி ஒப்பனிங்லாம்தான் நல்ல chances கொடுக்கும். பயங்கர informative game. மூணாவது ஆட்டத்தில் நகமுரா தேவையில்லாம ரொம்ப passiveவா விளையாண்ட மாதிரி இருந்தது. So கர்யாகின் கொஞ்சம் கொஞ்சமா நகமுராக்கு pressure கூட்டிண்டே வந்து கடைசில நகமுராவை ரிசைன் பண்ண வைத்தார்.

ரஷியன் finalsல் விளையாடாம ஒதுங்கிண்ட கார்ப்போவ் க்ராண்ட் ப்ரீ டோர்னமெண்ட் ஒன்றில் விளையாடினார். அவர்தான் டோர்னமெண்ட் வின்னர். அவரோட விளையாண்டவங்க கொஞ்சம் வீக்தான். Kostenuikகும் Stefanovaவும் முதல் ரவுண்டிலேயே அவுட். வர வர கார்ப்போவ் வெறுமனே பைசாவுக்கு மட்டுமே விளையாடற மாதிரி இருக்கு..ஆனா, அவர் சாதிக்கறதுக்கு இன்னமும் எதுவும் இல்லை, so அவர் பண்ணறதுல எதுவும் தப்பு இல்லைன்னுதான் நினைக்கிறேன். 1970-1995 வரைக்கும் அவர் one of the most feared opponents. இப்பவும், இவ்வளவு வருஷங்களுக்கு அப்புறமும் அவர் அதே மாதிரி விளையாடுவார்னு எதிர்பார்க்கறது தப்பு.

டிசம்பர் 11 ஆனந்த்தோட 35வது பிறந்த நாள். (இதை chesstoday issue மூலம்தான் நான் தெரிஞ்சுண்டேன். நம்ப AICF ஒரு மண்ணும் பண்ணின மாதிரி தெரியலை!). Chess Oscar 2003 வின் பண்ணினது ஆனந்துதான். இந்த வருஷமும் அவர் ஜெயிக்கறதுக்கு நிறைய வாய்ப்பிருக்கு. ACP Tour ரேட்டிங்கிலும் ஆனந்த்தான் லீடிங். ஜனவரியில் நடைபெற இருக்கும் Corus டோர்னமெண்ட்டை ஜெயிக்கவும் ஆனந்துதான் favorite! என்ன ஒரு கலக்கல் records!!?? இவ்வளவையும் ஒரு ஒழுங்கான coach கூட இல்லாம ஆரம்பிச்ச ஆனந்த சாதிச்சிருக்காருன்னா அவரோட talent levelலை பாருங்க!!! Masters of Doom புத்தகத்தில் சொல்லுவது போல், ஆனந்தை நேரே பார்த்தா "We are not worthy! We are not worthy!" ன்னுதான் நான் புலம்புவேன்னு நினைக்கிறேன்..! (கேஸ்பரோவ்வையோ இவான்சுக்கையோ நேரே பார்த்தேன்னா அந்த சந்தோஷத்தில் straightடா மயக்கம்தான்!!)


Thursday, December 09, 2004

 

குறுக்கு வழி??

இந்த 1500-1900ELO ரேஞ்ச்ல இருக்கிறது ஒரு பெரிய கடி. ஒப்பனிங்லாம் நல்லா விளையாடியாச்சு, எல்லா காய்களையும் வெளியே கொண்டு வந்தாச்சு, இது வரைக்கும் ஒரு காயையும் வெட்டுகொடுத்துடலை, எல்லாமே நல்லா போயிட்டு இருக்குன்னு சந்தோஷப்படும்போதுதான் திடீர்னு opponent ஒரு 3 மூவ் காம்பினேஷன்ல உங்க இராணியை வெட்டுவார். அப்போ என்னடா இழவு இதுன்னு ஒரு எரிச்சல் வரும் பாருங்க, ரொம்ப கொடுமை. இந்த மாதிரி தோக்கற ஒவ்வொரு தடவையும் யாராவது உங்களுக்கு ஒரு ரூபா கொடுக்க்றாங்கன்னு வச்சிப்போம், நான் இந்நேரம் at least ஒரு லட்சாதிபதியாவது ஆயிருப்பேன் :)

சோகத்தை மறக்க தண்ணியடிக்கிற மாதிரி, கேவலமா தோத்தவுடனே Landmark போய் ஒரு செஸ் புக் வாங்கிண்டு வந்துடுவேன். என்னமோ அந்த புக்கை படிச்சவுடனே நான் செஸ்ல பெரியா ஆளாயிடற மாதிரி! இப்போ நூறுக்கு மேலே செஸ் புத்தகங்கள் சேர்ந்ததுதான் மிச்சம். :( என்னோட ஆட்டம் முன்னாடி இருந்ததுக்கு இப்போ நல்ல இம்ப்ரூவ் ஆயிருக்குன்னாலும், ஒரு consitency இல்லாம இருக்கு! உதாரணத்துக்கு, கேஸ்பரோவ் ஒரு ஆட்டம் கேஸ்பரோவ் மாதிரியும், இன்னொரு ஆட்டம் என்னைய மாதிரி கேவலமாகவும் விளையாடறார்னா எப்படி இருக்கும்?!! அந்த நிலைமையில்தான் நான் இருக்கேன. எல்லா sub-2000 ப்ளேயர்களும் நான் சொல்லுவதை ஒரு தடவையாவது உணர்ந்திருப்பாங்க! (நான் கேஸ்பரோவை ஒரு உதாரணத்துக்குத்தான் சொன்னேன், நான் கேஸ்பரோ மாதிரின்னு எல்லாம் சொல்ல ட்ரை பண்ணலை!!)

Michael De La Mazaன்னு ஒருத்தர் 1400 ரேட்டிங்ல இருந்து 2000+ க்கு improve ஆனதை "Rapid Chess Improvement"னு ஒரு புக்கா எழுதினார். புக்ல எதுவும் புதுசா சொல்லலை. தினமும் ஒரு இரண்டு மணி நேரம் tacticsல வொர்க் பண்ணுங்கன்றதைதான் அவர் நீட்டி முழக்கி சொன்னார். ஆனா அதுக்கு ஒரு பயிற்சி முறை சொல்லிருக்கார். இதுக்கு போய் ஒரு 800 ரூபாய் செலவழிக்கணுமான்னு இருக்கு. ஜெரேமி சில்மான் இந்த புக்கை கிழி கிழின்னு கிழிச்சுட்டார், ஒரு வேளை De la Maza இவரோட புக்கை ("How to reassess your chess") வேஸ்ட்டுன்னு சொன்ன கோபமா இருக்கலாம். Rapid Chess improvementனு இந்த புக் சொன்னாலும், குறைஞ்சது ஒரு வருஷமாவது tacticsல concentrate பண்ண வேண்டியிருக்கும். குறுக்கு வழியெல்லாம் எதுவும் கிடையாது. ஒரு வருஷம், டெய்லி இரண்டு மணி நேரம்......தவறாம இந்த schedule follow பண்ண முடியும்னு தோணலை!!

Wednesday, December 08, 2004

 

ரவுண்ட் அப்

எதிர்பார்த்த மாதிரியே இந்த தடவை U.S Championship ஜெயிச்சது ஹிகாரு நகமுராதான் (Hikaru Nakamura). 16 வயசுதான். நல்ல திறமையான ப்ளேயர். ஆனா, வாய்தான் கொஞ்சம் அதிகம் :) ஹிகாரு யாரோடயும் சேர்ந்து practice பண்ண மாட்டார். ஏன் அப்படின்னு ஒரு பேட்டில கேட்ட போது "இப்போ இருக்கிற top U.S GMs எல்லாரும் வேற வேற countryல இருந்து இங்க வந்து settle ஆனவங்க. அவங்களோட ப்ராக்டிஸ் பண்ணினா அவங்க என்னோட preparationsலாம் வெளியே சொல்ல மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?"னு சொன்னது, கொஞ்சம் இல்லை, ரொம்பவே ஒவர். இந்த மாதிரி மத்த strong GMsசோட work பண்ண மாட்டேன்னு இருந்தா 2700 க்ராஸ் பண்ணறது கஷ்டம்தான். ஆனா, தனியா prepare பண்ணியே 2650+ க்ராஸ் பண்ணிருக்காருன்னா....கலக்கல்தான்! காம்ஸ்கி திரும்பி விளையாட வந்தது பெரிய நியூஸ், ஆனா அவர் ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி எதுவும் பண்ணலை. அடுத்து வேற எங்கயாவது விளையாடறதுக்கு இதை ஒரு ப்ராக்டிஸ் டோர்னமெண்ட்டாத்தான் எடுத்துண்டு இருக்காருன்னு நினைக்கிறேன்.

நம்ப ஊர் ஹரிகிருஷ்ணா World Junior Championship ஜெயிச்சுருக்கார் . டோர்னமெண்ட் முழுக்க பயங்கர solidடா விளையாடினதை பார்க்கும்போது, 2700க்கு மேலே போறதுக்கு இன்னொரு ப்ளேயரும் இருக்காருன்னு சந்தோஷமா இருக்கு. ஆனா, சசிகிரண் மாதிரி ஹரியும் 2650ல போய் முட்டி நின்னுட கூடாது. 2650க்கு மேலே ஒவ்வொரு பாயிண்டும் எடுக்கறது பயங்கர கஷ்டம்தான், முன்ன மாதிரி வாய்ப்புக்களும் கிடையாதுதான், ஆனாலும், 2650க்கு மேலே இரண்டு பேர்தான் இந்தியர்ன்றது மாறினதுன்னா நல்லா இருக்கும்! கொனெரு ஹம்பி ஆண்கள் பிரிவுல விளையாடினது நல்ல விஷயம், ஆனா தர்ம அடி வாங்கினது நல்லா இல்லை. ஹம்பி ஒரு மாதிரி saturate ஆயிட்டாங்கன்னுதான் எனக்கு தோணுது.

Friday, December 03, 2004

 

Puzzle 6


Puzzle 6. White to move and win.

Puzzle 5க்கான சரியான விடை. பரணீதரன், கலக்கறீங்க!

Wednesday, December 01, 2004

 

Puzzle 5


Puzzle 5. White to play and mate.

முந்தின Puzzleன் விடை: Puzzle 4க்கான பின்னூட்டத்தை பாருங்க. MK கரெக்ட்டான விடையை கொடுத்திருக்கிறார்.

 

ரோகிணி பாவம்!

இந்த மாதம் (டிசம்பர்) பலன்களை பார்க்கும் ஆவல் திடீர்னு வந்ததால், யாஹு Astrology பக்கம் போனேன். ரிஷபத்துக்கு ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி போடலை. சரி, நம்பாட்கள் என்ன சொல்லுறாங்கன்னு பார்ப்போம்னு சக்தி விகடனின் பலன்கள் பக்கம் போனேன். "தெளிவு பிறக்கும்!"ன்னு தலைப்பை பார்த்தவுடனேயே, இதை இதைதான் எதிர்பார்த்தேன்னு கொஞ்சம் enthu வந்தது. இந்த குரு, சனி எல்லாரும் இந்த மாசம் எனக்கு ரொம்ப உதவி செய்யறாங்களாம். என்னுடைய பராக்கிரமம் (?!) வெளிப்படுமாம், அதே மாதிரி "அலுவலக ஊழியர்கள் பதவி உயர்வு காண்பர்"னவுடனே ஒரே சந்தோஷம். என்னமோ என்னோட 2nd level manager என்னைய கூப்பிட்டு உடனே 1st level manager ஆக்கற மாதிரி கனவெல்லாம் வர ஆரம்பிச்சுடுச்சு. நான் ஓவரா பல்லை காண்பிச்சது ஜோதிஷபூஷணம் வே.லட்சுமணனுக்கே பொறுக்கலைன்னு நினைக்கிறேன், "ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கொஞ்சம் கம்மியாத்தான் பலன்கள் கிட்டும்"னு கடைசில ஒரு குண்டை தூக்கி போட்டார்...ஆஆஆஆஆஆ!! இவ்வளவு நேரமும் அது நடக்கும், இது நடக்கும்னு கண்ட கனவெல்லாம் வேஸ்ட்!! ஆனாலும் இது ரொம்ப அநியாயம்! ரோகிணி மட்டும் என்னங்க பாவம் பண்ணிச்சு?

ஆனா, பெரியவர் சொல்றார், அதனால இந்த மாசம் கொஞ்சம் அடக்கி வாசிக்கறதுன்னு இருக்கேன். ஒவ்வொரு வாரமும் அஞ்சு படமாவது பார்க்கணும்ன்ற policyக்குதான் முதல்ல வேட்டு (இப்போ 3 மட்டுமே அலோவ்ட்!). ஒரு Maxtor 300GB external hard disk வாங்கலாம்னு ஐடியா வச்சிருந்தேன், ம்ஹூம், அடுத்த மாசம் பார்த்துக்கலாம். Office டைம்ல அடிக்கிற O.Bயையும் கொஞ்சம் குறைக்கணும். ஏற்கனவே செஸ் புத்தகங்களுக்கு நிறைய்ய்ய்ய போன மாசம் செலவழிச்சுட்டேன், அதுனால இந்த மாசம் அதுவும் பாதியா கட்!

பி.கு 1 : செஸ் பற்றின வலை பூவில் "என்னடா இது சம்பந்தமே இல்லாம?"ன்னு நினைச்சீங்கன்னா, முந்தின பத்தியின் கடைசி வரியை திரும்பி படிக்கவும்! :)

பி.கு 2 : இன்னும் Astrology Zoneல என்ன போடறான்னு பார்க்கலை. பார்க்கணும்!

பி.கு 3 : என்னோட ரோகிணிக்கும், நம்ப "மகளிர் மட்டும்" ரோஹிணிக்கும சம்பந்தமே இல்லைங்க.



The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?